ஸார்…..ஸார்….
மெட்ராஸ் ஸம்ஸ்க்ருத கல்லூரியில் பெரியவா முகாம். தினமும் வீதி வலம் வருவார். பக்தர்கள் அழைப்பை ஏற்று அவர்களது வீடுகளுக்குச் சென்று, அவர்களுடைய பூர்ணகும்ப மரியாதைகளை ஏற்று, ஆஸிர்வதித்து விட்டு வருவார்.
அதே மாதிரி, ஒரு நாள் நுங்கம்பாக்கத்தில் வீதி வலம் வந்துகொண்டிருந்தார் . பலர் தங்கள் இல்லத்துக்கு எழுந்தருளும்படி வேண்டுவதையும், பெரியவா அவர்கள் இல்லங்களுக்கு சென்று திரும்புவதையும், பெரியவாளோடேயே நடந்து வந்து கொண்டிருந்த ஒரு குட்டிப் பையன் பார்த்துக் கொண்டே வந்தான். பத்து வயஸுக்குள்தான் இருந்தான்.
குழந்தைதானே! குறுகுறுவென்று எல்லாவற்றையும் கவனித்தான். பூர்ணகும்பம் குடுத்து பெரியவாளை அழைக்கும் வஸதி கூட இல்லாமல், வறுமையே துணையாக வளர்ந்து கொண்டிருப்பவன் என்று அவனுடைய ஆடைகளிலேயே தெரிந்தது.
ஆனால், பெரிய பெரிய மனிதர்களும், ஆசார ஶீலர்களும் பெரியவாளை வரவேற்பதைக் கண்டதும், அந்தக் குழந்தைக்கு வேறு எதைப் பற்றியும் சிந்தனை செல்லவில்லை. அவனுடைய ஒரே ஆசை…..பெரியவாளை, தானும் தன் இல்லத்திற்கு அழைக்க வேண்டும் என்பதே!
அவனுக்கு பெரியவாளை எப்படி கூப்பிட வேண்டும் என்பது கூட தெரியவில்லை! பெரியவா, பெரிய மடாதிபதி! தானோ….குட்டியூண்டு பையன், கிழிஸல் நிக்கரும், பட்டன் கூட இல்லாத சட்டையும் போட்டுக் கொண்டு திரியறோம்! தான் அழைத்தால் வருவாரா? ம்ஹும்! அதெல்லாம் அந்த களங்கமில்லா குட்டி மனஸில் கிஞ்சித்தும் உதிக்கவில்லை! …..
அவன் தன் பாட்டுக்கு கர்மயோகியாக, தன்னாலான முயற்சியை, தனக்குத் தெரிந்த பாணியில், செய்ய ஆரம்பித்தான்!
எப்படி?
“ஸார், எங்காத்துக்கு வாங்கோ ! ஸார், எங்காத்துக்கும் வாங்கோ!..”
அடிக்கொருதரம் பெரியவாளுக்கு அருகாக சென்று அழைத்துக்கொண்டிருந்தான்.
பெரியவாளோடு கூட நடந்து கொண்டிருந்தவர்கள், அவனை “பெரியவாளுக்கு தெரியாமல்’!! விரட்டி கொண்டிருந்தனர்.
“டேய்!…ஷ்ஷ்…போடா அந்தண்ட …..”
சிலர் அந்தக் குழந்தையின் தோளையும், கையையும் பிடித்து பின்னுக்குத் தள்ளினார்கள். நாம் எல்லாருமே வெளியில் தெரியும் உருவத்தைத்தானே பார்ப்போம்?
ஆனால், அவனோ விடுவதாக இல்லை. பின்னால் தள்ளப்பட்டதும், தள்ளப்பட்ட அதே வேகத்தில், வேற பக்கமாக பத்தடிக்கு ஒரு முறை பெரியவாளை நெருங்கி,
“ஸார்…ஸார்…..எங்காத்துக்கும் வந்துடுங்கோ ஸார் ”
பெரியவாளை அவன் “ஸார்….ஸார்” என்று அழைத்துகொண்டிருந்தது எல்லாருக்கும் வேடிக்கையாகவும் இருந்தது.
ஆச்சு! இதோ….அவனுடைய வீடு இருக்கும் தெருமுனை வந்துவிட்டது.! பெரியவா வலப்புறமா திரும்பிவிட போகிறாரே என்று அவனுக்கு ஒரே பரிதவிப்பு!
