Sivam Subham with Paramasivam

Sivam Subham with Paramasivam

mss-namaskaram-mahaperiyava

Photo: MS Amma & Sadsasivam Mama doing Padha Poojai To Periyava At Kalki Office


எம்.எஸ் இன்று நூற்றாண்டு விழா 16-09-2016
ஸ்பெஷல் போஸ்ட்-வரகூரான்.

சொன்னவர்-ரா.வீழிநாதன்
நன்றி-பாலஹனுமான்

மகாபாரதத்தில் பீஷ்மர், துரோணர், கிருபாசார்யார், சல்யர் — இந்த நான்கு பேரும் பீஷ்ம பர்வத்தில் சொல்கிறார்கள்:

“மனிதன் செல்வத்துக்கு அடிமைப்பட்டவன். செல்வம் ஒரு போதும் மனிதனுக்கு அடிமைப்படாது. இது சத்தியம். நான் செல்வத்தினால் திருதராஷ்டிர புதல்வர்களால் கட்டுப்பட்டுவிட்டேன்” என்கிறார்கள்.

இந்த உலக நியதியை முறியடித்தவர் எம்.எஸ். செல்வத்துக்கு இம்மியும் கட்டுப்படாமல் அதனைத் தனக்குச் சேவகம் செய்ய வைத்தார்.

செல்வம் சம்பாதித்து, அதிலே கொஞ்சம் தனக்கென வைத்துக்கொண்டு தர்ம காரியம் செய்கிறவர்கள் நிறைய பேர். ஆனால் தர்மம் பண்ணுவதற்காகவே சம்பாதித்தார் எம்.எஸ்.அம்மா. அத்தனையும் தர்மத்துக்கே கொடுத்தார்.

இவ்வளவு தர்மம் செய்துவிட்டு அதைச் ‘செய்தேன்‘ என்று சொல்லிக்கொண்டால் அது அழிந்து போய் விடும் என்பது வேதவாக்கு.

எம்.எஸ்.அம்மா ஒரு போதும் தமது தர்ம காரியங்கள் பற்றிப் பேசியதில்லை; தப்பித் தவறிக் கூட பேசியதில்லை. அவ்வளவு ஏன்… தர்மம் பண்ணினேன் என்று அவர் நினைத்தது கூட இல்லை. அந்த எண்ணமே இல்லாமல் வாழ்ந்தார்.

“தாமரை நன்றாக வளர வேண்டுமானால் தண்ணீர் தெளிவாக, பரிசுத்தமாக இருக்க வேண்டும்; தண்ணீர் தெளிவாக இருக்க வேண்டுமானால், தாமரை அதிலே வளர வேண்டும்”  என்கிறது யோக வாசிஷ்டம் (ஸ்ரீராமருக்கு வசிஷ்டர் செய்த உபதேசம் யோக வாசிஷ்டம்).

சதாசிவமும், எம்.எஸ்.ஸும் இந்தத் தாமரையும் தண்ணீரும் போல் திகழ்ந்தார்கள்.

‘காளிதாஸ் ஸம்மான்‘ என்று மத்தியப் பிரதேச அரசு வழங்கிய விருதுடன் ஒரு லட்ச ரூபாய் ரொக்கமும் அளிக்கப்பட்டது. அதைப் பெற்று வந்த அன்றே சதாசிவம் எனக்குப் ஃபோன் செய்து அவருக்கே உரிய முறையில் அழைத்தார்.

“வீழி! கார்த்தால இங்கே காஃபி சாப்பிட வந்துடேன்.”

போனேன். ஒரு லட்ச ரூபாய் பணத்தை அப்படியே மஹா பெரியவர்களிடம் தர வேண்டும் என்று சொன்னார்.

பெரியவர் காதில் விஷயத்தைப்-போட்டபோது,

“பணத்தை வைச்சுண்டு என்ன பண்றது ? எட்வர்ட் அரசன் முத்திரை போட்ட பவுனாக வாங்கிக் கொடுத்துவிடச் சொல்லு” என்று ஆணை பிறந்தது.

அதற்கு இணங்கி அன்றைய விலையில் ஒரு லட்ச ரூபாய் மதிப்புக்குப் பவுன் காசுகள்  வாங்கிச் சமர்ப்பிக்கப்பட்டது..

எம்.எஸ். சதாசிவத்தின் காணிக்கையைப் பெற்றுக் கொண்டவர், ஒரு தட்டு நிறைய குங்குமப் பிரசாத்தைப் போட்டுக்கொடுத்தார். குங்குமத்துக்கு அடியில் ஒரு அழகான பவுன் காசு மாலை.

அவர்கள் சென்ற பின்பு பெரியவர்-சொன்னார்கள். “அவர்களிடம் பவுன் பெற்றுக் கொண்டேன். அவர்களிடமே திருப்பிக் கொடுத்துள்ளேன். நான் கொடுத்ததினால் ‘இனிமே இதை இன்னொருத்தருக்கு தானமாகக் கொடு ’ என்று சதாசிவம் எம்.எஸ்.ஸிடம் சொல்ல முடியாது இல்லையா !”

Article Courtesy: Sri Varagooran Narayanan


{ 6 Comments }

 1. A.Kalyanasundaeram says

  It is more than a pooja to lord siva done by Sadasivam and MS Ihave no words to express my joy when reading this incident Both MS and Sadasivam were blessed couple Our younger generation must surely understand such things so as to imbibe in their mind dedication of MS and her husband Sadasivam so that the children will learn GuruBakthi and the sacrifice of MS towards money at a time when people now are more and more money minded and craving for publicity Thank you for giving an opportunity for reading this article Maha Periyava Thiruvadi kamalangalukku Anaeha kodi namaskarangal

 2. M.Narayanan says

  MS Amma and Sri Sadasivam will ever live in the mind of Asthikaas! Maha Periyava ThiruvadigaLe CharaNam! Hara Hara Shankara, Jaya Jaya Shankara!

 3. V Ramachandran says

  எம் எஸ் அம்மா வீடு சென்று மகா பெரியவா பாதுகைக்கு நமஸ்காரம் செய்து பாடலும் பாடினேன் அம்மா பெரியவா என்ற செல்வத்தை போற்றினார் அந்த அழியாத செல்வத்தால் என்றும் அவர் நம் நினைவில் பெரியவா நாமம் போற்றி

  பெரியவா பிச்சை

  பாரதி ராமசந்திரன் ,

 4. Vp says

  தன் பாதத்திற்கு பூஜை பண்ணுகிறார்கள் ஆனால் தனக்கும் அதற்கும் துளி கூட சம்பந்தம் இல்லை என்பது போல அந்த பரப்ரஹ்மத்தின் ரூபம் அய்யன் ஒருபுறம்

  மஹா ஸ்ரத்தையுடன் பூஜை செய்யும் தம்பதி மறு புறம்…

  மிக அற்புதமான படம்

  மஹா பெரியவா திருவடிகளே சரணம்

 5. JAYASANKARAN says

  One of the most memorable and moving incidents, beautifully narrated by Sri Veezhinatha mama. On the one side, selfless Devotion of MSS and Sadasivam (Adarsa thampathi) to Guru and on the other side, the real Guru, true as Sanyasin who can treat diamond and rock as equal. Only He can master any situation to make it an ever lasting event. By such act, I am sure that the gold coins, perhaps would have remained as the most valuable treasure to the divine couple.

  Gold and Sun Rays are side be side. Dazzling. Pranaams.

Leave a Comment