Periyava Puranam

  • Welcome
    • About Us
  • Maha Periyava
    • Periyava Kural
    • Periyava Photos
    • Periyava Videos
  • Sishya
    • Anukka Thondargal
    • Sanyasa Shishya
      • Pudhu Periyava
        • Devotee Experiences – Videos
  • Devotees
    • Devotees Experiences – Audio
    • Devotees Experiences – Articles
      • Daily Nectar
    • Devotees Experiences – Videos
  • Purvaashramam
    • Brahmasri Ganapathi Sastrigal
    • Sri Kunju Sastrigal
    • Smt Lalithambal Ammaiyar
    • Sri Sivan Sar
      • SAR Devotee Experiences – Videos
  • Library
    • Adistanam
    • Archives
    • Deivathin Kural
    • Periyava Puranam
    • Periyava Akashavani
    • Books
    • Kavidhai
    • Music
    • Paintings
    • Pravachanam
      • Live Pravachanam
  • Events
    • View Calendar
    • Event Details
HomeDevoteesDevotees Experiences - Articlesமகாபெரியவா திருவடியில் திருநாவுக்கரசு…

மகாபெரியவா திருவடியில் திருநாவுக்கரசு…

8 Comments | Posted on 01.19.16 by Periyava Puranam

Deivathin kural

தெய்வத்தின் குரல் வெளியிட்ட வானதி திருநாவுக்கரசு இன்று அதிகாலை இறைவனடி சேர்ந்தார். மகாபெரியவா திருவடி சேர்ந்தார் என்றே சொல்லலாம். தெய்வத்தின் குரல் வெளியிட பெரியவா தேர்ந்தடுத்த ஒரு உத்தமர்.

vanathi thirunavukarasu


‘திருமுருகாற்றுப்படை‘ படிக்கச் சொல்லு. எல்லாம் சரியாகி விடும்…

Article Courtesy: Sri Varagooran Narayanan

சென்னை எண்ணூருக்கு சற்றுத் தொலைவில் உள்ளது காட்டுப்பள்ளி என்னும் சிறு கிராமம். கடலின் கழிமுகப் பகுதியில் உள்ளது அது. அந்தக் கிராமத்தை அடைய வேண்டும் என்றால் தரை மார்க்கமாக வழியில்லை. படகு வழியாக கடலில் ஒரு கிலோ மீட்டர் தூரம் போய்த்தான், அந்தத் தீவான கிராமத்தை அடைய வேண்டும். காஞ்சி மகான் இந்த இடம் தான் என்று இல்லை, எங்கும் போகக் கூடியவராயிற்றே…

ஒரு சமயம் அங்குதான் பரமாச்சார்யார் தனது பரிவாரத்தோடு முகாமிட்டிருந்தார். படகில் போய் அவரைப் பார்த்துவிட்டு வர பக்தர்கள் தவறவே இல்லை. தெய்வத்தின் தரிசனத்திற்கு எங்கு வேண்டுமானாலும் போகலாமே — மனதில் மட்டும் பக்தி என்று ஒன்று இருந்தால்.

அந்த சமயம் வானதி திருநாவுக்கரசின் தங்கை மீனாளுக்கு உடல் நலம் — மன நலம் இரண்டுமே குன்றியிருந்தன. எதையும் சாப்பிடாமல் பிரமை பிடித்தவர் போல் எப்போதும் காட்சியளிப்பாள். எதற்கும் காஞ்சி மகானைப் பரிபூர்ணமாக நம்பும் திருநாவுக்கரசு, தன் தங்கையை அழைத்துக் கொண்டு தாயார் மற்றும் குடும்பத்தாருடன் படகின் மூலமாக காட்டுப்பள்ளி கிராமத்துக்குச் சென்றார்.

சென்றவுடன் மகானின் தரிசனம் கிடைக்க, தனது தங்கையின் உடல் நிலையைப் பற்றி அவரிடம் மெதுவாகச் சொன்னார் திருநாவுக்கரசு. எல்லாவற்றையும் கேட்ட பின், மகான், தங்கை மீனாளைப் பார்த்தார். பிறகு அவரது பார்வை அவரது குடும்பத்தார் பக்கமும் திரும்பியது. மகானின் கண்களின் ஒளி விசேஷமே எல்லா நோய்களையும் போக்க வல்லது அல்லவா ?

