ஸ்ரீ சிவன் சார் – பெரியவா : இரண்டல்ல, ஒன்றே !
ஒருமுறை சென்னை விருகம்பாக்கத்தில் சங்கர நேத்ராலயா திரு சிவராமன் இல்லத்தில் ஸ்ரீ மஹா பெரியவாளின் மகிமையை உபன்யாசம் செய்யச் சென்ற பொழுது, சிவராமனும் அவர் துணைவியார் திருமதி கௌரியும் ஸ்ரீ சிவன் சாரின் மகிமைகளை சொல்லி உருகக் கேட்டு மனம் நெகிழ்ந்தது. சாரின் திருவுருவப் படத்தையாவது வாங்கிக் கொள்ளலாம் என்று ஆவலாய்க் கேட்டேன். உடனே திருமதி சிவராமன் தனது பையில் கையை விட்டுத் துழாவினார். கையில் அகப்பட்டதோ ஸ்ரீ மஹா பெரியவா படம், மறுமுறையும் முயற்சிக்க, மீண்டும் பெரியவா படமே வந்தது. சாரின் படம் அகப்படாத அம்மையார், ‘என்ன, உங்களுக்குப் பெரியவா தான் திரும்ப திரும்ப வரா, அவாளையே வச்சுக்கோங்கோ,’ என்று கூறி பெரியவா படத்தையே கொடுத்தார்.
ஏன்? சார் என்னிடம் வரக்கூடாதா? எனக்கு அந்தத் தகுதியோ, பாக்கியமோ இல்லையா? என்று என் மனம் எண்ணியிருக்க வேண்டுமல்லவா? ஆனால் அது தான் நடக்கவில்லை. ‘ஓ! இரண்டும் ஒன்று என்று உணர்த்த இப்படி ஒரு விளையாட்டா?’ என்றே என் மனம் நெகிழ்ந்தது. மேலும் மஹா பெரியவா என்னை விடாப் பிடியாகப் பிடித்துக் கொண்டிருப்பதில் மகிழ்ச்சி. இது ஏதோ என் கற்பனை, சமாதானம் என்று எண்ண வேண்டாம். confirm ஆன சத்தியம். இன்னும் ஒரு நிரூபணம் இதோ:
ஸ்ரீ சிவன் சாரின் சிஷ்யர்களில் ஒருவரான திரு சுப்புணி, ஸ்ரீ சாரிடம், ‘உங்க அண்ணாவைப் பார்க்க எப்போ அழைத்துப் போகப் போகிறீர்கள்?’ என்று தொடர்ந்து மூன்று வருடம் மன்றாடி வந்தார். ‘என்னை பாத்துட்டயோல்லியோ? அது போதும். அண்ணாவைப் பாத்த மாதிரி’ என்று அவரிடம் சார் கூறிவிட்டார். இறுதி வரை சுப்புணி மஹா பெரியவாளை பார்க்கவே இல்லை. ‘சிவா – பெரியவா இரண்டல்ல, ஒன்றே’ என்பது பலருக்கு புதிய விஷயம்; எனவே இன்னும் ஒரு சான்று.
டாக்டர் பத்மா சுப்ரமணியத்தின் அண்ணா திரு. பாலகிருஷ்ணன். அவரும் அவரது சகதர்மிணியும் ஒரு முறை ஸ்ரீ மஹா பெரியவா ஜயந்தி அன்று காஞ்சிபுரம் போக முடியாத சூழ்நிலை. ஸ்ரீ சார் அவர்களை நமஸ்காரம் செய்து, ‘சார், இன்னிக்கு பெரியவா ஜயந்தி. பெரியவளை நினைச்சுண்டு சாருக்கு நமஸ்காரம் செய்யறோம்.’ என்று சொல்லி நமஸ்காரம் செய்ய, ‘நீ இங்க செய்யற நமஸ்காரத்த பெரியவா அங்க தனக்கேன்னு ஏத்துண்டுட்டா’ என்றார்.
சாத்தூர் ரமணனிடம் ஃபோட்டோ கண்ணன் ஸ்ரீ சிவன் சாரின் புகைப்படம் ஒன்றைக் கொடுக்க, அதை எடுத்துக் கொண்டு மஹா பெரியவாளிடம் சென்றார் ரமணன். கையிலிருந்த படத்தைப் பார்த்த பெரியவா, ‘அது யாரு தெரியுமோ? என் தம்பி, வீட்டில் பூஜையில் என் படத்தை எங்கு வைத்திருக்கிறாயோ அதற்கு பக்கத்தில் வைத்துக் கொள்’ என்று உத்தரவிட்டார்.
இருவரும் சமம் என்று தெரிவிக்க இதற்கு மேலும் வேண்டுமா?
நன்றி: சிவ சாகரத்தில் சில அலைகள் புத்தகத்தில் ஸ்ரீ கணேச சர்மா அவர்கள்.
ஸ்ரீ சிவன் சார் அவர்களின் ஜயந்தி எதிர் வரும் அக்டோபர் 7 ஆம் தேதி சென்னையில் வெகு விமர்சையாக நிகழ இருக்கிறது. பக்த அன்பர்கள் பெரியவா – சிவா அருளுக்கு பாத்திரர் ஆகுக…
Article Courtesy: Thanks a lot to Sri Karthikeyan Nagaratnam for this beautiful article.
Guruve Charanam
” Angenna enna ingenna enna.. ” Seshadri Swamigal- Ramana Maharshi equation thaan ninaivukku varathu.
One of many who have missed the Dharshan of Sri Sivan Sir. Seeking HIS blessings.
I missed the dharshan
Guruve Charanam
Hara Hara Shankara, Jaya Jaya Shankara! Maha Periyava ThiruvadigaLe CharaNam! Sivan Sar ThiruvadigaLe CharaNam!
Om Shri Gurubhyonamaha! Jaya Jaya Sankara! Hara Hara Sankara!
two manifestations(or evn multiple manifestations) of one divine power – Om sivaya namaha