“ஸார்…….ஸார்….அந்தப் பக்கம் போய்டாதீங்கோ! ஸார். ….இந்த பக்கமா வாங்கோ……எங்காத்துக்கும் வந்துட்டு போங்கோ…ஸார்”
கண்ணீரோடு கெஞ்சினான். நமக்கே மனஸ் உலுக்கும் போது, மஹாமாதாவுக்கு…?
பெரியவா புன்முறுவலுடன்,
“கண்ணா…..ஸார் ஆம் [வீடு] எங்கயிருக்குன்னு விஜாரிச்சுண்டு…. அந்த பக்கமா போ….”
என்று கூறியதும், அந்தக் குழந்தைக்கு ஸந்தோஷம் தாங்கவில்லை!
“இந்தோ! இந்தப் பக்கந்தான்!…இப்டி வாங்கோ…ஸார்…”
முன்னால் வழி காட்டிக் கொண்டு, ஓடினான். அந்த குழந்தையின் வீடு பக்கத்து தெருவில் தான் இருந்தது.
வீடு வந்ததும், “விர்”ரென்று உள்ளே ஓடினான்…..
“அம்மா!…யார் வந்திருக்கா பாரு! ஸார் வந்திருக்கார்..ம்மா!…”
புண்டரீகனுக்காக அவன் வீட்டு வாஸலில் அவன் குடுத்த “செங்கல் “ஆஸனத்தின் மேல் காலங்காலமாக நிற்பது பகவானுக்கு ஒன்றும் புதுஸு இல்லையே!! இன்றும் அந்தக் குழந்தையின் ஆசைக்காக, அவன் வீட்டு வாஸலில் நின்றான் நம் கருணாமூர்த்தி!
பெரியவா அந்த குட்டி சந்துக்குள் நுழைந்ததைப் பார்த்ததும், அத்தனை பேரும் வெளியே ஓடி வந்து, குளித்தோ, குளிக்காமலோ, படார் படாரென்று பெரியவா பாதங்களில் விழுந்தனர்.
இந்த குட்டிப் பையனின் அம்மாவும் வெளியே ஓடி வந்தாள்! பூர்ணகும்பம் குடுத்து அழைக்கக் கூட வஸதியில்லாத அந்த ஏழைக் குழந்தையின் அன்புக்கு மட்டுமே வஸப்பட்டு, இதோ! ‘ஸார் ‘ நிற்கிறார்! காஷாயமும், தண்டமும், பாதக் குறடும், பக்தர் குழாமுமாக!
அவளால் நினைத்தாவது பார்க்க முடியுமா? இப்படியொரு எளிமையான தர்ஶனத்தை? அதுவும் அவளுடைய பொத்தல் குடிஸை வாஸலில்! ஏழைப்பங்காளன்! நினைத்தாலே மனஸை என்னவோ செய்கிறது. கண்கள் கண்ணீரை கொட்டுவதை நிறுத்த முடியாது.
இதில், அந்தக் குழந்தையான பாகவதனின் ஸம்பந்தத்தால், அன்று அந்த சின்ன தெருவில் உள்ள அத்தனை பேருக்குமே தெய்வத்தை நேருக்கு நேராக தர்ஶனம் பண்ணி, நமஸ்காரம் பண்ணும் பாக்யம் கிடைத்தது. உண்மையான பக்தன், பாகவத ஸம்பந்தம், நிச்சயம் நமக்குப் பெற்றுத் தருவது, தெய்வ தர்ஶனம்! நம் தகுதியின்மை, இங்கே உடைத்து, தூக்கி எறியப்படும்.
அந்தக் குழந்தைக்கு, அந்த சின்ன வயஸிலும், பெரியவாளுடன் நடக்கும் கோஷ்டியோடு தானும் போக வேண்டும் என்ற எண்ணம், தன் வீட்டுக்கும் பெரியவாளை அழைத்துக் கொண்டு போகவேண்டும் என்ற ஆசை…இதெல்லாம் பெரியவாளுடைய அவ்யாஜ க்ருபையாலும், அவனுடைய முன்னோர்கள் ஸ்ரீமடத்திடமோ, பூர்வ ஆச்சார்யர்களிடமோ, பகவானிடமோ வைத்த அன்பாலும்தான் நிகழ்ந்தது.
