இன்னொருமுறை அவதரித் தருள்வாய்
முன்னொரு தெய்வமின்றி முதலான முழுபொருளே!
பின்னொரு பிறவியின்றி வேரறுக்கும் வேந்தனே!
கண்ணொரு புலனிருந்தும் காணாமற் விட்டேனே!
இன்னொருமுறை அவதரித் தருள்வாய் பெரியவாவே!
தன்னைவுண்ணும் தற்பெருமை தடுத்தென்னை இழுத்திடவே
என்னையுண்ணும் கருமத்தை என்னவென்று எதிர்கொள்வேன்?
விண்ணைவுண்ணும் அற்புத ஆகாச பெருவொளியே!
என்னையுமுண்டு ஜீரணிப் பாய் எங்கள் பெரியவாளே!
முன்னமன்று மூவுலகும் படைத்திட்ட நாயகனே!
நன்னியோருக்கு வரதனே! நடமாடும் தெய்வமே!
நன்றியோடு ஞாலமுமே தொழுதேத்தும் நாயகனே!
இன்றெந்தன் கலிதீர்ப்பாய் எங்கள் பெரியவாளே!
பின்னிய பாசத்திலே புண்ணியம் ஏதுமின்றி
பண்ணிய கருமத்தினால் காலம் போகுதையா!
விண்ணையும் விஞ்சும் காருண்ய பெருமலையே
தண்ணிய பார்வையாலே காப்பீர் பெரியவாளே!
இன்னதென்று பாராமல் கருணையாய் கொட்டுமைய்யா!
என்னவென்று உரைப்பேன் என்னெஞ்சில் உள்ளபாரம்?
கண்ணேதும் தெரியாமல் கிடக்கின்றேன் காலமெல்லாம் – நீர்
சொன்னதேதும் செய்யாமலே சரண்புகுந்தேன் உம்மிடமே!
அனுஷத்தில் வந்துதித்த ஆதியந்த ஸ்வரூபனே!
நிமிஷத்தில் அனுக்ரஹிக்க முந்திவரும் நாதனே!
சர்வக்ஞ பீடத்திலேகும் சதாசர்வ வ்யாபியே!
சர்வேஸ்வரனே! சத்குருநாதனே! சரணமய்யா சரணம்!
Thanks to navEdaham – Ardent Devotee of Periyava and Sri Sivan SAR And a disciple of Triplicane Periyava for these beautiful verses on HIM.
Periyava undu illai yena aagi vida indre ingu arul thaa…..sathya varigal!!!!
Yaar Chonnaar Periyavaa Endrillai yendru, Naam Swasikum Mootchiniley Periyava undu. Manidar Piravi Peni Theera Vandhudhitha Thava Puthalva, Dharani potrukindra Aanushathil Perandhu endrum Kanchiyil Varuvor kindrum Aroopiyaai Varam Aalikum Thava Thiruvey Periyavaa Potri potri.
Aha! Wonderfully said. NamaskArams for that blessing.
Fully agree with you. At times, my heart still longs for this physical eyes to see Periyava in ‘moving form’, who smiles at us, who hear our silly prayers with profound ‘Karunyam’ & who bless with the Abhaya-Hastham…that is also my… என்னெஞ்சில் உள்ளபாரம்?
Haven’t got that bhakthi, which many of you have. My anantha-koti NamaskAram to you all & to Periyava to bless me the same.
Ram. Ram.
Jai GuruDev!
Navedaham sir….
My sashtanga namaskarams for your poem….. It completely depicts the inner feelings of mortals ( I beg to differ that we can’t say ourselves to be his sishya) like us…
Please invoke all the blessings of MahaPeriyavaa in you, to drench us in eternal grace of MahaPeriyavaa…
Namaskarams…
Ramesh/ ICF