சிரத்தில் கரம் வைத்த தென்ன
சிவ சந்திர சேகரா – யாங்கொண்ட
அறத்தில் குறைந்ததாலே கொண்டீரோ
ஆழ்ந்த தோர் கவலை?
கரத்தில் அபயங் காட்டாது உந்தன்
பரத்தில் மறைந்த பார்முதல் பூதத்தை
பிறப்பென் மேலேவிடின் என்செய்வேன்?
குறைதீர வழி யறியேன்!
பேர், பிறப்பறுக்கும் ‘பெரியவா!’ என்ற
வோர் மந்திரமொரு முறையேனும் கூறிடின்
சிறக்காதோ எந்தன் ஏழேழு ஜென்மமுமே
அறத்தின் வழி நின்று.
போகி தன் நன்னாளில் ராக த்வேஷம்
போக பழையதைக் கொளுத்தி தை
அதனில் ஸ்வதர்ம வழிதிறந்து சிறியதொன்று
செய்யாது அடைவேனோ சிறப்பு?
அடைந்திட்டேன் சரணம்! கடந்திட்டேன் ஜனனம்!
விடையேறிய பாகா, சங்கரா ! சிவ சாகரா !
கங்கையது தலைமீது கொண்டீரே!
எம் சிரம் மீது உம் கரம் வைத்து
யாம் சிறக்க அருள்விரே!
Thanks to navEdaham – Ardent Devotee of Periyava and Sri Sivan SAR And a disciple of Triplicane Periyava for these beautiful verses on HIM on the auspicious “Bhogi Thirunaal”
Thanks for sharing… absolutely beautiful photo with very nice words showing the same emotions that I feel when I see this photo of MahaPeriyavaa!
Reading this is absolute bliss and thank you so much for this image and prayer about MY VAAZUM DEYVAM
SARANAM, SARANAM, SIRASAI SRADHA YUDAN UN PADA THIRUVADI TANNIL VAIT THEYAN.
ENDRENDUM UMN ASI VENDI.
Very Rare Photo. Excellently Worded Poem.