மகான் சிறிது நேரம் மெளனமாக இருந்து விட்டு பிறகு பேசினார் –

“அவளைத் தினமும் ‘திருமுருகாற்றுப்படை‘ படிக்கச் சொல்லு. எல்லாம் சரியாகி விடும். ” என்றார்.

“அவளுக்கு அதிகம் படிக்கத் தெரியாதே” என்று மெதுவாக மகானிடம் திருநாவுக்கரசு சொன்னார். அதனாலென்ன ? தெரிஞ்சவரை படிக்கச் சொல்லு… இல்லன்னா யாராவது தெரிஞ்சவா படிச்சுக் காட்டட்டுமே ! திருமுருகாற்றுப்படை பாடல்கள் அவள் காதில் விழுந்தால் போதும்” என்று சொல்லி தன் கையை உயர்த்தி மீனாளுக்கு அருளாசி வழங்கினார்.

அவர்கள் எல்லாரும் வணங்கி, மகானிடம் விடை பெற்றுக் கொண்டு, திரும்ப முயன்றார்கள். சற்று தூரம் வந்தவுடன், மடத்தின் ஆட்கள் அவர்களை அழைத்தார்கள்.

“உங்கள் அத்தனை பேருக்கும் சாப்பாடு போட்டு உபசரித்து அனுப்பணும்னு பெரியவா உத்தரவு’ என்று சொன்னபோது திருநாவுக்கரசு வியந்துதான் போனார்.

அந்த மாதிரி ஒரு தீவில் எதுவுமே சாப்பிடக் கிடைக்காது. இவர்களும் ஊருக்குத் திரும்பி தான் சாப்பிட வேண்டும். இது அந்த மனித தெய்வத்துக்குத் தெரியாதா ? தன் பக்தர்களை எப்போது அவர் பட்டினியோடு அனுப்பியிருக்கிறார்? மகானின் கருணையை வியந்து வியந்து போற்றி விட்டு, திருநாவுக்கரசு தன் குடும்பத்துடன், வடை பாயசத்துடன் விருந்து சாப்பிட்டு விட்டு ஊர் திரும்பினார்.

மகான் சொன்னவாறே மீனாளிடம், ‘திருமுருகாற்றுப்படை‘ புத்தகத்தைக் கொடுத்துப் படிக்கச் சொன்னார்கள். ஒரே மாதம்தான்… மீனாள் பூரண குணமடைந்தாள். மனக் கோளாறு முழுமையாக விலகி, இயல்பு நிலைக்கு அவள் வந்தது காஞ்சி மகானின் பேரருள்தான் என்கிறார், பதிப்பக ஜாம்பவான் திருநாவுக்கரசு. மகானிடம் பரிபூரண சரணாகதி அடைந்தவர்களை அவர் என்றுமே மறந்ததுமில்லை, கைவிட்டதுமில்லை.


Categories: Devotees Experiences - Articles Tags: Devotees Experiences - Articles, obituary, Vanathi Pathippakam

{ 8 Comments }

  1. k ps rao says

    January 19, 2016 at 9:15 am

    Really sad to hear. May his soul rest in peace

    Reply
  2. k ps rao says

    January 19, 2016 at 9:19 am

    Really blessed soul today being Thai kritigai

    Reply
  3. shree says

    January 19, 2016 at 11:31 am

    also ekadasi

    Reply
  4. M.Narayanan says

    January 19, 2016 at 2:24 pm

    Great service rendered by Sri. ‘Vanathi” Thirunaavukkarasu to Maha Periyava Devotees and to Sanathana Dharma. The bringing out of Deivaththin Kural by Gifted Compiler Anna Sri Ra.Ganapati and Blessed Publisher Sri. Thirunaavukkarasu are ordained by Maha Periyava Himself. They are real Mahathmas and we are ever beholden to them for this Treasure of Maha Periyava UpadesangaL. They have merged in Maha Periyava. Hara Hara Shankara, Jaya Jaya Shankara!

    Reply
  5. navEdaham says

    January 20, 2016 at 5:41 am

    “மகானிடம் பரிபூரண சரணாகதி அடைந்தவர்களை அவர் என்றுமே மறந்ததுமில்லை, கைவிட்டதுமில்லை.”
    Aha! Surely Periyava would have blessed ‘Vanathy’ Sri Thirunavukkarasu…to be with HIM.

    Read some where in the interview of Sri ‘Vanathi’ Thirunavukarasu that there were several other hi-end publishers willing to publish ‘Deivathin Kural’ but Periyava chose ‘vanathi’…

    Prayers to Sri MahaPeriyava to bless us too…

    Ram. Ram.

