போர்வையால் உடம்பை மூடியிருக்கும் பெரியவா
இந்த photoவில் இருக்கும் பெரியவாளைப் பார்க்கும்போது, ஏதோ ஒரு கடுங்குளிர்ப் ப்ரதேசத்தில் ஓர் கடுமையான குளிர்வேளையில் எடுக்கப்பட்ட photoவோ என்று தோன்றியது. முகம் மட்டும் தெரிய, உடம்பு முழுதும் போர்த்திக் கொண்டு இருக்கும் ஒரு வித்தியாசமான photo பெரியவா!
இந்த மாதிரி போர்வையெல்லாம் போர்த்திக் கொண்டு பெரியவா கஷ்டப்படாமல் இருக்கும் உபாயம் சொல்லலாமே என்று தோன்றியது.
இந்த நிழற்படத்திலிருந்து கொண்டு அருள்பாலிக்கும் இந்தப் பெரியவாளைப் பணிந்து, இந்தப் பாடலை சமர்ப்பிக்கிறேன்.
கடுங்குளிர்ப் பொழுதில் காவிப் போர்வையோடிருக்கும் தேவே!
நடுங்கிடும் குளிரைப் போக்க நல்வழி சொல்வேன் நானும் !
அடும்கனல் என்னக் கோபம், காமமே கனன்று இங்கே,
சுடுநெருப்பாகத் தாபம் தகிக்குமென் நெஞ்சுள் வாரும்!
இன்பனி வெளியிருக்க உள்ளே கனன்றிடும் வெம்மை கொண்ட,
என்நெஞ்சுள் வந்துவிட்டால், போர்வையே உமக்கு வேண்டாம்!
தண்பனிக் கயிலை வாசா! அன்பர்கள் வாழ்த்தும் நேசா!
நின்பதம் சரண் அடைந்தேன், என்மனம் உறைவாய் ஐயா!
Thanks to Sri Vishy Nathan for these beautiful verses on HIM.
Beautiful and Divine song resembliny Appaya Dikshithar’s Slokam on Lord ParameSwara! Maha Periyava ThiruvadigaLe CharaNam! Hara Hara Shankara, Jaya Jaya Shankara!
அற்புதம்! அதியற்புதம்!
“பனிமலையின் குளிர்…
பாம்பின் ஈரம்…
கங்கையின் நன்னீர்…
ஹே பரமேஸ்வரா! உந்தன் குளிர் போக
தாபத்தில் தகிக்கும் என் உள்ளத்தில் வரவேண்டும்..”
என்ற அப்பைய தீக்ஷிதரின் அழகான ஆழமான வாக்கைப் போல…
அற்புதம்! அதியற்புதம்!
எதுமிலாது நானிருந்தும், யாசித்தேனும் பெற வேண்டும்,
யாதுமாகி நின்றோனின், இனையற்ற கழலடியை!
Ram. Ram.
Jai GuruDev!
Arputhamana varigal!. Jaya Jaya sankara Hara Hara sankara.. Ellarayum rakshikkanum periyava.. We don’t know anything in this Maya filled world.
Um ne chil naan uraiya vazhi kandal en jenmam saabalyame.
Guru(kuru) muniye, kuzhandhi emai alai kazhikkamal atkondarulvaye, param porule parama Kadunamoorthiye
வாரும் ஐயனே என்னுள்ளே என்றழைக்க
பாவியேன் ஆசைப்படலாமோ – உள்ளமதில்
காம குரோத கசடு நிறைந்திருக்க
எத்தால் துலங்கும் மனம் ?