Let us listen to the “voice” of a great man who penned “Voice of God” (தெய்வத்தின் குரல் தொகுத்தவரின் குரல்).
We pay our homage to Sri Ra Ganapathi ( fondly known as “Anna” ) who attained siddhi on a Holy Sivarathri Day in 2012 . Among spiritual treatises bringing the words of a great Master to the world, “Deivathin Kural” has its own unique greatness and has no parallel!
This audio recording done almost six years back, was a casual conservation recorded when Sri Ra Ganapathi was unwell. Though the clarity of the audio is excellent, it is hard to follow without transcription. We are very thankful to Sri. Karthikeyan Nagaratnam for his meticulous efforts in transcribing this audio.
Below is the first set of audio clippings with a poetic prologue and tamizh transcription by Sri Karthi.
ஸ்ரீ ரா. கணபதி – அண்ணா தமிழ், பக்தி, இலக்கியம் இம்மூன்று சொற்களும் இவ்விருபத்தொன்றாம் நூற்றாண்டில் ஓருருவம் தாங்கி வந்தால்? வந்தது…ஸ்ரீ ரா கணபதி அவர்கள் உருவில். கடவுளின் எழுதுகோல் – PEN OF GOD என்று பக்த உலகில் எல்லோராலும் அறியப்பட்டவர் ஸ்ரீ அண்ணா. ‘மை’ நிரப்பி எழுதுவோர் மத்தியில் ‘மெய்’ மட்டுமே நிரப்பி எழுதியவர் ஸ்ரீ அண்ணா. அதனால் தானோ, என்னவோ, இன்று மெய்யாய் நிற்கிறார், நம்மிடையே… வேதங்களை பகுத்துக் கொடுத்த வியாசருக்கு தொந்திக் கணபதி… வேதங்களை பாதுகாத்துக் கொடுத்த நம் சங்கர வியாசருக்கோ, நம் பூஞ்சைக் கணபதி… உருவத்தில் தான் பூஞ்சை… உயிர் கரைக்கும் அவர் எழுத்துக்களில் அவர் பண்ணியதோ பூசை… இன்று அவர் நினைவு தினம்…இன்று மட்டுமா? பக்த உலகில், குறிப்பாக ‘தெய்வத்தின் குரல்’ உலகின் ஏதாவது ஒரு மூலையில், யாராவது ஒரு பக்தனால் படிக்கப்படும் எல்லா தினமும் அவர் தினம் தான்… அண்ணா…அண்ணாந்து பார்த்து வணங்குகிறோம்… |
முதல் தரிசனம் பெரியவா ஜி: ஒங்களை யார் FIRST பெரியவா கிட்ட அழைச்சுண்டு போனா? அம்மா தானா? ஸ்ரீ ராக: ஆமா. ஜி: அப்படின்னா, குழந்தையா இருக்கும்போதே பெரியவா கிட்டே போயிட்டேள்? ஸ்ரீ ராக: இல்லே, 22 வயசு. பிடிக்கவே பிடிக்காது பெரியவாளை எனக்கு. ஜி: ஓ, (ஆச்சிரியப்படுகிறார்) ஸ்ரீ ராக: இந்த ஆச்சாரம், மொட்டை அடிச்சிகறது…உருப்படவே உருப்படாது. இவா வார்த்தை எல்லாம் கேட்கவே கேக்காதே. துளி கூட இஷ்டம் இல்லாம தான் போனேன். ஜி: இதுக்கு முன்னாடி வேற யார் கிட்டே ஈடுபாடு இருந்தது? ஸ்ரீ ராக: