HH Akilandeswaranandha Theertha Swamigal (fondly known to us as Brahmasri Vedapuri Mama) reached the Lotus feet of Sri MahaPeriyava on the evening of 11-02-2022. His Kainkaryam to Sri Mahaperiyava started at the age of 10 and had served Sri MahaPeriyava for close to six decades. Sri Mahaperiyava is everything for him and would fondly refer Sri Mahaperiyava as ‘Ummachi’. He has been one of the Shiva Ghanas in human body serving Sri MahaPeriyava who is Saksat Parameshwaran.
His Experience with Sri Mahaperiyava can be seen here


What a blessed soul !! Hara Hara Shankara!
யாதும் அறியாத பருவம்ஐயா – உமக்கு அது
யாதும் அறியாத பருவம்
எட்டு வயது கூட – உம்மை இன்னும்
எட்டிப் பார்க்கவில்லை
எசயநூர் கிராமத்திலே நீரும் எளிமையாய் வாழ்ந்து வந்தீர்
தாயை இழந்து விட்டீர் – அன்புத்
தந்தை வளர்த்து வந்தார்
காஞ்சி மஹா பெரியவா ஒருநாள் பெரும்
கருணையோடு ஆங்கு வந்தார்
கிட்டக்கச் சென்றிட்டே அவரின் தரிசனம் காணாமல்
எட்டக்க நின்றுகொண்டே அவரை எட்டிஎட்டிப் பார்த்தீர்
காஞ்சி மஹானும் மிக்க
கருணையோடு உம்மை பார்த்து
என்ன பெயர் உனக்கு என்றிடவே
வேதபுரி என்றீர் – அந்த
வேத நாயகனும் உம்மை யார் என்றறிந்திருந்தார்
என்னுடன் வருவாயா என்றவர் வாஞ்சையுடன் கேட்க
ஏதும் நினையாமல், உடனே வந்துவிட்டேன் என்று சொன்னீர்
காட்டிலும் மேட்டிலுமே அந்த
மேனா செல்லும் இடமெல்லாம்
கட்டிய வேட்டியுடன் நீங்கள்
கூடவே ஓடி வந்தீர்
கால்கள் கடுத்திட்டால் அதை
காஞ்சி மஹான் அறிவார்
பின்னால் வரும் வண்டியில்
ஏற்றி விடச் செய்வார்
நிர்கதியாய் நிற்பவர்க்கு – அவரன்றி
வேறு தெய்வம் உண்டோ?
பட்டினி பசியோடு ஒரு பச்சிளம் பாலகனாம்
எட்டு வயதுச் சிறுவன் அவனுக்கோர்
ஆதரவு ஒன்றுமில்லை
காஞ்சி மஹானே கதி
என்றி ருந்திடும் போது – தன்
பிக்ஷையில் ஒரு பங்கு அவர்
வாஞ்சையுடன் கொடுப்பார்
தாயு மானவரே அவர்
தாயு மானவரே
உம்மாச்சி உம்மாச்சி என்பீர்
உன்மத்தம் பிடித்தாற் போல்
உள்ளத்தில் ஒன்று வைத்து உதட்டால்
வேறோன்று பேசத் தெரியாது
பெண்டு பிள்ளைகட்கு ஒரு
பிரச்னை என்றாலும் – உங்கள்
உம்மாச்சியை விட்டகலீர்
உத்தமர் ஐயா நீர்
காஞ்சி மாமுனிவர் உமக்களித்த பட்டம்
பரமேஸ்வரனே அளித்த பிரமஹ்ஸ்ரீ பட்டம்
வேதப் பிராமணர்களுக்கும் இல்லை அப்பட்டம்
வைஷ்ணவ பிரபத்தி செய்த உமக்கே அப்பட்டம்
அன்றோடு இன்றுவரை அணுக்கத் தொண்டர்கள்
ஆற்றிட்ட கைங்கர்யம் அதற்கோர் அளவில்லை
சித்திர குப்தனாலும் அவன் ஏட்டில் எழுத முடியவில்லை
சிவனை சிந்திப்பாற்கு எப்பவும் எந்த குறையும் இல்லை
இங்கிருந்த படியே எங்கள் இரு கைகூப்பி
வந்தனம் செய்கின்றோம் நாங்கள் வேறொன்றும் அறிகின்றிலோம்
உங்கள் கைகளை தாரும் ஐயா
எங்கள் கண்களில் ஒத்தி கொள்வோம்
உலகத்தின் நீங்கி விட்டீர் உங்கள் உடலைத் துறந்துவிட்டீர்
உமையாளொருபாகன் உறையும் கைலாசம் சேர்ந்துவிட்டீர்
கோடி நமஸ்காரம் உமக்குக்
கோடி நமஸ்காரம்
Jaya Jaya Sankara
Hara Hara Sankara
மஹா பெரியவா ஶ்ரீ பாதம் சரணம்
வேதபுரி மாமா ஶ்ரீ பாதம் சரணம். கடைசியாக மாமாவை சேவிக்கும் பாக்கியம் எங்களுக்கு கிடைத்தது.