காஞ்சிபுரத்தில், எண்ணியது நிறைவேறும்!
ப்ரஹ்மஸ்ரீ வேதபுரி மாமா, ஒருநாள் பெரியவாளிடம் கேட்டார்…..
“காஞ்சிபுரத்தை ரொம்ப விஸேஷமான ஸ்தலம்-ன்னு சொல்றாளே? ஏன் பெரியவா?…”
“பரமேஶ்வரன், அம்பாள், மஹாவிஷ்ணு, பிள்ளையார், முருகன்-ன்னு எல்லா தெய்வங்களும் இங்க…காஞ்சிபுரத்ல இருக்காடா! இதவிட, காஸிதான் விஸேஷம்-ன்னாலும் காஞ்சிபுரமும், அதுக்கு ஸமமான ஸ்தலம்! ஒனக்குத் தெரியுமோ?……..
…….இங்க, காஞ்சிபுரத்ல ஏழு கொளம் இருக்கு! இதுல….. தெனோமும் ஒரு கொளத்ல ஸ்நானம் பண்ணிட்டு, எல்லாக் கோவிலுக்கும் போயி ஸ்வாமி தர்ஶனம் பண்ணிட்டு, மனஸ்ல வேண்டிண்டா….. நெனச்ச கார்யம் கட்டாயமா நடக்கும்!….”
ஸீரியஸ்ஸாக பேசிக் கொண்டே வந்தவர், திடீரென்று ஒரு நமுட்டு சிரிப்போடு, தன் “குழந்தை” ஶிஷ்யனைப் பார்த்து……
“காஸி-ங்கறதை பிரிச்சு சொல்லு பாக்கலாம்!…”
“கா……..ஸி…..!..”
“பேஷ்! காஞ்சி…..பிரிச்சு சொல்லு பாக்கலாம்”
“கா……ஞ்…….சி……”
“பாத்தியா? பாத்தியா? காஸிக்கும் காஞ்சிக்கும், ஒரு ‘ஞ்’ [inch] தாண்டா வித்யாஸம்!….”
அதிஸயித்தார் ஶிஷ்யர்! என்ன அழகான ‘தங்க்லீஷ்’ ஸ்லேடை!
காஸியில் கபாலீஶ்வரனாய், காஞ்சியில் காமாக்ஷியாய் அருள்பாலிக்கும் நம் காஞ்சிநாதன், அத்வைதாச்சார்யனாகவும் இருப்பதால், நமக்கும் அவருக்கும் அணுவளவு inch கூட ஜீவ-ப்ரஹ்ம பேதம் இல்லாமல் அழித்து, தன்னுருவோடு சேர்த்துக் கொள்ள ப்ரார்த்தனை செய்வோம்.
பெரியவா சொன்ன “காஞ்சிபுரத்தில் உள்ள ஏழு குளங்கள்-வார தீர்த்தங்கள்”
ஞாயிற்றுக்கிழமை: கச்சபேஶ்வரர் கோவில். ஸ்ரீமடத்திலிருந்து பஸ் ஸ்டாண்ட் போகும் வழியில் உள்ளது. இந்தக் குளத்துக்கு எதிரில் ஸூர்ய பகவான் கோவில் உள்ளது.
திங்கட்கிழமை: ஏகாம்பரேஶ்வரர் கோவில்.
செவ்வாய்க்கிழமை: மங்களேஶ்வர் கோவில். ஸ்ரீமடத்துக்கு எதிரில் உள்ளது.
புதன்கிழமை: திருகாளீஶ்வரர் கோவில்
வியாழக்கிழமை: காயாரோகணீஶ்வரர் கோவில்
வெள்ளிக்கிழமை : ஶ்ரீ காமாக்ஷி கோவில்.
சனிக்கிழமை: ஸர்வதீர்த்தம். மஹா பெரியவா, 69-வது பீடாதிபதியாக ஸ்ரீ ஜெயேந்த்ர பெரியவாளுக்கு இந்தக் குளக்கரையில்தான் ஸன்யாஸாஶ்ரமம் அருளினார்.
பெரியவா திருவாக்கில் வந்த இந்த தீர்த்தாடனம் கூட எத்தனை எளிமையானதாக, அதே ஸமயம் அபரிமிதமான பலன்களைத் தருவதாக இருக்கிறது!
Article Courtesy: Gowri Sukumar
A very useful information for and through Sri.Vedapuri Mama. JAYA JAYA SANKARA HARA HARA SANKARA.
This information will be much much important for the people of Kancheepuram. First if they follow this and do accordingly the “Punya” they get will still keep Kancheepuram more Sacred and Peaceful place for all irrespective of religion.
Maha periyava saranam
Hara Hara Shankara, Jaya Jaya Shankara!
Thank you ! Maha periya himself has suggested a simple yet practcal step to all his devotees. My gratitude to you for sharing and publishing!
“Assume that I haven’t got into such a level..” [“எனக்கு… அப்படி… அந்த… நிலை வரேலேன்னு வைச்சிக்கோயேன்!”]
Anushtana Dhatha…
An incident told by Prof. Shri Veezhi Mama…(if I’m right).
Even at the age of 95+ Mahaperiyava used walk to the temple tanks for bathing & doing it as his daily anushtanam. One tank one each day of the week as per the norm.
Looking at his great physical effort to walk such distances, one of the anuka-thondar (Sri Vaitha mama or Kannan mama) has told “Periyava is Eswaran and why such necessity?”. [“பெரியவா ஈஸ்வரன்… இதெல்லாம் எதுக்கு? மடத்திலேயே…”].
They have stopped, as Periyavar looked at them. (Even at that ripe age of 95+ a look of Periyavar used to send shrill through the spine for the senior most Sevaka or the matter of fact to anyone, all the way upto a President/ Kings/ PM).
Mahaperiyava replied that they aren’t necessary ONLY for the one who DO NOT…
– have hunger on time,
– get pain when his foot is pricked with ‘mullu’ (thorn) &
– get disturbed when someone scolds publicly.
Periyava had concluded…
“Assume that I haven’t got into such a level..”
[”எனக்கு… அப்படி… அந்த… நிலை வரேலேன்னு வைச்சிக்கோயேன்!”]
Sevaka was dumbfounded. What will the Sevaka respond other than silence when the ‘Eswara’ says so!
Also, heard that Lord Krishna has told in Gita that even though he has no necessity as a ‘Gnani’ to do any work (anushtana/ swadharma), he still does work. Else the world may follow his inactiveness & deviate from Swadharma.
At the age of 95+ Periyavar took so much pain in order NOT to give us a wrong example. Ha! What to say!
Prayers to that Eswara…MahaPeriyava to bless me to continue the anushtanam (at least for a bare minimum).
Ram. Ram.
Jai GuruDev!
MAHA PERIYAVA PAATHAM SARANAM