Today’s Nectar :
நம்முடைய ஸந்ததிகள் ஸந்தோஷமாக இருக்க வேண்டும் என்று நாம் எண்ணினால், அவர்களுக்காக வாழ்நாள் முழுவதும் நாயாக, பேயாக ஓடி உழைத்து, பணத்தை, நகைகளை, வீடுகள், நிலங்கள் வாங்கிப் போடுவதை விட, கடவுள் பக்தியை, நம் ஸனாதன தர்மத்தின் பெருமையை, மஹான்களின் அனுபவங்கள், சரித்ரங்களை அவர்களுக்கு ஸாப்பாடோடு ஊட்டி விட்டால் போறும்!
இந்தக் குழந்தை மூலமாக நாம் கற்றுக் கொள்ள வேண்டிய முக்யமான ஒன்று…..நம் வாழ்விலும், நாம் எதிர் நோக்கும் கஷ்டங்கள், நம்மை பகவானிடமிருந்து பின்னோக்கி தள்ளினாலும், இந்தக் குழந்தையின் விடாமுயற்சி போல், நாமும் அவனை நோக்கி கர்மயோகி போல், முன்னேறினால், அவன் நிச்சயம் நம் வஸப்படுவான்.
Thanks to Sri.Swami for translating the above in English…
Here is his translation:
Attempt on English translation (pardon the mistakes):
Maha Periyava was camping at Sanskrit College, Chennai. Periyava would do “veethi vula” (going round the streets) every day. During such rounds, Periyava would visit devotees’ house, accept their offerings and bless them.
One day Periyava was covering the Numgambakkam area in Chennai. A small boy who was following Maha Periyava was keenly observing several devotees inviting Periyava to their home and Periyava also accepting most of their invitations.
The little boy was not from a well-to-do family, which was obvious from the dress he was wearing. He was wearing a torn trouser and an old shirt without buttons. However this did not prevent the boy from deeply desiring that Periyava visit his house too. He did not even think if he, a little boy from a poor family, invite Periyava to his house, will Periyava, the Jagat Guru, accept his invitation and visit his house.
The little boy did not even know how to address Periyava. He started calling out “Sir, please come to our house, please visit our house as well” in the direction of Periyava. He would try to get close to Periyava and call out again addressing Periyava as “Sir”. People who were walking along with Periyava kept chasing and pushing him away from Periyava. These actions from the people did not deter the young boy even a little bit. He kept “appearing” before Periyava from some other direction and kept repeating “Sir, please visit our house too”. People were now amused seeing this little boy addressing Periyava repeatedly as Sir.
Periyava reached the road end where this little boy’s house was located. The little boy did not want Periyava to turn the other direction and leave without visiting his house. He became so desperate now and started crying. He kept repeating “Sir, please do not turn the other side, please come this side and visit our house”.
Periyava turned towards the little boy with a pleasing smile. Periyava turned towards HIS disciples and said “Enquire where this Sir’s house is located and let us go towards that house”.
The little boy was ecstatic on hearing this from Periyava and started showing the directions to his home running before Periyava and HIS disciples. Once the little boy reached his home, he ran inside quickly and told his mother that “Sir” has come to their house! Periyava was patiently standing outside the little boy’s home, just to cater to the little boy’s genuine wish.
In the meantime, people in the lane, noticing Periyava standing there, came and prostrated in front of Periyava. The little boy’s mother came running out with tears in her eyes. She did not have the resources to receive Periyava the traditional way into their home like other devotees did. She could not imagine that the Jagat Guru was standing right in front of her house just to give darshan to her son the little boy, herself and the poor people living in that small lane.
That is the power of true bakthi that can lead us directly to god, irrespective of our financial or any other position.
The little boy’s single minded focus that he also should walk with Periyava and that he should also request Periyava to visit his home had worked wonders, with Periyava’s unparalleled kindness and may be also with the little boy’s ancestors faith and love on the Sri Matam and to its Acharyas.
Hara Hara Mahadeva!!
Pls translate to English so that Every devotee can understand of HIM!!
Jaya Jaya Shankara Hara Hara Shankara!!
We are doing our best possible to publish articles both in english and tamizh. It is always a challenging task due to limited resources.. However, Prof Sujatha Vijayaraghavan has voluntarily taken up the mammoth initiative of translating the narratives documented as video experiences into book. You can find them here…
It is so touching and sweet to read this wonderful history. I really bow myself before this small boy, but when will I get this unfaltering Bhakti, or sampoorna faith ., and let me pray whole heartedly to Bhagavan, to at least bless me with this.. These events and helping us to read again and again through these media, help us maintain the level headedness in us ..
Thanks for sharing such wonderful anecdotes from our Mahaperiyava’s life for all of us to benefit.
Evvalavu Karunyam!