யார்கிட்டயும் ஈடுபாடு கிடையாது. ஜி: ஓ, ஸ்ரீ ராக: பெரியவா கிட்ட போகும் போது, நமஸ்காரம் பண்றச்சே பிடிக்கலே, சட்டையை கழட்டுன்னா. இப்ப எல்லாம் பசங்க எல்லாம் சட்டையிலே தான் இருக்கா. நான் அப்பவே சட்டையை கழட்ட மாட்டேன். சட்டையை கழட்ட சொல்றா, இந்த கிழத்துக்கு என்னத்துக்கு நாம்ப நமஸ்காரம் பண்றது? ன்னு என்னமோ பண்ணினேன். ஜி: அப்போ நீங்க COLLEGE ல படிச்சிண்டு இருந்தேளா? ஸ்ரீ ராக: படிச்சு முடிச்சுட்டேன். ஜி: அப்பவே PROGRESSIVE THINKING ஆ? இந்த மாதிரி ஆசாரம் எல்லாம் பிடிக்காது? ஸ்ரீ ராக: பிடிக்காது…அடியோட பிடிக்காது… சிரிப்பு…. நமஸ்காரம் பண்ணினேன். பண்ணினா விட்டு பெரியவா பார்த்துண்டு இருந்தா. பார்த்துண்டே இருந்தா.எனக்கு கூச்சமா இருந்தது. அப்புறம் முச்சந்தி, ஒரு ரேழி மாதிரி இருந்தது. அங்கே போனோம். அங்கே போனாவிட்டு, கொஞ்ச நேரம் கழிச்சு பாத்தா,பாத்துண்டே இருப்பார். யார் வந்தாலும் போனாலும் ஒத்தர் ANNOUNCE பண்ணி யாராவது வந்துண்டே இருப்பாளோன்னோ? ஒத்தரையும் வர விடலே. அப்டியே பாத்துண்டே இருந்தா…பத்து நிமிஷம்… எப்படாப்பா வெளிலே போவோம் ன்னு இருந்துது எனக்கு. வெளிலே வந்து சேந்தோம்.வந்தாவிட்டு, எல்லாம் சொன்னா. பையன் ரொம்ப வீக்கா இருக்கானோன்னோ…பெரியவா அதான் பாத்து இருக்கா. நன்னா ஆயிடுவான்…ன்னா… ஸ்ரீபெரும்பூதூர் ல இருந்தா அப்போ அப்பா. DCTO …தாசில்தார்… ஜி: எந்த ஊர்? ஸ்ரீ ராக: ஸ்ரீபெரும்பூதூர்…ராமானுஜர்… அன்னிக்கு ராத்ரில ஒண்ணும் தெரியல. மறுநாள் கார்த்தால எழுந்தா….பெரியவா தான் ஈஸ்வரன். அவர் சொன்னது எல்லாம் தான் சத்தியம்.அவர் சொன்னதை கேட்டாத் தான் லோகம் உருப்படும். ஏதோ நல்ல எண்ணத்துல அந்த காலத்துல தர்ம சாஸ்திரம் எழுதி இருப்பா. இப்போ ஒருவேளை நடைமுறைக்கு சாத்தியமா இருக்காது. அவர் தான் எல்லாம் ன்னு அன்னிலேந்து தோண ஆரம்பிச்சிடுத்து. ஜி:திடீர்ன்னு…பத்து நிமிஷம் பாத்ததுலே இப்படி ஆயிடுத்தா?அதுக்கப்புறம் போக ஆரம்பிச்சுட்டேள். நீங்களே…அதுக்கப்புறம் அடிக்கடி நீங்க போக ஆரம்பிச்சுட்டேளா? ஸ்ரீ ராக: அதைத் தொடர்ந்து பெரியவாளும் மெட்ராஸ் வந்துட்டா…57 செப்டம்பர் ல…நிறைய |
தக்ஷிணாமூர்த்தி பெரியவா ஸ்ரீ ராக:பெரியவா பாட்டுக்கு,நேரா போயி, இந்த…கோவிந்தவாடி… தக்ஷிணாமூர்த்தி சந்நிதிலே, தான் தக்ஷிணாமூர்த்தி ஆவே உட்கார்ந்துண்டுட்டா. தன் பிக்ஷையைப் பத்தியோ, துணியைப் பத்தியோ, குளிக்கிறது பத்தியோ எதையுமே நினைக்கலே. ஜி: வெள்ளகேட்டு பக்கத்திலே… ஸ்ரீ ராக: ஆமாமாம். அங்கே அப்படியே தான் இருந்தா பெரியவா ரொம்ப நாள்.