
Article in Kumudam Jothidam by AMR for Sri SAR Jayanthi
சென்னை மயிலாப்பூரில் ராமகிருஷ்ணா மடம் சாலையில் ஒரு வீட்டின் இரண்டாவது மாடியில் ஒரு சிறிய அறையில் ஸ்ரீ சிவன் சார் வசித்து வந்தார். அங்கு அவரை தரிசிக்க பலர் வந்து போவது உண்டு. ஒரு முறை, ஜ்யோதி மாமி அவரை தரிசனம் செய்ய வரும் பொழுது, ஸ்ரீ சார் வித்தியாசமான ஒரு ஒலி எழுப்பினார். உடனே, அந்த சிறிய அறையில் இருந்த ஒரு ஜன்னலின் வழியாக ஒரு காக்கா தன் உடலை குறுக்கிக்கொண்டு ஸ்ரீ சார் அருகில் வந்து உக்கார்ந்தது. உடனே ஸ்ரீ சிவன் சார் தன் கையில் வைத்திருந்த உணவை காக்கையிடம் நீட்டினார். அந்த காக்காவும் பொறுமையாக அந்த உணவை சாப்பிட்டது. பிறகு, ஸ்ரீ சார் ஒரு வித ஒலி எழுப்பினார். உடனே அந்த காக்கா, தான் வந்த வழியே திரும்பி சென்று விட்டது. இதை கவனித்து கொண்டிருந்த ஜ்யோதி மாமி, பட்சிகளிடம் கூட ஸ்ரீ சார் பேசும் அதிசயத்தை கண்டு, வியந்து, “சார், எவ்வளவு பெரியவராக இருக்கேள், நீங்க போய் இவ்வளவு சின்ன ரூம்ல இருக்கேளே” என்று கேட்டார்கள். அதற்கு, ஸ்ரீ சார் அமைதியாக, “போதுங்கரவனுக்கு மா, இதுவே ஜாஸ்தி… வேணுங்கரவனுக்கு உலகத்த குடுத்தா கூட போறாது” என்றார்.
தான் வாழ்ந்த காலத்தை புனித படுத்திய தன்னையும் துறந்த துறவியான ஸ்ரீ சிவன் சார் அவர்களின் ஜயந்தி விழா, சனிக்கிழமை, 14-காம் தேதி, அக்டோபர் மாதம் 2017, மாலை 6:30 மணி முதல் 8:30 மணி வரை “இன்போசிஸ் ஹால்” – ராமகிருஷ்ணா மிஷன் ஸ்கூல், நார்த் உஸ்மான் ரோடு, தி.நகரில் கொண்டாடப்பட உள்ளது. அன்பர்கள் அனைவரும் நண்பர்களுடனும் சுற்றத்தாருடனும் கலந்து கொண்டு ஸ்ரீ சிவன் சார் அவர்களின் அருளை பெற வேண்டுகிறோம். மேலும் விவரங்களுக்கு: 98402 19314/ 96000 15230.
Thanks for sharing. For those who are abroad, we are not privileged to be there tomorrow. Can you please record the jayanthi and post it.
Live streaming is available.
Namasthe
I am in Bangalore. I never knew about Shri Sivsn Sir. This narration has given me an introduction to Shri Sivan Sir. Thanks.
where is avalible sivan sar and mahapariyava dollar