அடிக்கடி பலரும் நம்மிடம் வருந்திச் சொல்லும் வார்த்தைகள்.. ” அமெரிக்காவில் பிள்ளை, பொண்ணு இருக்கா.. நாங்க மட்டும் இங்க இருக்கோம்.. தனியா இருக்கவே கஷ்டமா இருக்கு”…
1991 ம் வருஷம்…
ஸத்குரு ஸ்ரீசிவன் சார் அவர்களுடன் ஆரூரன் தங்கியிருந்த போது.. ஒருநாள்..
அரையிருட்டில்.. தனிமையில் ஸ்ரீசார் தன்மயமாக அமர்ந்திருந்தார்..
அப்போது, ஒரு பெரிய குடும்பத்தைச் சேர்ந்த NRI இளைஞன் ஸ்ரீசாரை தர்சனம் செய்து கொள்ள வந்தான்.. அருகில் சென்று நமஸ்கரித்துவிட்டு அமர்ந்து கொண்டான்..
அமைதியான அந்தச் சூழ்நிலையில் ஸ்ரீசாரிடம் ஏதோ கேட்க வேண்டுமென்று முயன்றான்… வார்த்தை வராமல் தவித்தான்..
இப்படியே அரைமணி ஆயிற்று.. அவன் என்ன சொல்ல நினைக்கிறான் என்று கேட்க உத்தரவாயிற்று..
தயங்கியபடியே.. “SAR, How do you cope with Loneliness ?” என்று ஸ்ரீசாரிடம் மிகுந்த ஆச்சர்யத்துடன் கேட்டான் அந்த இளைஞன்..
ஸ்ரீசார்…சற்று நேரம் மௌனமாக இருந்துவிட்டு ஆரூரனிடம்..
” இவர் கேட்ட கேள்வி ரொம்பவே முக்யமானது.. அப்படியே உன் டைரியில் இவர் என்னிடம் இன்னிக்கு இப்படி கேட்டார்னு குறிச்சுக்கோ” என்றார்கள்…
அந்தப் பையனைத் திரும்பி தீர்க்கமாகப் பார்த்து விட்டு மௌனமாக அபயம் காட்டினார்கள்..
சட்டென்று எழுந்தவன், அழுதபடியே வணங்கி நமஸ்கரித்து “பதில் கிடைச்சது” என்று சொல்லிவிட்டு போய்விட்டான்…
“அவனுக்கு என்ன சார் புரிஞ்சுது ?”என்று கேட்டேன்.. ” நான் ஸித்தியான பிறகு… பிற்காலத்தில் .. இப்போ நம்ப சார் இல்லையேன்னு மனசுக்குள் தோணும்போது உனக்கும் புரியும் .. இப்போ உன் கார்யத்தைப் பார்” என்று மட்டும் சொன்னார்கள்…

Photo Courtesy: Thiruvengadu Adistanam of the 57th Peetadhipati of Shri Kanchi Kamakoti Peetam Sri Paramasivendra Saraswati II
( ஸ்ரீசார் அவர்களின் திருவார்த்தைகளை சற்று தொலைவில் இருந்தபடி ஒரு டைரியில் பதிவு செய்து வருவது மற்ற சிஷ்யர்கள் ஆரூரனுக்கு இட்ட பணி.. ஸ்ரீசாரை தர்சனம் பண்ண வரும்போது டைரியை வாங்கிப் படித்து அன்றாடம் அங்கு நடந்த அதிசய சம்பவங்களையும், ஸத்குருவின் திருவார்த்தைகளையும் அறிந்து கொண்டு, ஸ்ரீசாரிடம் மேல் விஷயங்களைக் கேட்டறிந்து தெளிவார்கள். )
இன்று காலை.. பழைய டைரிக் குறிப்பு கண்ணில் பட்டது… பகிர்ந்து கொண்டோம்..
Article Courtesy: Sri Ganapathi Subramanian – Auditor in Karaikal. Sri Sivan Sar once said, “Arooran en adimai” – He is such a blessed devotee of Sri Sivan SAR and Sri MahaPeriyava.
Here a small video snippet of Sri Ganapathi Subramanian reminiscing about Sri SAR.
NOTE: The audio quality may not be upto par.
“அவனுக்கு என்ன சார் புரிஞ்சுது ?”என்று கேட்டேன்.. ” நான் ஸித்தியான பிறகு… பிற்காலத்தில் .. இப்போ நம்ப சார் இல்லையேன்னு மனசுக்குள் தோணும்போது உனக்கும் புரியும் .. இப்போ உன் கார்யத்தைப் பார்” என்று மட்டும் சொன்னார்கள்…
சூரி அண்ணா அவர்களுக்கு புரிந்திருக்கும், பற்பல சமயங்களில் ஸ்ரீ சார் புரியவைத்தும் இருப்பார்.
சூரி அண்ணா அவர்களுக்கு மட்டுமல்ல…
அவரைத் தேடி நாடி ஓடிச் செல்லும் குழந்தைகள் நாம் அனைவருக்கும் ஸ்ரீ சார் அந்த ரகசியத்தைப் புரியவைப்பார்.
ஏங்கித் தவித்தால் போதும் …
முன்னம் அவனுடைய நாமங் கேட்டாள்
மூர்த்தி யவனிருக்கும் வண்ணங் கேட்டாள்
பின்னை யவனுடைய ஆரூர் கேட்டாள்
பெயர்த்தும் அவனுக்கே பிச்சி யானாள்
அன்னையையும் அத்தனையும் அன்றே நீத்தாள்
அகன்றாள் அகலிடத்தார் ஆசா ரத்தைத்
தன்னை மறந்தாள்தன் நாமங் கெட்டாள்
தலைப்பட்டாள் நங்கை தலைவன் தாளே
Maha Periyava ThiruvadigaLe charaNam! Sivan Sar ThiruvadigaLe charaNam! Hara Hara Shankara, Jaya Jaya shankara!
I have Enippadigalil Manthargal. How can I get Sri Sivan Sir’s book on Periyava released sometime in 1980s. Please help.