இவாளா பாத்து எதுவும் அழைச்சிண்டு போவா,குளிப்பாட்டி விட்டுண்டு இருந்தா…ஷண்மதா கான்பிரன்ஸ்க்கு போன அத்தனை பேரும் அங்கே போயிட்டு வந்தா. போய்ட்டு வந்துட்டு அவா ஆச்சிரியமா சொன்னா. அவருடைய மௌனம் எவ்வளவு பவர்புல்லா,திருப்பி அவா மனசிலே விஷயம் தோணற படி, ஒத்தரும் வாயை திறக்கலே.அத்தனை பேரும் வாயை மூடிண்டு வந்துட்டா… மடத்தை விட்டு, …. ல இருந்தா…பெரியவா வந்தா. இந்த பகவந்தா போதேந்த்ராள் போன மாதிரி. அப்புறம் ஏன் பெரியவா மௌனத்தை விட்டா? ஏன் திரும்பி போனா? இதெல்லாம் தெரியாத விஷயம்…ஆனந்தமா இருந்துண்டு இருந்தா பெரியவா…அப்போ… ஜி:1965 ஆ? ஸ்ரீ ராக:பெரியவா தர்சனம் பண்ணிட்டு, நானும் ராமரத்னமும் இந்த SOUVENIR கொடுக்க போனோம். ராமரத்னம் அழவே அழுதுட்டார்.’எப்படி இருக்கார் பாத்தியா? கணபதி…’ பெரியவாளை…(உணர்ச்சி வசப்படுகிறார்)மறுபடியும் இந்த உலகத்துக்கு வந்து, நம்ம சந்தேகத்துக்கு பல கஷ்டங்களைப்பட்டு… ஜி: 65 ஆ? 68 ஆ ஸ்ரீ ராக:1969 மே 31st … |
துர்க்கை பெரியவா ஸ்ரீ ராக: ஜனங்கள் மொத்தத்திலே கஷ்டப்பட்டுண்டு இருக்கா. மனுஷாளுக்கு எத்தனையோ ப்ரோப்ளம் இருக்கு. எத்தனையோ சுலோகம் சொல்றா. இன்னொன்னு சொல்றா. நீ கேக்கறே. நானும் சொல்றேன். ஸ்ரீ கிருஷ்ண கோவிந்த ஹரே முராரே… உன்கிட்டே இருக்கா அது? இருக்கோ? அத சொல்லிண்டு இருங்கோன்னுட்டா பெரியவா…நிறைய சொல்றேன்… ஹே நாத நாராயண வாசுதேவா ஹரே முராரே மதுகைடபாரே கோவிந்த கோபால முகுந்த விஷ்ணு யக்ஞேச நாராயண வாசுதேவ நிராஷ்ரயம் மாம் ஜகதீக்ஷ ரக்ஷ அதை சொல்லிண்டே இருங்கோ..ன்னு இருக்கா… ஜி:கோவிந்த தாமோதர மாதவேதி… ஸ்ரீ ராக: காது கேட்கலே… ஜி:கோவிந்த தாமோதர மாதவேதி… ஸ்ரீ ராக: ஆமாமாம். ஜி: ஆங்கரை பெரியவா சொல்லுவா… ஸ்ரீ ராக:அந்த நாளிலேயே உண்டா இது? நான் பெரியவாளே சொன்னதுன்னு நெனைச்சேன். பெரியவாளா பண்ணினது துர்கா பஞ்சரத்னம் தான்… அம்பத்தூர் வசந்தி இருந்தா பாரு…அவளுக்கு பெரியவாளைப் பத்தி பல விஷயம் தெரியும். எப்டின்னு தெரியாது. இது என்னமோ வெளிலே காமாக்ஷி ன்னு சொல்லிண்டு இருக்கு. இது ன்னு தான் சொல்வோ அவ. உள்ளூற துர்கா உபாசனை ல இருந்தா அவ. அதே மாதிரி பெரியவா ரொம்ப நாளைக்கு அப்புறம் துர்கை யை பத்தி பாடினா. காமாக்ஷியை பத்தி இல்லே. மாம் பாஹி சர்வேஸ்வரி… துர்கை தான்…துர்கே …ன்னு தான் சொல்லி இருக்கா… வைஷ்ணவி கோவிலுக்கு பெரியவாளை வரச் சொல்லி..