    Jai GuruDev!

    Reply
  6. பூதலூர் Dr. BN விஸ்வநாதன் says

    January 21, 2016 at 11:50 pm

    ராயவரம் பாலு மாவுடன் (19-1-16) ஸ்ரீ வானதி திருநாவுக்கரசும் பெரியவா பர

    மனடி சேர்ந்துவிட்டார் என்பதில் எள்ளலவும் ஐயமில்லை.

    Reply
  7. R>SUNDARARAJAN says

    January 22, 2016 at 10:38 am

    RAYAVARAM BALU MAMA & VANADHI THIRUNAVUKKARASU ARE BLESSED SOULS AND REACHED THE
    LOTUS FEET OF MAHA PERIVA ON AN AUSPICIOUS DAY. BOTH WERE VERY MUCH INVOLVED IN
    PUNYA KARIYAMS .
    R.SUNDARARAJAN

    Reply
  8. LAKSHMI NARAYANAN R says

    January 23, 2016 at 12:42 pm

    Also brings to your notice that he only Published the Book Named Maha PeriyavaL – Darisana AnubhavangaL in 7 volumes. I am having habit giving the entire set as a gift, especially those are in the family way. Also asked to read the same during their pregnency, and experienced with Normal delivery, with the blessings of Maha Periyava.

    More than 12 -13 different occassions i experimented and experienced. Only thing is now at Giri Trading Mumbai is not Keeping the entire volume as stocks.

    Maha periyava thiruvadi saranam.

    Reply

Leave a Comment Cancel reply

GET INVOLVED

Search

Periyava Puranam (Videos)

CLICK HERE

Periyava Kural

Sankara Jayanthi – Sri MahaPeriyava, Sri Pudhu Periyava & Sri Bala Periyava

Periyava Kural : A Simple Excerpt For KIDS

Kuralin Kadhai Part 2

Recent Comments

  • InduMohan on Experience with MahaPeriyava by Sri Kedara Venkata Krishnan – Kasi Krishnan
  • Raji Ganesh on Experience with MahaPeriyava by Sri Hariharan – Auditor : Part 3
  • Raji Ganesh on Experience with MahaPeriyava by Sri Hariharan – Auditor : Part 3
  • Periyava devotee on Umachi Thatha Sonna Kadhai – Audio Series
  • Meena kalyanaraman on Sri Maha Periyava & Sri Sivan SAR

Tags

Anukka Thondargal Anusham Aradhana archives bhagavad geethai Books Daily Nectar deivathin kural Devotees Experiences - Articles Devotees Experiences - Audio Devotees Experiences - Videos Dr Veezhinathan e-book Events H.H.Mettur Swamigal In The Presence Of The Divine kavidhai MahaPeriyava Margazhi MeelaAdimai obituary padhugai paintings Periyava Dream Periyava Kural Periyava Photos Periyava Purvaashramam Pradosha Mandalam Pradosha Mandalathil Sila Nakshathirangal Pradosham Mama pravachanam purvaashramam rare photos Remembering MahaPeriyava Salem Ravi SAR Devotees Experiences - Videos siva saagaram Siva Saagarathil Sila Thuligal sri ganesa sarma sri kannan mama Sri Sivan Sar Thenambakkam Umesh vaidhyanatha periyava veezhi mama

Recent Posts

  • Thenambakkam Pillaiyar – Gold Kavacham
  • Sri MahaPeriyava Manimandapam NJ USA – Namba Periyava Kovil : A way of life
  • Experience with MahaPeriyava by Sri Kedara Venkata Krishnan – Kasi Krishnan
  • Experience with MahaPeriyava by Sri Hariharan – Auditor : Part 3
  • Experience with MahaPeriyava by Sri Hariharan – Auditor : Part 2
TwitterFacebookYoutube

Join our Mailing List!

Receive Newsletters & Articles.

Join 26,822 other subscribers

Upcoming Events

There are no upcoming events at this time.

Daily Nectar

Daily Nectar : அநுக்ரஹம்-னா என்னனு தெரியுமா ?

Daily Nectar : Sanyasi Krishnar ; Jamindar Kuchelar…

Daily Nectar : A Divine Intervention…

Categories

Website developed & maintained by Jaalaa Designs

Copyright 2017. MahaPeriyavaPuranam.Org