காசி யாத்திரை எல்லாம் மிக நன்றாக தான் நடந்து கொண்டு இருந்தது. ஒரு கையில் குடை; மறு கையில் தடி, யாத்திரா தான பை; மாப்பிள்ளை மிடுக்குடன் எ.வி.யம் ராஜேஸ்வரி கல்யாண மண்டபத்தில் அமெரிக்க மாப்பிள்ளை புடை சூழ நடந்து வந்து கொண்டிருந்தார். சுற்றிலும் ஒரே குதூகலம்! எல்லாம் ஒரு ஷணம் தான்..
குடை பறந்தது; கை தடி விழுந்தது. பதறினான், கதறினான், ஓடி வந்து அங்கு ஒரு மூலையில் பிச்சைகாரர்களுக்கு மத்தியில் அமர்ந்து கொண்டிருந்த அப்பெரியவர் காலில் விழுந்தான் அந்த மாப்பிள்ளை!
எதுவுமே நடவாவது போல் அப்பெரியவர் எழுந்திருந்தார். அவனை ஆசுவாசப் படுத்தினார். மண்டபத்திற்கு உள்ளே சென்று கல்யாணத்தை நல்ல படியாக முடிக்க வேண்டும் என்று அவனுக்கு உத்திரவிட்டார். நடந்தது இது தான்!
ஶ்ரீ சிவன் சார் மாப்பிள்ளையின் வேண்டுகோளுக்கு இணங்கி கல்யாணத்திற்கு வந்திருந்தார். பெரிய இடத்து கல்யாண பந்தோபஸ்திற்கு வந்திருந்த போலிஸ்காரர்கள் ஶ்ரீ சிவன் சாரை அறியாமல் அவர் தோற்றதைக் கண்டு அவரை அங்கு அமர்ந்திருந்த பிச்சைக்காரர்களுடன் அமர்த்தி விட்டனர். தன்னையும் துறந்த துறவிக்கு, பணக்காரனும் பிச்சைகாரனும் ஒன்று தானே? ஆதலால் அமர்த்திய இடத்தில் அமர்ந்தது சிவம்!
பின்னொரு நாளில் தன்னுடைய சிஷ்யனிடம் இதைப் பற்றி கூறும் பொழுது, “எனக்கு பா, உள்ளுக்குள்ள வி.ஐ.பி Row-ல உட்கார்ந்திருந்ததும் வெளியல பிச்சைக்காரன் கூட உட்கார்ந்திருந்ததும் ஒரே மாதிரி தான் இருந்தது” என்றது சிவம்.
தன்னையும் துறந்த ஶ்ரீ சிவன் சார் அவர்களின் ஜெயந்தி மஹோத்சவம் 25th September 2016, ஞாயிறு மாலை 6:00 மணிக்கு “Infosys Hall”, Ramakrishna Mission School, Bazulla Road, T Nagar-யில் நடைபெற உள்ளது.
வில்லின் வேந்தர் ஶ்ரீ சுப்பு ஆறுமுகம் “சிவ சாகரம்” என்ற தலைப்பில் ஶ்ரீ சிவன் சாரைப் பற்றி வில்லு பாட்டு நிகழ்ச்சி நடத்த உள்ளார். அன்பர்கள் அனைவரும் ஶ்ரீ சிவன் சார் அவர்களின் ஜெயந்தி மஹோத்சவத்தில் கலந்து கொண்டு ஶ்ரீ சிவன் சாரின் அருளுக்கு பாத்திரமாகவும்.
Sivan Sar ThiruvadigaLe CharaNam! Maha Periyava ThiruvadigaLe CharaNam! Hara Hara Shankara, Jaya Jaya Shankara!
Mahaperiyava blessing and Sri Sivan Sar Blessing,
am very blesssed to come and i pray Siva Sar to attend the Mahotsavam on 25/09/2016
Regards
Sundaram Jayaraman (A) Visu
Vipinam Bavanam means oru kadum sari oru aranmanaium sari does not make any difference to Kamakshi Kadakshitha Purushaha reference Aarya sadakam. Sar lived with us in a very very very simple human, But He is Brahmam. Let us Pray Sar to be with His shadow always specially on Jayanthi Day.
Sri sivan sar charanam Periyava thiruvadi charanam,
Enna oru karuni elimi adiyen namaskaram to maha periava