அந்த கோவில் கட்டினவர், சாது பார்த்தசாரதி…லெட்டெர் எழுதி கொடுத்து, கேட்டு அனுப்ச்சா… பெரியவாள் க்கு கோவம் வந்துடுத்து…இவனுக்கு மடி ஆசாரம் ஒன்னும் தெரியாது. இவன் பாட்டுல இவன் இஷ்டத்துக்கு பூஜை பண்றான். அது ஒரு கோவிலா, நான் வருவேனா, நான் வர மாட்டேன் ன்னுட்டா… அவ போயி சொன்னா… அவர் ஒரு லெட்டெர் எழுதி கொடுத்தார், பதிலுக்கு… அதை பெரியவா கிட்ட கொண்டு வந்து கொடுத்தா… நீ அதை பாத்தியா ன்னு பெரியவா கேட்டா… நாங்க அதை பாக்க மாட்டோம். மகாத்மா காந்தி கிட்ட இருந்தவா நாங்க. தப்பு கார்யம் பண்ண மாட்டா. எங்க அப்பா உங்களுக்கு ஏஜண்டு. நாங்க ஏன் பாக்கணும் ன்னா.. ஒங்க அப்பா எனக்கு WHIPLASH கொடுத்து இருக்கான். அவன் எழுதி இருக்கான். நீங்க ரொம்ப பெரியவர். நான் மடி ஆசாரம் இல்லாதவன். அது கோவிலே இல்லே. அதை கோவில் ஆக்கறதுக்குத் தான் ஒங்களை வரச் சொன்னேன். அது ஒரு பக்கம் இருக்கட்டும். எனக்கு என்ன தகுதி கோவில் வெக்க…நீங்க எப்படி அம்பாளுக்கு குழந்தையோ அது மாதிரி நானும் கொழந்தை…அப்டின்னு எழுதி இருந்தார் அவர். ஜி: அப்பா…. ஸ்ரீ ராக: உடனே, பெரியவா நான் இப்பவே வரேன் ன்னு கிளம்பினார். இப்ப எல்லாம் வரப்படாது. ஒங்களுக்கு வரவேற்பு பெரிசா RECEPTION கொடுக்கணும். நாங்க ஏற்பாடு பண்ணனும் ன்னா. பெரியவா அப்புறம் ஒரு நாள் போனா. கையிலே ஒரு தாமரைப் பூவை எடுத்துண்டு போனா….போனா, ந கர்மணா தானே சொல்லுவா… வசந்தி ஜாத வேதஸே சொல்லு… துர்காம் தேவீஹும் சரண மஹம் ப்ரபத்யே சொல்லு-ன… பெரியவாளுக்கு மயிர்கூச்சல்… வசந்தியை குறும்பா பாத்து சிரிச்சா… அப்புறம் வைஷ்ணவி காலிலே ஒரு தாமரை பூ. அதிலே இருந்து தான் வைஷ்ணவிக்கு அவ்வளவு அமோஹம். அவாளுக்கு குல தெய்வமே வன சங்கரி தான். வன துர்கை… ஜி: பனஷங்கரி… ஸ்ரீ ராக: அதாவது எங்காத்துலே துர்கை இருக்கா. பெரியவாளுக்கு ரொம்ப ஈடுபாடு. ஜாத சூலே க்கு … வித்யாசமா எங்காத்துலே அம்பாளுக்கு கபால சூலம் இருக்கும். ஜாத சூலத்திலே கபாலம் கிடையாது. அது பத்தி எங்க அப்பாவுக்கு ஒரு WORRY யும் கிடையாது. இருந்தாலும் ஒரு QUESTION. ஏன் இப்படி இருக்குன்னுட்டு… முத்துஸ்வாமி தீக்ஷிதர் எங்காத்துக்கு வந்து பாடி இருக்கார். ஸ்ரீசூலினி ன்னு… அதுலே ப்ரம்ம கபாலினின்னு வரும் இடையிலே… அதனால எங்க அப்பாவுக்கு ஒரு நெருடல்… மத்வ சாஸ்த்ரத்துலே வேற எதோ வர்ணனை சொல்லி இருக்கே. இது வேற தினுசா இருக்கே ன்னு…பெரியவா எங்க அப்பா கிட்டே, மூக பஞ்சசதீ ல ஆர்யா சதகம் அதுல தொண்ணூத்து மூணாவது ஸ்லோகம் எடு ன்னா… அதுல பார்த்தா… காமாக்ஷி சீலே த்வாம் (கனக மணி கவித பூஷாம் என் காமாக்ஷி தான் உன் சூலினி ன்னா அப்ப அப்பா கிட்டே …பெரியவா… ராமேஸ்வர் யாரையோ அனுப்ச்சு அவர் வந்து