Pollachi Jayam Patti attained the lotus feet of Sri Maha Periyava on July 12th 2014 on Guru Poornima Day ! “Gurunatha… Gurunatha…” is the last word she uttered. Her experiences with Sri MahaPeriyava is truly a Pokkisham. Here is Patti’s Son Sri Chandrasekar sharing some gems from the treasure box.
Rathinam – 3
சிதம்பரம் நடராஜரின் குஞ்சித பாதத்திற்கு வைரத்தால் கவசம் செய்து வைரக் குஞ்சித பாதம் அணிவிக்கவேண்டும் என்று ஶ்ரீ பெரியவா விரும்பினார்கள். நடராஜருக்கு வைரக்குஞ்சித பாதம். பெரியவா எது செய்தாலும் அது அவர் வழிச்செல்லும் அன்பர்களுக்காகத்தானே! அவரே ஸர்வேச்வரன். அவர் ஏன் கோவிலுக்குப் போகவேண்டும். ராமர் விஷ்ணுவின் அவதாரம். மானுஷ்ய தர்மத்தைக் கடைப்பிடிக்கவில்லையா? அது போலத்தான்.
சரி. குஞ்சித பாதம் செய்வதென்று தீர்மானித்துவிட்டார்கள். மடத்தில் ஶ்ரீகார்யம், மற்றும் சில முக்யமானவர்களை அழைத்து discussion முடிந்து decision எடுக்கப்பட்டது. அடுத்த step…..அளவு வேண்டும். யாரிடம் இந்தப் பணியை ஒப்படைக்கப் போகிறார்கள் என்று எதிர்பார்த்து எல்லோரும் காத்திருந்தார்கள். அன்றைய தினம் அம்மா தரிசனத்திற்குச் சென்றிருந்தாள்.
“இங்கே வா”. பெரியவா அழைக்கிறார்கள். “இங்கே பேசினதெல்லாம் கேட்டுண்டிருந்தயோனோ”.
அம்மா “ஆமாம் கேட்டேன்”…
“சரி சிதம்பரத்துக்குப் போய் நடராஜர் குஞ்சித பாதத்தோட அளவை எடுத்துண்டு வா”.
அம்மாவிற்கு ஒரே shock. எவ்வளவோ விஷயம் தெரிஞ்சவாளெல்லாம் இருக்கும்போது தன்னைப் போகச்சொல்றாளே என்று தயக்கம். மெள்ள மறுபடியும் கிட்டப் போய் “நானா போகணும்” என்று அம்மா கேட்டாள். உடனே பெரியவா “ஆமாம் ஆமாம் நீதான் போகணும். போ !!!” கூட நின்றுகொண்டிருந்த ஒரு
பெரியவர் நான் வேணா கூடப் போகட்டுமா என்று கேட்க, ” வேணாம் வேணாம் அவளே போகட்டும்.” என்று சொல்லிவிட்டார். பெரியவா Supreme Court. அப்பீலே கிடையாது. சொன்னா சொன்னதுதான். அம்மா சிதம்பரத்திற்குக் கிளம்பிவிட்டாள்.
சிதம்பரம் நடராஜா ஸன்னிதியில் நின்று கொண்டு சிலரிடம் பேச்சுக் கொடுத்துப்பார்த்தாள். யாரும் கண்டுகொள்ளவில்லை. ஒரு நாள் பூராவும் ஒன்றும் நடக்கவில்லை. மறு நாள் காலை ஸ்ன்னிதியில் நின்றுகொண்டிருந்தபோது ஒரு வயஸான தீக்ஷிதர் “என்னம்மா நேற்றிலிருந்து நிக்கறையே. உனக்கு என்ன வேணும்”. என்று கேட்க அம்மா விஷயத்தைச் சொன்னாள். என்னடா இது மடிசார் கட்டிக்கொண்டு ஒரு பெண்மணி பெரியவாள் அனுப்பினார் எனறு வந்து நிற்கிறாளே உண்மையாக இருக்குமா என்றெல்லாம் அவர் நினைக்கவில்லை. இங்கே வா என்று சித்சபைக்கு அழைத்துச்சென்றார். ஒரு வாழை நாரை எடுத்து நடராஜரின் குஞ்சித பாதத்தை கணக்காக அளவெடுத்து அம்மாவிடம் கொடுத்து, பெரியவாளுக்கு நடராஜாவின் ப்ரசாதத்தையும் கொடுத்தனுப்பினார். அம்மாவுக்கு ஒரே ஸந்தோஷம். பெரியவா சொன்ன வேலை நல்லபடியாக முடிந்துவிட்டதே!
