All the seasons have their own beauty, the month of Margazhi (Dhanur Masam) has some thing more special.
“brhtsaam tathaa saamnaam gaayatree chandasaamaham
maasaanaam margasheersho-ahamritunaam kusumaakarah”
In Bhagawat Gita, lord Krishna has described the month of Mrigashirsha as one of his manifestations. Month of Margazhi presents a feast for our senses as well as for our soul… As we welcome Margazhi & the Music Season of this year, let’s listen to some divine music…
Here is an audio of Maha Periyava Singing Thevaram !!!
A snippet from Deivathin Kural Volume 1:
ஸங்கீத லக்ஷியம் சாந்தமே
லோகத்தில் மனசுக்கு ரொம்பவும் ஆனந்தமாகவும் சாந்தமாகவும் இருக்கப்பட்ட பல விஷயங்களுக்கு, அப்பர் ஸ்வாமிகள் ஒரு லிஸ்ட் கொடுக்கிறார். இந்திரியங்களுக்கு அகப்படுகிற சுகங்கள்போல இருந்தாலும், நிரந்தரனமான, தெய்வீகமான ஆனந்தத்தைத் தருகிற வஸ்துக்களைத் சொல்கிறார். அந்த வஸ்துக்கள் என்ன. முதலில், துளிக்கூட தோஷமே இல்லாத வீணா கானம், அப்புறம், பூரண சந்திரனின் பால் போன்ற நிலை. தென்றல் காற்று, வஸந்த காலத்தின் மலர்ச்சி. வண்டுகள் ரீங்காரம் செய்து கொண்டிருக்கிற தாமரைத் தடாகம்.
மாசில் வீணையும் மாலை மதியமும்
வீசு தென்றலும் வீங்கிள வேனிலும்
மூசு வண்டறைப் பொய்கையும் போன்றதே
ஈசன் எந்தை இணையடி நீழலே.
இந்திரியங்களால் பெறுகிற இன்பங்களை ஈசுவர சரணாரவிந்த இன்பத்துக்கு உபமானமாக அடுக்கும்போது, மாசில் வீணை என்று சங்கீதத்துக்கே முதலிடம் தருகிறார்.
நல்ல ஸங்கீதம் அதுவும் குறிப்பாக நம்முடைய ஸங்கீதத்துக்கே எடுத்த வீணையோடு கானம் என்றால் அது ஈசுவரனின் பாதத்துக்குத் கொண்டு சேர்ப்பதர்காகவே இருக்கும். நம் பூர்விகர்கள் இசையை ஈஸ்வரனின் சரணங்களிலேயே ஸமர்ப்பணம் பண்ணினார்கள். அந்த இசை அவர்களையும், அதைக் கேட்கிறவர்களையும் சேர்த்து, ஈசுவர சரணாரவிந்தங்களில் லயிக்கச் செய்தது. தர்ம சாஸ்திரம் தந்த மஹரிஷி யாக்ஞவல்கியரும் சுஸ்வரமாக வீணையை மீட்டிக் கொண்டு, சுருதி சுத்தத்தோடு, லயம் தவறாமல் நாதோபாஸனை செய்துவிட்டால் போதும் – தியானம் வேண்டாம். யோகம் வேண்டாம். தபஸ் வேண்டாம். பூஜை வேண்டாம். கஷ்டமான சாதனைகளே வேண்டாம். இதுவே மோஷத்துக்கு வழிகாட்டும் என்கிறார்.
very nice explanation and beautiful singing
Excellent singing & explanation by MAHAPERIAVA. This is my humbling experience. Thanks for the posting.
NAMASKARAM .
YENNA ORU ARUMAIYAANA VILAKKAM. SIMPLE VERSION.
THANKS A LOT FOR THE VERY VERY RARE POSTING !!
VERY NICE EXPERIENCE FOR ME.
SRI SRI MAHA PERIYAVA YENNA AZHAGA PADARA. ROMBA SOWLABYAMA ERUKKU.
SO MANY THANKS FOR THE RARE POSTING.
by listening the voice Sri Maha Swami’s everyone’s sin get dissolved.
Sri Paramacharyal Thiruvadigale Saranam!