பார்த்தார். எங்க அப்பாவுக்கு அது கீழே ஏதோ எழுதி இருக்கு ன்னு சந்தேகம். எழுத்து புரியலே. பழைய கிரந்தமோ ன்னுட்டு. அத பெரியவா கிட்டே சொல்லிருக்கா. பெரியவா ராமேஸ்வர் கிட்டே ரெண்டு மாசம் கழிச்சு சொல்லி, அவர்,ஒரு ARCHAEOLOGY யோ என்னவோ ஒண்ணு, தெரியாது எனக்கு, ஒரு IAS, ஒத்தர் வந்தா. அவர் அந்த விக்ரஹத்தை பார்த்துட்டு, இது எண்ணூறு வருஷத்துக்கு மேலே ஆறது. ஜடா வர்ம பாண்டியன் காலத்து விக்ரஹம். அவன் காலத்துலே கேரளாவும்,பாண்டிய தேசத்திலே சேர்ந்து இருந்தது. அதனால நீங்க மலையாளத்துல இருந்து வந்தது ன்னு சொல்றேள். வாஸ்தவம். சரியா இருக்கலாம் ன்னார் அவர். ஒன்னும் இல்லேன்னார். என்னோட முன்னோர்கள் வந்து, அவா, நர்மதாதீரத்திலே வந்து,சூலினி துர்க்கையை தான், குத்துவிளக்கு ஏத்தி, தீப த்தல ஆவாஹனம் பண்ணி பூஜை பண்ணினவா. முன்னூத்து அம்பது வருஷம் முன்னாடி, வேதமூர்த்திங்கறவர் சிதம்பரம் வந்தார். அங்கே ஒரே களேபரம், MUSLIMS … அடிச்சி பிடிச்சி ஓடி வந்ததிலே…நாம்ப எல்லாம் அப்படி ஓடி வந்தவா தான். வடமான்னு பேரு…அதுல ஒளத்தர வடமா ன்னு விசேஷமா…உத்தர தேசத்திலே இருந்து வந்தவா ன்னுட்டு. அவர் சிதம்பரத்திலே செட்டில் ஆனார். வேதமூர்த்தின்னு பேரு. அவர் சமஸ்கிருதத்திலே தான் பேசுவார். தமிழே தெரியாது. இப்பவே எங்களுக்கு பல CUSTOMS இங்கே இருக்கறது கிடையாது. சுமங்கலி பிரார்த்தனை பண்ண மாட்டோம். கிராம தேவதை கிடையாது. வரலக்ஷ்மி கிடையாது. எல்லாம் கிடையாது. அப்புறம் அவருக்கு எண்பது வயசு இருக்கச்சே, மலையாள தேசத்திலே இருந்து ஒரு நம்பூதிரி, ரயில் எல்லாம் கிடையாது..தலையிலே இந்த அம்பாளை தர வெச்சு கட்டிண்டு, வந்தான். வந்துட்டு, யக்ஞம் பண்றச்சே பூமியை உழுதேன். அப்போ இந்த அம்பாள் அகப்பட்டா. சீதை மாதிரி. நான் பூஜை பண்ண ஆரம்பிச்சேன். ஒனக்கு இல்லே இவ, சிதம்பரத்துல புது தெருவுல ராம சாஸ்த்ரி ன்னு இருக்கான். அவன் வீட்டுக்குத்தான் வந்திருக்கேன்ன்னா அவ. ஏன் அங்கே வந்தா ன்னு தெரியாது. என்னமோ வந்தா… அப்புறம் அவருக்கு பயமா இருந்தது. ஒனக்கு சொன்ன அம்பாள் எனக்கு சொல்லலியே. மலையாளத்துலே இருந்து வந்திருக்கே. மலையாள மாந்தரிகம் ன்னு சொல்லுவா. துர்கையை கொண்டு வந்திருக்கே. எனக்கு பயமா இருக்கு. புள்ளகுட்டிக்காரன். வாங்கிக்க மாட்டேன் ன்னார். அன்னிக்கு அப்போ அம்பாள் ராத்திரி அவர் சொப்பனத்திலே வந்து, ‘என்னடா உன்னை தேடிண்டு நான் வந்திருக்கேன்,போக மாட்டேங்கறே…என்னால ஒனக்கு என்ன கெடுதல் வரும்’ ன்னு கேட்டு இருக்கா… ஒனக்கு என்ன ஆராதனை