Pollachi Jayam Patti attained the lotus feet of Sri Maha Periyava on July 12th 2014 on Guru Poornima Day ! “Gurunatha… Gurunatha…” is the last word she uttered. Her experiences with Sri MahaPeriyava is truly a Pokkisham. Here is Patti’s Son Sri Chandrasekar sharing some gems from the treasure box.
Rathinam – 1
எனது தாயார், ( பொள்ளாச்சி ஜயம்), ஶ்ரீ மஹாபெரியவாளிடம் பெற்ற அனுக்ரஹ அனுபவங்கள் ஏராளம். அவளுடைய அனுபவங்களில் ஒரு 10% கூட எங்களிடம் பகிர்ந்துகொண்டிருப்பார்களா என்பது சந்தேகம்தான்.
உங்களுக்குத் தெரிந்த அவருடைய அனுபவங்களை புத்தகமாக வெளியிடலாமே என்று பலர் கூறியுள்ளனர். புத்தகங்களாக ப்ரிண்ட் செய்வதில் எனக்கு அவ்வளவு விருப்பம் இல்லை. அதே சமயம் இத்தகைய அனுபவங்களை யாரிடமும் பகிர்ந்துகொள்ளாமல் இருப்பது, பெரியவாளின் கீர்த்தியை மறைப்பதுபோலாகாதா என்றும் சிலர் கேட்டதுண்டு.
பரிச்சயம் உள்ள நண்பர்களிடம் பகிர்ந்து கொள்ளலாமே என்று தோன்றியது. நமது அகில பாரத ஸுவாஸினிகள் பிக்ஷாவந்தன மெம்பர்களுடன். அவ்வப்பொழுது, எங்களுக்கு நினைவுக்கு வரும் அம்மாவின் அனுபவங்களை
பகிர்ந்துகொள்ளலாம் எனறு நினைக்கிறேன். எங்கே ஆரம்பிப்பது ?
நமது பிக்ஷாவந்தனத்தைப் பற்றிய ஒரு அனுபவத்தை பகிர்ந்துகொள்ளலாமே! இந்த அனுபவம் ஶ்ரீ பெரியவாள் ஸித்தியான பிறகு அம்மாவிற்கும் எங்களுக்கும் ஏற்பட்டது.
2010ம் ஆண்டு. நானும் என் மனைவி லலிதாவும் பெங்களூரில் வசித்து வந்த நேரம். என் தந்தையின் காலத்திற்குப் பிறகு அம்மா காஞ்சியிலேயே தங்கிவிட்டாள். பெரியவா ப்ருந்தாவனத்திற்கு அருகில் அம்மாவிற்கு அறை ஒதுக்கப்பட்டிருந்தது. பெரியவாள் க்ருபையில், பத்து ஆண்டுகளிக்கு மேல் என் மனைவி, லலிதா, இதை நல்லவிதமாக நடத்தி முடித்திருந்த நேரம். பொதுவாகவே மற்றவர்களிடம் பணம் கேட்டு வாங்குவது கொஞ்சம் delicate ஆன விஷயம்தான். பத்து வருஷத்துக்குமேல் பெரியவா சொன்னபடி செய்துவிட்டோம்.
இனிமேல் எல்லோருக்கும் போஸ்ட் கார்ட் எழுதி பணம் கேட்க வேண்டாம்….நமக்கு நெருக்கமான சிலரிடம் வஸூல் பண்ணி பிக்ஷாவந்தனம் பண்ணிவிடுவோம். கைங்கர்யத்தை நிறுத்தினது போலும் ஆகாது. எல்லோரிடமும் போய் கேட்பதையும் தவிர்க்கலாம் என்று லலிதாவும் நானும் தீர்மானித்தோம். (ரொம்ப புத்திசாலித்தனமாக செய்வதாக எண்ணம்.)
காஞ்சிக்குச் சென்று ப்ருந்தாவனத்தில் மானஸீகமாக அனுமதி பெற்று, அம்மாவிடமும் plan என்ன என்று சொல்வதற்காக பெங்களூரிலிருந்து கிளம்பினோம்.
சென்னையில் திருவான்மியூரில் ஒரு பெண்மணி. மடத்திற்கு வந்ததே கிடையாது. மஹாபெரியவாளை படத்தில்தான் பார்த்திருக்கிறாள். அவருக்கு கனவில் பெரியவாள் வருகிறார். ” மடத்தில் எனக்கு சில ஸுவாஸினிகள் சேர்ந்து ஒரு பிக்ஷாவந்தனம் செய்கிறார்கள். அதற்கு நீ எதாவது பணம் கொடேன். என் ப்ருந்தாவனத்திற்கு நேரே காலை நீட்டிக்கொண்டு பொள்ளாச்சி உட்கார்ந்திருப்பாள். அவளிடம் கொடு. எங்கே சேர்க்க வேண்டும் எனறு அவளுக்குத் தெரியும்” என்று சொல்லிவிட்டுப் போய்விட்டார்.