Jaya Jaya Sankara, Hara Hara Sankara
Attempt on English translation (pardon the mistakes):
Maha Periyava was camping at Sanskrit College, Chennai. Periyava would do “veethi vula” (going round the streets) every day. During such rounds, Periyava would visit devotees’ house, accept their offerings and bless them.
One day Periyava was covering the Numgambakkam area in Chennai. A small boy who was following Maha Periyava was keenly observing several devotees inviting Periyava to their home and Periyava also accepting most of their invitations.
The little boy was not from a well-to-do family, which was obvious from the dress he was wearing. He was wearing a torn trouser and an old shirt without buttons. However this did not prevent the boy from deeply desiring that Periyava visit his house too. He did not even think if he, a little boy from a poor family, invite Periyava to his house, will Periyava, the Jagat Guru, accept his invitation and visit his house.
The little boy did not even know how to address Periyava. He started calling out “Sir, please come to our house, please visit our house as well” in the direction of Periyava. He would try to get close to Periyava and call out again addressing Periyava as “Sir”. People who were walking along with Periyava kept chasing and pushing him away from Periyava. These actions from the people did not deter the young boy even a little bit. He kept “appearing” before Periyava from some other direction and kept repeating “Sir, please visit our house too”. People were now amused seeing this little boy addressing Periyava repeatedly as Sir.
Periyava reached the road end where this little boy’s house was located. The little boy did not want Periyava to turn the other direction and leave without visiting his house. He became so desperate now and started crying. He kept repeating “Sir, please do not turn the other side, please come this side and visit our house”.
Periyava turned towards the little boy with a pleasing smile. Periyava turned towards HIS disciples and said “Enquire where this Sir’s house is located and let us go towards that house”.
The little boy was ecstatic on hearing this from Periyava and started showing the directions to his home running before Periyava and HIS disciples. Once the little boy reached his home, he ran inside quickly and told his mother that “Sir” has come to their house! Periyava was patiently standing outside the little boy’s home, just to cater to the little boy’s genuine wish.
In the meantime, people in the lane, noticing Periyava standing there, came and prostrated in front of Periyava. The little boy’s mother came running out with tears in her eyes. She did not have the resources to receive Periyava the traditional way into their home like other devotees did. She could not imagine that the Jagat Guru was standing right in front of her house just to give darshan to her son the little boy, herself and the poor people living in that small lane.
That is the power of true bakthi that can lead us directly to god, irrespective of our financial or any other position.
The little boy’s single minded focus that he also should walk with Periyava and that he should also request Periyava to visit his home had worked wonders, with Periyava’s unparalleled kindness and may be also with the little boy’s ancestors faith and love on the Sri Matam and to its Acharyas.
Kanchi mahaswamigal,s simple way of visited all devotees. Is ever tone rembered.. jaya jaya shabkara Hara Hara Shankara.Guru Thirivadigala Saranam. M. Mohan Urappakkam.
It is like Prahalad had bhakthi in Lord Hari, our ‘Prahalad” had bhakthi in Maha Periyava!
Both obliged their Bhakthas.
When do I get such bhakthi?
Shri Maha Periyava I Surrender to YOU.
Sir
Engathukkum Vango.
a person’s greatness is measured by how they treat smaller people. for Periava, this incident shows, He is real PRTIAVA.
In this article, I see many times it talks about poor people not having proper dress, home, cannot afford to do PoonaKumbam etc. Maha periava is very simple, then why the people around periyava looking for the common family to do all these so called high end formalities. Even, people with more money should not do all these poorna kumbam, instead just get blessings periyava, which would be more holistic than pride. This articles portrays the family’s poor and inabilities more than blessings, which is very sad to read.
sundar
Virundhombal is our tradition of welcoming guests. Poornakumbam is a tradition of welcoming a Sanyasi. Neither Periyava nor the people around HIM insist that as mandatory. It is more of a bhaktha’s bhavam and yekkam that they aren’t able to offer Poornakumbam. It not a rule of Matam or other bhakthas around Periyava. Periyava’s Karunyam and the bhakthi of that kutti payan is the matter of fact here.
Very touching. Maha Periyava’s Blessings ever be on all of us? Who was the author of this great article in Tamil? Hara Hara Shankara, jaya Jaya Shankara!
Nice.
Jai jai shankara.. This is amazing for youngsters like us. We are getting to know a lot abt shri maha periyava thru this website. Thanks.
Just one look on his statue in kanchi. You sinply get addicted to him. Jai jai shankara..