பண்ணுவேன், என்ன நெய்வேத்தியம் பண்ணுவேன் ன்னு எல்லாம் கேட்டு இருக்கார். நீ எனக்கு பழையதை வெச்சு நெய்வேத்தியம் பண்ணு. போறும். இருபத்தொரு தலைமுறைக்கு நான் GUARANTEE ன்னு சொல்லி வந்தவோ அவோ. ஜி: இப்பவும் அங்கே, புதுத் தெருவிலே இருக்கா? அந்த அம்பாள்? ஸ்ரீ ராக: இருக்கா…என் தம்பிக்கிட்டே இருக்கா. அவன் தான் பூஜை பண்ணிண்டு இருக்கான். என் சித்தப்பா புள்ளே, துரை… அம்பத்தூர்ல இருக்கா (பின்னிருந்து குரல்)… அசாத்திய சான்னித்யத்தோட இருக்காள். தக தக ன்னு மின்னுறா ன்னு அன்னிக்கு கூட சொல்லிண்டு இருந்தான். அம்மா அவ கிட்டே நிறைய பாடி இருக்கா…ஸ்ரீ சாமுண்டேஸ்வரி தான் முக்யமா பாடுவோ… ஜி: இப்போ அம்பத்தூர்ல இருக்காளா அம்பாள்? அம்பாள் எங்கே இருக்கா? ஸ்ரீ ராக: துரை கிட்டே தான் இருக்கா. அம்பத்தூர். கௌரிக்கு தெரியும்… வீட்டில வெச்சு பூஜை பண்ற விக்ரஹத்திலே நான் அவ்ளோ அழகா வேறே எங்கேயும் பார்த்ததில்லே…ஏதோ அன்னபூரணி ன்னு வெச்சு இருப்பா. சொட்டும் அழகு… |
வைத்யநாத பெரியவா ஜி: நீங்க பெரியவாக்கிட்ட அபூர்வமா,அமானுஷ்யமா எதுவும் பார்த்து இருக்கேளா? பெரியவாளோட INTELLIGENCE ஐ பார்த்து இருக்கேள். BUT அமானுஷ்யமா… ஸ்ரீ ராக: மத்தவா சொல்லி கேட்டிருக்கேன். நிறையா…எனக்கும் சில சமயம்…ULCER இருந்த போது…எங்கம்மாவுக்கு ULCER வந்த போது பெரியவாளால தான் CURE ஆச்சு. ஜி: என்ன ஆச்சு? எப்படி ஆச்சு? ஸ்ரீ ராக: ULCER வந்து இருந்தது. OPERATE பண்றப்ப DOCTORS க்கு DIFFERENT OPINION. ரெண்டு DOCTOR க்கு. மோகன் ராவ் ன்னு ஒரு பெரிய சர்ஜன். அவர்ட்ட போலாம்ன்னா…நாங்க போற டாக்டர் வாயிலே வந்த படி எல்லாம் பேசுவர். WIDOW வை அவனுக்கு தானம் பண்ணிடு…அவனுக்கு SURGERY-யே தெரியாது. யார்கிட்ட போறது என்ன ன்னு கேப்பார்… அப்ப பெரியவா தர்ம பிரகாஷ் ல வந்திருக்கா. அப்போ தான் வந்திருக்கா. முதல் பூஜைக்கு நான் போய் உக்காந்திருந்தேன். எங்கேயோ பின்னாடி இருந்தேன். பூஜை முடிஞ்சவிட்டு, இங்கே வேம்பு ன்னு பெரியவாளுக்கு கைங்கர்யம் பண்றவன் ஒத்தன், அவன் ஜாடை காட்டி இப்டி இப்டி வா வா ன்னான். என்னை வர சொல்றான் ன்னே புரியலே. பக்கத்திலே இருந்தவா எல்லாம் உங்களைத் தான் போல இருக்கு ன்னா.