ஸதாசிவப்ரம்மேப்யோ நம:
October 3rd 1904 – He Came…
March 7th 1996 – He left is mortal coil…
Being Sri Maha Periyava’s Purvaashrama brother, having lived around the vicinity of Sri Maha Periyava for many years, there was absolutely no self proclamation from Sri SAR…
பாக்யசாலிகளால் அறிந்து தரிசிக்கப்படுபவர் துறவி
BHAGIYASAALIGALLAAL ARINDHU DHARISIKKAPPADUBAVAR THURAVI
– Sri Sivan SAR –
HE continues to live with us through HIS INFINITE WISDOM – Yenipadigalil Mandhargal (YPM)… One who partakes of this relationship with Sri SAR is on the way to wisdom!
Come, Participate And Seek His Blessings on the auspicious occasion of Sri Sivan SAR Jayanthi Mahotsavam on Wednesday, October 7th 2015.
Abishekam in the morning at Sri Meenakshi Kalyana Mandapam – T Nagar, Chennai and special programme in the evening at “Infosys Hall”, Ramakrishna Mission Matric School – T Nagar, Chennai.
Click HERE For More Information.
Contact information: 96000 15230 / 98402 19314 | Email : sivansarthunai@gmail.com
Mahan Sivan saar ThiruvadigaLe CharaNam! Maha Periyava ThiruvadigaLe CharaNam! Hara Hara Shankara, Jaya Jaya Shankara!
பாக்யசாலிகளால் அறிந்து தரிசிக்கப்படுபவர் துறவி – ஸ்ரீ சிவன் சார்
ஸ்ரீ சார் ஞானி, துறவி என்பதில் யாருக்குத் தான் ஐயம் இருக்க முடியும்? ஐயனின் இளவல் ஆயிற்றே…பரம்பரையே தியாக, துறவுப் பரம்பரை தானே?
ஆனால், எங்களுக்கும் தரிசனம் தந்து எங்களையும் பாக்யசாலிகள் ஆக்குவதில் தான் அவர்கள் தாய்க் கருணை மிளிர்கிறது.
என்னென்னவோ காரணங்களால், சென்னை வந்து ஜயந்தி வைபவங்களில் கலந்து கொள்ளமுடியாதவர் கூட கிஞ்சித்தும் ஏக்கம் கொள்ளக் கூடாது என்றுதான் வலைத் தளம் வழியாக வந்தாரோ? யாருக்குத் தான் தெரியும்? இவர் மகிமை.
நேரடி ஒலி/ஒளிபரப்பு காலை மற்றும் மாலை இரு நேரங்களிலும் வெகு நேர்த்தியாக…
ஒன்றே ஒன்று தான் சொல்லத் தோன்றுகிறது.
அந்த சிவனுக்கும், இந்த சிவனுக்கும் என்ன வித்யாசம்?
அந்த சிவன் – நாம் அவரைத் தேடித் தேடி போகவேணும். ஓடி ஒளிந்து கண்ணாமூச்சி ஆடுவார் அவர்.
இந்த சிவன் – நாம் அவரைத் தேடியெல்லாம் சிரமப் படவேண்டாம். மனத்தில் ஒருக்கணம் ஸ்மாரித்தாலே போதும். நம் இல்லம், உள்ளம் தேடி வருவார். எங்கள் இல்லங்களையும் கயிலாயம் ஆக்கிய பூலோக சிவன் இவர்.
சிவ சாகரத்தில் சில துளிகள் – துளிகள் மட்டும் அல்ல, துடுப்புகள் இவை. இவையே போதும், பவசாகரத்தில் பல துளிகள், அலைகள், ஆழங்கள் அனைத்தில் இருந்தும் மீண்டு புறப்படுவதற்கு.
ஏற்பாட்டாளர்கள் அனைவருக்கும் – ஸ்ரீ சிவராமன் அண்ணா, ஸ்ரீ சுப்புணி மாமா, ஸ்ரீ அனந்தராமன் அண்ணா, ஸ்ரீ ரமணன் மாமா, ஸ்ரீ கணேச சர்மா மற்றும் ஸ்ரீ சார் அடியார்கள் அனைவருக்கும் கோடி கோடி வந்தனங்கள். என்ன கைமாறும் செய்யப் படமுடியாத பேருதவி…
ஸதாசிவ ப்ரம்மேப்யோ நம:
சிவன் சார் திருவடிகளே சரணம்