![]() |
![]() |
---|
பெரியவாளின் குரு “கலவை பெரியவா” பூர்வாஸ்ரமத்தில் நம் பெரியவாளின் சொந்த பெரியம்மா பையன். அவருடைய பூர்வாச்ரம பெயர் லக்ஷ்மி காந்தன்.
பெரியவாளின் திருவாக்கால் அவருடைய அண்ணாவும், சன்யாச குருவுமான கலவை பெரியவாளை பற்றி சொன்னார். “விஜயநகர சாம்ராஜ்யத்ல ஒரு பகுதியா சேவப்ப நாயக்கர் வம்சத்தவா, தஞ்சாவூர் பிரதேசத்தை ராஜ்ஜியம் பண்ணிண்டு இருந்தப்போ, எங்க அம்மா வழி பாட்டனார் கோவிந்த தீக்ஷதர்தான் மந்திரியா இருந்தார்.. நாங்க கன்னட ஹொய்சள பிராமண வம்சம். தாத்தா கோவிந்த தீக்ஷதர் 72 மேளகர்த்தா ராகங்களை அமைப்பில் கொண்டு வரும் famous புஸ்தகம் “சதுர்தண்டி பிரகாசிகா” வை இயற்றிய வேங்கடமகியின் தோப்பனார். நம்ம மடத்துல 62 , 64 வது ஆச்சார்யாள்ளாம் கோவிந்த தீக்ஷதரின் வம்சம்.
அண்ணா ரொம்ப சாது. அவரோட அப்பா நரசிம்ம சாஸ்த்ரி எட்டு வயசுல அண்ணாக்கு உபநயனம் பண்ணிவெச்சு வேத அத்யயனத்த ஆரம்பிச்சுட்டார். ஆனா அண்ணா ரொம்ப சிறு வயசிலேயே தகப்பனாரை இழந்துட்டார். நம்மாத்துலதான் இருந்தார்….நாங்கள்ளாம் கொட்டம் அடிப்போம், அண்ணா சாதுவா இருந்துண்டு இருப்பார். அவர் மௌன பார்கவ கோத்ரம். அதை சொல்லி, சொல்லி, “அதுக்கேத்த மாதிரி மௌனி, மௌனி”ன்னு தமாஷ் பண்ணுவோம். அவருக்கு நேர் மாறா, இங்க எங்காத்துலயானா, அப்பா சர்கார் உத்தியோகம்.
அதுபோக, பாக்கி நேரமெல்லாம் ஆத்துல சங்கீத கச்சேரிதான். நானா? ஸ்கூல், ஸ்கூலா திண்டாடிட்டு, கடசில அமெரிக்கன் மிஷன் ஸ்கூல்ல படிச்சிண்டிருந்தேன். அண்ணாதான் பூர்ண வைதீகம். அவர் இங்க்லீஷ் படிப்பே படிச்சதில்லே. நாங்கள்ளாம் வேணும்னே அவர்கிட்ட ‘தஸ் புஸ்’ ன்னு இங்க்லீஷ்ல போட்டு பொளப்போம். அவருக்கு இங்க்லீஷ் தெரியலைன்னு பரிஹாசம்கூட பண்ணுவோம். ஆனா,அவர் பாட்டுக்கு சிரிச்சுண்டே இருப்பார். நாங்க டிராயர், ஷர்ட் கோட்டெல்லாம் போட்டுண்டு அமர்க்களப்படுத்தினாலும், அண்ணாக்கு கொஞ்சங்கூட இந்த டிரெஸ் சபலம் கெடையாது.
பால்யத்துலேயே அப்படியொரு மனஸ் கட்டுப்பாடு. சாந்தி, தாந்தி ரெண்டுமே அவருக்கு ஸ்வபாவிகமாவே இருந்தது. பரங்கிப்பேட்டை சாயபுமார்கள்ளேர்ந்து சகல விதமான ஜனங்களும் நம்மாத்துல அப்பாக்கு friends . அதுவும் அம்மா வெறும் நாள்லயே ஏறக்கொறைய தெவச மடி பாக்கறவதா..ன்னாலும் அப்பாக்காக கொஞ்சம் முற்போக்கா இருப்பா. அண்ணா சிறுவயசானாலும் நெருப்பாட்டம் மடி! எங்காத்துலதான் இருப்பார். ஆச்சார்யாளோட பீடத்ல ஒக்காரணும்னா…..எவ்வளவு வைதீக பரிசுத்தி வேணுமோ, அவ்வளவும் அண்ணாக்குதான் இருந்தது. பின்னே, ஏன் அத்தனை சுருக்க ஆச்சார்யாள் அவரை தன்கிட்ட எடுத்துண்டுட்டார்ன்னு யோஜிச்சு, யோஜிச்சு பார்த்திருக்கேன், முடிவா என்ன தோணித்துன்னா, வரப்போற அவைதீக பிரளய சமூஹத்துக்கு, அத்தனை சுத்தரை ஆச்சார்யாளா பெற லாயக்கில்லைன்னுதான் அவரை எடுத்துண்டு, என்னை இங்கே இழுத்து ஒக்காத்தி வெச்சிருக்கார் போலேயிருக்குன்னு! ” சிரித்துக்கொண்டே காலங்களை கடந்து நிற்கும் காலகாலன், தன் சிறுபிராயத்தை நினைவு கூர்ந்தார்.
மஹாத்மா ஸ்ரீ கோவிந்த தீக்ஷதரின் வம்சத்தில் நாலாவது முறையாக பீடாதிபத்யம் வஹித்தவர் நம் உம்மாச்சி தாத்தா !!!
Article Courtesy: Sri. Sridharan Krishnamurthy
Sri Sri Kalavai periyava’s poorvasrama name should be LakshmiKanthan from what I remember and Periyava used to refer to him as “Kanthan ” anna
Thanks for correcting Sir…
Thanks to Periyavaa. My namaskarams to you
Periyavalin thiru vakkinal Periyavalin periyavalaiparri therinthu kolvathil ethanai anandamide
Periyaval pichai
Bharathi Ramachandran
Very pleasant to re-read it. I request you to make reference about the author of this article. This was written by Sri Ra Ganapathi, an evolved and a very great soul. Sri Maha Perivaa had immense understanding and faith in Sri Ra. Ga and transmitted all His thoughts whatever necessary and allowed Ra.Ga to expand in a beautiful narrative. Perivaa let His grace fall on Ra Ga fully to be instrumental in writing all the seven volumes of Deivathin Kural and various scintillating experiences, that are authentic. No exaggeration.
Once the mother of kalavai periyaval came to have darshan of Maha periyaval. After the samadhi of kalavai periyaval ,she prayed and blessed that Mahaperiyaval should have the full “ayush” of 100 years to live fully
The years left un lived by the kalavai periyaval
Avarooda. Ayusyaum. Seethu Neengga. Erukkannum
Perhaps that wish. Had come true for 100 years. Life for. Our great guru
Scintillaing to know this. What a Sacrifice Sri Kalavai Periyaval Performed? He took Sanyas when the AcharyaL took suddenly ill, Cared for Him throughout His illness, Took the illness on Him also and Merged with Brahman in a few days, paving the way for Maha Periyava to take over the reigns of the Sri Matham. Little doubt that the Noble Soul, Sri Kalavai Periyava’s Mother’s Blessings to Maha Periyava on Longevity bore fruit. It is our Blessing also. Hara Hara Shankara, Jaya Jaya Shankara!