போனோம். பெரியவா ஒண்ணும் சொல்லலே. ஒரு தேங்கா மூடி நிறைய குங்குமத்தை போட்டு இப்டி இப்டி ன்னு பண்ணிட்டு போயிட்டா…அன்னிலே இருந்து ULCER நன்னா குணம் ஆயிடுத்து…ஆனா, நிறைய பேருக்கு நிறைய பண்ணி இருக்கா… ஜி: அப்படியா…அம்மாவுக்கும் இருந்துதா? ஸ்ரீ ராக: அம்மாவுக்கும் இருந்தது. எங்க அம்மா பதினெட்டு வயசிலே இருந்து சாப்பிடாம இருந்தவோ. தினம் ரெண்டு வேளை காப்பி சாப்பிடுவோ. ரெண்டு வேளை பால் சாப்பிடுவோ. அவ்ளோதான். ஜி: உங்க அம்மா வந்து, நாராயணன் அம்மாவோட தங்கையா? ஸ்ரீ ராக: நாராயணன் பெரியம்மா. அக்கா.. ஜி: நாராயணன் அம்மாவுக்கு அக்காவா? ஸ்ரீ ராக: அக்கா. அதோட, சகல காரியமும் பண்ணுவோ. சாப்பாடு கீப்பாடு இறக்க முடியலைன்னா அம்மாவை தான் கூப்டுவா. அவ சமைப்போ. அவளுக்கு ULCER வந்தது. அவ எப்படி அப்படி இருந்தான்னெ புரியலே அவாளுக்கு. எங்க அக்காவை pregnant ஆ இருக்கறச்சே, இந்த third, fourth , month vomit பண்ணுவாளே. அதும்போது ஆகாரம் நின்னே போயிடுத்து. அப்புறம் அவளை டாக்டர் குரு சாமி ஐயர் கிட்டே அழைச்சிண்டு போனா. ரொம்ப FAMOUS. அவ சாப்பிடறதை நிறுத்தி பன்னெண்டு வருஷம் கழிச்சு. அவர் பார்த்துட்டு TWELVE YEARS இதோடயே இருக்காங்கறேள். MEDICAL TEST பண்ணி எதுவும் ஒண்ணு கிடக்க ஒண்ணு ஆயிடும். அதும்பாட்டுக்கு நடக்கற படி நடந்துட்டு போகட்டும் ன்னு விட்டுட்டார் அவர். ஜி: என்ன தான் சாப்பிடுவா, அம்மா? பின்ன? ஸ்ரீ ராக: ரெண்டு வேளை காப்பி, ரெண்டு வேளை பால்…அவ்ளோதான். அதுக்கப்புறம் நாப்பத்து நாலு வருஷம் இருந்தா அவ அப்படி. அவளுக்கு ULCER OPERATION இத மாதிரி தான் வந்தது. அதுக்கப்புறம், கல்கி சதாசிவம் மாமா க்கு தங்கம்மாள்-னு மருமாள்…அவர் என்கிட்டே பெரியவா கிட்டே சொன்னேளா ன்னார். இல்லேன்னேன். என்ன கார்யம் பண்ணிட்டேள், உங்களுக்கு? எப்படி சொல்லாம இருப்பேள். இளையத்தாங்குடி ல இருந்தா பெரியவா. போன் போட்டு கேட்டா. பெரியவா யார்கிட்டயோ பிரசாதம் கொடுத்து அனுப்பிச்சா. அம்மாவுக்கு சரி ஆயிடுத்து. எவ்ளோ பேருக்கு சரி ஆயிருக்கு. |
Innocent & Knowledge பெரியவா ஸ்ரீ ராக: பெரியவா இருந்தா….ஒரே சமயத்திலே INNOCENT ஆவும் KNOWLEDGE ஆவும்…இருந்தா… அண்ணங்கராச்சாரியார் கிட்டே பெரியவா கேட்டாளாம்… இந்த சௌஸீல்யம்,சௌலப்யம் ன்னு இரண்டு சொல்றேள். சௌலப்யம் ன்னா ரொம்ப EASILY ACCESSIBLE …புரிஞ்சுது… சௌஸீல்யம் ன்னா என்ன ஸீலம் அது? விசப்த ஸீலம் ன்னு அதுக்கு அவர் VAISHNAVA STRICTURE ல DEFINITION சொல்ல ஆரம்பிச்சு … அவரே சொல்றார்… ரொம்ப ஒசந்த உத்தம புத்தி. மந்த புத்தியை சகிச்சிக்கிறது தான் சௌஸீல்யமாம்… ஜி: அப்பா…. ஸ்ரீ ராக: முடியவே முடியாது அது. என்னவோ வந்து ஆட்டம் காட்டிட்டு போயிட்டா பெரியவா… |
தொடரும்… |
தாங்கள் அளித்தது அத்தனயும் முத்துகள் . வாழ்க உங்கள் பணி
koduthu vaithavar mr sivaraman. vazha… valarha.
