வேண்டாம் என்பதே குருவிற்கு அழகு, வேண்டும் என்பதே சிஷ்யருக்கு அழகு. எந்த குரு அல்லது தெய்வம் தனக்குப் பெரிய கோவில், பூஜை, நைவேத்யம், தேர், திருவிழா எல்லாம் கேட்டது? ஆனால் எல்லாம் இருக்கிறதே என்றால் அது தான் பக்தியின் வெளிபாடு. பக்தனின் ஆராக் காதல், இப்படி செய்வதெல்லாம் ஏதோ ஆடம்பரமோ, விளம்பரமோ அல்ல. யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் என்ற உயர்ந்த சிந்தனையின் வெளிப்பாடுதான் அவையனைத்தும். அதுதானே நம் பாரதத் திருநாட்டின் பாரம்பரிய கலாசாரம் ?
இதை மனதில் சரியான அர்த்தத்தில் புரிந்து கொண்டு, உலகமே அறிய வேண்டிய தூய துறவின் எல்லையான ஸ்ரீ சிவன் சார் நினைவை, மஹிமையை நினைவுபடுத்தும் வண்ணம் ஏதாவது செய்ய அவர்தம் சீடர்களும் மற்றவர்களும் கடமைப்பட்டுள்ளனர். ஏன் கடனே பட்டுள்ளனர் எனலாம்.
இந்த நன்றி உணர்வை சாரும் விரும்பி அருள்வார் என்பதில் சந்தேகம் இல்லை.
சத்குரு ஸ்ரீ சிவன் சார் ஆராதனை மார்ச் 14-ஆம் நாள் நடைபெற உள்ளது. அனைவரும் வருக, குருவருள் பெறுக!
தெளிவு குருவின் திருமேனி காண்டல்
தெளிவு குருவின் திருநாமம் செப்பல்
தெளிவு குருவின் திருவார்த்தை கேட்டல்
தெளிவு குருஉரு சிந்தித்தல் தானே
திருமேனி காண,
திருநாமம் செப்ப,
திருவார்த்தை கேட்க,
திருவுரு சிந்திக்க
ஏற்றதொரு தருணம்.
வாரீர் சகத்தோரே …
Pranams to Sri Sri Sivan Sar. Janakiraman. Nagapattinam
JAI GURUDEV. JAI SIVAN SAR.