‘பெரியவா!’ என்னும் போது…
ஊழ்வினை உந்தித் தள்ள
ஊர்ந்து செல்லும் எம்மை
உண்மை பொருள் ஆகி
நிற்கும் உம்மைத் தாண்டி
காப்பது ஆர் சொல்வீர்
கலி முற்றும் புவியிலே,
காருண்ய உருக் கொண்ட
காஞ்சி நகர் தெய்வம்!
இந்திர ஜாலம் மிக்க
மந்திர பூமி யிதில்
எந்திரம் போல நானும்
வாழ்திட லாமோ சொல்வீர்?
சந்திர சேகர உந்தன்
சுந்தர பாதம் பற்றி,
மந்திரம் ஏது மின்றி
மாயங் கடந்து செல்வேன்!
பெறுதற் கரிய பெரும்
ஜென்ம வாழ்வு ஈதில்
பெரும் பொருள் ஏதுமே
அறியாத பேதை நானும்,
‘பெரியவா!’ என்று மட்டும்
கூவி அழைக்கும் போது
கரிய வெண்ணம் நீங்கி,
கலிதாண்டி ஏகும் ஜீவன்!
Thanks to navEdaham – Ardent Devotee of Periyava and Sri Sivan SAR And a disciple of Triplicane Periyava for these beautiful verses on HIM.
Leave a Comment