சாச்சு பிறவிலேயே மகான் – ஸ்ரீ மஹா பெரியவா
தன் குடும்பத்திற்கு நற்கதியை ஏற்பவர் மகான். – ஸ்ரீ சிவன் சார்
தாய் வழி, தந்தை வழி என்று இரண்டு வழிகளிலும் பெரும் தவமும் புகழும் நிறைந்த வம்சத்தில் தான் ஸ்ரீ சிவன் சாரும் அவதரித்தார்.
லௌகீக சூழ்நிலையிலும் தெய்வீக சாந்தியை ஏற்பவர் மகான்.
வம்ச விருத்தியின் நினைவைக் கொள்ளாதவர் மகான். – ஸ்ரீ சிவன் சார்
சாச்சுவுக்கோ மணவாழ்க்கையில் பற்றோ, பிடிப்போ இல்லை. எனினும் பெரியவர்களின் விருப்பத்தற்கு இணங்க வேண்டியிருந்தது. சந்ததிகள் எதுவும் தோன்றவில்லை. ஒரு காலக் கட்டத்திற்குப் பிறகு அனைத்தையும் துறந்து தனிமையில் இருப்பதையே விரும்பினார் சிவன் சார்.
நினைவை தெய்வீகத்தில் ஒருமைப் படுத்துபவர் மகான் – ஸ்ரீ சிவன் சார்
ஒரு சமயம் கும்பகோணம் காவிரிக் கரையில் டபீர் படித்துறை என்ற இடத்தில் மகாபெரியவர் காவிரியில் குளித்துவிட்டு படியில் காவிரியைப் பார்த்து வடக்கு முகமாக அமர்ந்திருந்தார். பெரியவாளுக்கு பின்னால் சுமார் நூறு பேர் படிகளில் நின்று கொண்டிருந்தனர்.
அதை குரூப் ஃபோட்டோவாக எடுக்குமாறு மகாபெரியவா ஸ்ரீ சிவன் சாரைப் பணித்தார். உடனே ஸ்ரீ சிவன் சார், எதிரில் ஓடும் காவிரியில் இறங்கி நீரில் நின்று கொண்டு, tripod ஐ வைத்து பலவித சிரமங்களைச் சமாளித்து அபூர்வமான புகைப்படத்தை எடுத்தார். இதைப் பற்றி பின்னாளில் சார் சொல்லும் பொழுது, ‘அது பெரியவா எனக்கு வைத்த test ‘ என்பார்.
கோபுர தரிசனத்திலும் ஆனந்தத்தைக் கொள்பவர் மகான்.
ஏதாவது சில க்ஷேத்ரங்களை நாடக் கூடியவர் மகான்.– ஸ்ரீ சிவன் சார்
மற்றொரு சமயம் மகாபெரியவா நான்கு ராஜகோபுரங்களையும் உள்ளடக்கிய விதத்தில் சிதம்பரம் கோயிலை ஒரு புகைப்படம் எடுக்குமாறு உத்தரவிட்டார். பல கலைஞர்கள் முயன்றும் யாராலும் அவ்வாறு புகைப்படம் எடுக்க முடியவில்லை. இறுதியில் ‘ சாச்சுவை விட்டு எடுக்கச் சொல்லு ‘ என்று மகாபெரியவா பணித்தார். ஸ்ரீ சிவன் சாரும் கனகச்சிதமாக புகைப்படம் எடுத்துவிட்டு நடந்தே திருவெண்காடு சென்றுவிட்டார்.
புத்தியை தெய்வ வித்தையாக ஏற்று விடுபவர் மகான் – ஸ்ரீ சிவன் சார்
கேன்வாஸ் போர்ட்ரைட் எழுதுவதில் வல்லுநர் சிவன் சார் அவர் வரைந்த மகாபெரியவா படம் இன்றும் முடிகொண்டானில் திரு. வாஞ்சிநாதய்யர் இல்லத்தில் உள்ளது.
பொருள்களின் மதிப்பை மறந்தவர் மகான் – ஸ்ரீ சிவன் சார்
சுமார் எழுபது ஆண்டுகளுக்கு முன்பே பல ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள தனது ஸ்டுடியோவை உதறிவிட்டு வெளியேறினார். அதன் சாவியை சிலர் கொண்டு வந்து சாரிடம் கொடுத்தனர். அதற்கு அவர், ‘யானையே சொந்தமில்லை, அங்குசம் எதற்கு?’ என்று சொல்லிவிட்டு, பட்டினத்தார், புரந்தரதாசர் போலக் கிளம்பிவிட்டார். (சாரின் பரம பக்தரான வெங்கடேஸ்வரா ஸ்டுடியோ திரு. பெரியசாமி அவர்களிடம் அந்த புகைப் பட சாதனங்கள் இன்றும் உள்ளன).
வணக்கங்களுடன்: ஏணிப்படிகளில் மாந்தர்கள் புத்தகத்தில் ஸ்ரீ சிவன் சார் பொன்மொழிகள்
நன்றி: சிவ சாகரத்தில் சில அலைகள் புத்தகத்தில் ஸ்ரீ கணேச சர்மா அவர்கள்.
ஸ்ரீ சிவன் சார் அவர்களின் ஜயந்தி எதிர் வரும் அக்டோபர் 7 ஆம் தேதி சென்னையில் வெகு விமர்சையாக நிகழ இருக்கிறது. பக்த அன்பர்கள் பெரியவா – சிவா அருளுக்கு பாத்திரர் ஆகுக…
Article Courtesy: Thanks a lot to Sri Karthikeyan Nagaratnam for this beautiful article.
Sarvam periava sharanam..Shri gurubyo namaha. Sri sivan sir ah patri innum arithu kolla virumbiguren.
Sivan Sar ThiruvadigaLe CharaNam! Maha Periya ThiruvadigaL CharaNam! Shri Gurubhyo Namaha! Hara Hara Shankara, Jaya Jaya Shankara!