Brilliant…. thanks for sharing. Very nice transcription of the audio…happy to listen to these audios today!
ஜி
இதிகாசம் , புராணம் , குருசரித்ரா , தைவத்தின் குரல் இவற்றை படிகபடிக்க புது புது அர்த்தங்கள் புலப்படும் அதுபோல தாங்கள் அள்ளி தெளிக்கும் பெரியவா முத்துக்களில் சில பொன்னான் விசையங்கள் கடைகின்ரன அதுபோல ஸ்ரீ ரா. கணபதி – அண்ணா நேர்கணலில் அம்பத்தூர் வசந்தி பற்றி சில தகவல்கள் கிடைக்கிறது .அம்பத்தூர் வசந்தி பற்றி மேல் தகவல்கள் கிடைத்தால் கொடுக்கவும் . வாழ்க உங்கள் தொண்டு .
என்றும் அன்புடன்,
அனந்த கிருஷ்ணன்
awesum sivaratri treat !!!!!!!!!
excellent. really great tribute to the divine soul. let us read the kural and try to follow that.thanks
Sir why my comment about my beloved anna ganapti not published?
Namaskaram! There is no comment that has been received other than this from you.
Great ! Thank you for sharing this.
Evlo periya bagyam. Periya Darshanam kuduthu vaikala enaku. Irunthulam avaaloda devotees pathi therinjukura bagyam kidaikkavaithatharku nandri. Jaya jaya sankara hara hara sankara.
I had the Bhagyam to see Anna Sri Ra. Ganapati at his residence in T.Nagar along with two like minded devotees. We did Namskaarams to Him. He was simply dressed in 4 muzha veeshti and a simple white cotton banian like shirt. He enquired about us all in a feeble voice and said he was not well. We sat facing Him in silence for a few minutes, did Namaskaaram and took leave of Him. The Mahan has written extesively about Maha Periyava and what is there to talk? However when we hear Anna’s Voice again and His Views on Maha Periyava, tears come to our eyes in remembrance. What did Anna want of us? Listen to Maha Periyava’s Upadesams and be better people. That is the least we can do for Him! Great service you have done in releasing Anna’s Voice. You have put “Thodarum” I hope more recordings will come in future. Like Periyava Kural CDs, Anna Kural CDs also should come as a full compilation of available recordings. Jaya Jaya Shankara, Hara Hara Shankara!
Namashkaram… Thanks a lot for posting this interview. Feel blessed to hear the voice of such a great devote of Shri Mahaperiyava… Once again thanks ….
Deivethin kural I consider is a milestone writing and while reading the book even today we all feel that
Periyava himself delivering the discourse in front of us.Gratitude is the only opt word to Sri.R.Ganapathy
for compiling,writing and gifting these books to us.
I happened to go thro’ this. In the transcription of Anna’s talk, he mentions a sloka
The last line must read : Niraasrayam maam jagadeesa raksha and not as stated
by you. Long back, Anna has asked me also to repeat this sloka.
Is there any follow-up of the audio ? I shall be delighted and grateful if u oblige me.
Happy and grateful for yr noble service.
Affly.,
Mohana Raman
One should be blessed to read all the seven volumes of Deivathin Kural. Am happy that I am blessed.
My first motivator Karthik Nagaratnam. Second one is one mama in kanchi mutt who sells books motivated me to read in tamil when I enquired for Voice of God .
Mama told if read in Tamil ‘periyava pesara mathiri irukkum’ . Informally learnt tamil language in childhood which helped in reading Deivathin Kural. Periyava transformed me.