இந்தப் பெண்மணிக்கு ஒரே குழப்பம். பொள்ளாச்சி என்று ஊர்தான் தெரியும். ஆளை எங்கே பிடிப்பது. அதோடு இது வெறும் ப்ரமையா ? அவருக்குத் தெரிந்த நண்பர் ஒருவர். தினந்தோறும் மடத்திற்குச் செல்பவர். அவரிடம் சென்று விஷயத்தைச் சொன்னார். அந்த நண்பர் “என்னுடன் வா” என்று அந்தப் பெண்மணியை தன் காரில் ஏற்றிக்கொண்டு காஞ்சியில் மடத்திற்கு வந்து ப்ருந்தாவனத்திற்கு எதிரில் உட்கார்ந்திருந்த என் அம்மாவைக் காட்டி
இவள் தான் பொள்ளாச்சி என்று சொல்லிவிட்டு நகர்ந்தார்.
பெரியவா கனவில் சொன்னபடியே காலை நீட்டிக்கொண்டு அம்மா உட்கார்ந்திருந்தாள். (ஒரு கால் ஸ்வாதீனமில்லாததால் நீட்டிக்கொண்டுதான் உட்காரமுடியும்). அம்மாவிடம் அதிசயமான தன் கனவைப்பற்றிச் சொல்லி ஒரு தொகையையும் கொடுத்துச்சென்றார்.
ஒரு மணி நேரத்திற்குப்பிறகு நானும் லலிதாவும் அங்கு போய்ச் சேர்ந்தோம். ப்ருந்தாவனத்தில் வணங்கிவிட்டு, அம்மாவிடம் எங்கள் தீர்மானத்தைப் பற்றி சொன்னோம். அதைக்கேட்டு அம்மா ஹோ என்று சத்தம் போட்டு சிரிக்க ஆரம்பித்தாள். எங்களுக்கு ஒன்றும் புரியவில்லை. ” நீங்கள் என்ன தீர்மானம் பண்றது. அவர் ஏற்கனவே தீர்மானம் பண்ணிவிட்டார்.” என்று சொல்லி ” இந்த வருஷ பிக்ஷாவந்தனத்திற்கு இந்தா முதல் காணிக்கை ” என்று சொல்லி அந்தப் பெண்மணி கொடுத்த பணத்தை லலிதாவிடம் கொடுத்தாள். கொடுத்துவிட்டு
கனவு விஷயம் முழுவதையும் சொன்னாள். எந்த கைங்கர்யமாக இருந்தாலும் பத்து பேரை சேர்த்துக்கொண்டு செய்யும்படித்தான் பெரியவா எப்பவும் சொல்லுவா.. பத்து பேருக்கு புண்யம் சேரும் என்பதோடு நாலு பேரிடம் கைங்கர்யத்திற்கு என்று கை நீட்டி பணம் வாங்கும்போது நம்முடைய அஹம் அங்கே அழிகிறது என்பதையும்
புரிந்துகொண்டோம்.
ப்ருந்தாவனத்தில் நமஸ்காரம் செய்து scale down பண்ணலாம் என்ற எண்ணத்திற்கு மன்னிப்புக் கேட்டுக்கொண்டு, கப் சிப் என்று பழையபடி போஸ்ட் கார்ட் எழுத ஆரம்பித்தோம்.
ஹர ஹர சங்கர
Sri Chandrasekar’s Experience with Sri MahaPeriyava can be viewed here:
Pollachi Jayam Patti’s Videos can be viewed here.
MahaPeriyava Sharanam
Wow! Splendid. How can we become fortunate to participate in the Suvasini Bikshavandhanam? can you please share details?
Many Namaskarams
Vidhya
Please contact Sri Chandrasekar mama ,son of pollachi jaya patti
jcsekarlalitha@yahoo.com
Namasthe
G
iI will be thankful if I can get the address to which i can send my humble contribution towards the bikshavandam.
During Chaturmas ham every year a Bikshavandanam is offered at Kanchi Mut. This year it was offered on 28th July 2017. You can leave your contact details with the convenor Lalita Chandrasekar. On +919500991764 or jcsekarlalitha@yahoo.com. Next. Time you will receive intimation . Regards
என்னையும் பெரியவா ஆட்கொண்டதில் பெ௫மை அடைகிறேன்.2012ம்வ௫ட ஆரம்பத்தில் தங்கள் பேட்டியை sage of Kanchi யில் பார்த்து,எப்படி உங்களை கண்டுபிடிப்பது என்று நினைத்த போது,ஜெயந்தி உற்சவத்தில் தாயாரிடம் அறிமுகம் செய்து கொண்டு பேச ஆரம்பித்தவுடன் , பிட்ஷா வந்தனத்தைப்பற்றி கூறி கலந்து கொள்ள சொன்னபோது பெரியவா க்௫பை நினைத்து உ௫கிவிட்டேன்