பிறகு, யாரென்றே தெரியாத இந்த மடிசார் மாமியை அழைத்துச்சென்று ஸ்வாமி மற்றும் அம்பாளுடைய நகைகளையெல்லாம் காண்பித்து , ஒரு தீக்ஷிதர் இல்லத்தில் ஸ்வாமி ப்ரஸாதங்களை ஆகாரமாக அளித்து அனுப்பி வைத்தார்கள். ஒரு நாள் பூராவும் யாரென்றே கண்டுகொள்ளப்படாதவளுக்கு ராஜ மரியாதை. பெரியவாளுடைய representative எனறு தெரிந்துவிட்டதே.
மறு நாள் பெரியவாளிடம் அளவைக் கொடுத்துவிட்டு, வைரக்குஞ்சிதபாதத்திற்கு தன்னுடைய காணிக்கையாக ஒரு வைரத்தையும் அம்மா பெரியவாளிடம் ஸமர்ப்பித்தாள். பெரியவா ஆக்ஞைப்படி செய்யப்பட்ட வைரக்குஞ்சித பாதத்திற்கு பலரிடமிருந்து பெறப்பட்ட வைரங்களில் முதல் வைரம் அம்மாவுடையதுதான். அன்று மாலை பெரியவா விச்ராந்தியாக இருந்த சமயம் அருகில் சென்று அம்மா கேட்டாள்.
“மடத்திற்கு வேண்டிய, விஷயம் தெரிஞ்ச எவ்வளவோ பேர் இருக்கா. பெரியவா ஒரு வார்த்தை சொன்னா உடனே செய்து கொடுக்க எவ்வளவோ பேர் இருக்கா. இந்தக்காரியத்திற்கு என்னை ஏன் பெரியவா அனுப்பினா-ன்னு
தெரிஞ்சுக்கலாமா”. உடனே பெரியவா அம்மாவைப் பார்த்து “அவசியம் தெரிஞ்சுக்கணுமோ”. என்று. கேட்க, “பெரியவா தெரிஞ்சுக்கலாம்னு சொன்னா தெரிஞ்சுக்கறேன்” என்றாள்.
பெரியவா: “குஞ்சித பாதம் எந்த காலில் இருக்கு””.
அம்மா: “இடதுகாலில்”
பெரியவா: இடது கால் யாருடையது ?
அம்மா: யோசித்தாள். ஆஹா சிவன் அர்த்தனாரி அயிற்றே என்று நினைவிற்கு வந்தது. உடனே “இடது கால் அம்பாளோடதுதான்.” என்றாள்.
பெரியவா: உடனே பெரியவாள், ” ஒரு பெண்ணோட பாதத்தை அளவெடுக்க ஒரு ஆம்பளையையா அனுப்பறது. அதான் உன்னை அனுப்பினேன். இப்பொ புரிஞ்சுதா”.
ஹர ஹர சங்கர
Pollachi Jayam Patti’s Videos can be viewed here.
Mahaperiava is Deivam. Pollachi Jayam mami is Punyavathi. Hence her soul has reached the God.
Bhagavan is so perfect in every action. He wants us to learn from His teachings.
Hara hara sankara jaya jaya sankara
HARA HARA Sankara Jaya Jaya Sankara..Pollachi Jayam Patti is punyavathi.