March 16th 1959 …

அருளுரையா? அறவழியா?
Article By Sri Karthi Nagaratnam

ஐயன் 1959 மார்ச் 16 அன்று சென்னையில் இருந்து விடைபெறும் முன்னர் நிகழ்த்திய உரை நம் பக்த அன்பர்கள் உலகத்தில் FAREWELL SPEECH என்று மிகப் பிரசித்தம்.

periyava 1959

அதனை திரும்ப திரும்ப கேட்டும் கூட, இன்னும் இன்னும் இன்னும் கேட்கத் தான் தோன்றுகிறது, தூண்டுகிறது.

அப்படி என்ன விசேஷம்?

அது FAREWELL அல்ல…

நாம் எல்லாம் FAIR ஆகவும் WELL ஆகவும் எப்போதும் இருக்க ஐயனின் தாய்க் கருணை…

அந்த உரை முழுவதுமே தாய்க் கருணை என்ற அதிமானுட குணாதிசியத்தின் வெளிப்பாடு.

அமானுஷ்யம் மற்றும் அதிமானுஷ்யம் – தெரிந்திருக்கும்…

கண்ணுக்கு புலப்படாத சக்தி அமானுஷ்யம். மானுஷ்யத்துக்கு அப்பாற்பட்டது அமானுஷ்யம். தெய்வம் என்பது அமானுஷ்யம்.

அதிமானுஷ்யம் அப்படி அல்ல, மானுஷ்யத்தில் மிகச் சிறந்தது, உயர்ந்தது.

மனிதரில் புனிதர்கள் அதிமானுஷ்யர்கள்.

ஐயனை எப்படி சொல்லலாம்? இரண்டு விதமாகவும் தான். சந்தேகமே இல்லை…

ஆனால், இவனுக்கு என்னவோ ஐயனை அதிமானுஷ்யராகப் பார்க்கத் தான் மனம் ஒப்புகிறது.

ஏன்?

எங்கேயாவது அவர் தெய்வம்(அமானுஷ்யர்) என்று கூறிக் கொண்டாரா? தன் செயல்களில் காட்டித் தான் கொண்டாரா?

நம்மிலும் ஒருவராக, ஏன், பல சமயங்களில், நம்மிலும், சாதாரண, சராசரிகளிலும் கீழான ஒரு வெகு ஜனராகத் தானே தன் நூறு பிராய சரித்திரத்தில் ஐயன் காட்டிக் கொண்டார்.

இந்த உரையும் அப்படித் தான். விதிவிலக்கல்ல.

ஒரு குழந்தை தாயிடம் தானாகவே தான் செய்த தவறை ஒப்புக் கொண்டு மனம் வருந்தி பேசும் போது, அந்த தாய் என்ன செய்வாள்? நம்மில் பலர் அனுபவித்தது தானே?

பழி எல்லாம் தன் மேல் போட்டுக் கொண்டு, குழந்தைக்கு ஆறுதல் சொல்லி, தவறு உன் மேல் இல்லை கண்ணே என்று சொல்லி தேற்ற முற்படுவாள் அல்லவா?

இங்கே கோடி கோடி பிறப்பு கண்டாலும் காணமுடியாத அந்த அருட்த் தாய் இதைத் தான் செய்கிறாள்.

முன்னால் பேசிய பக்த அறிஞர்கள் பலர் ஐயன் அருளிய அறிவுரைகள் பலவற்றை இதுவரை நாம் பின்பற்றவில்லை. இனிமேலாவது பின்பற்ற அவர் அருள் வேண்டும் என்ற ரீதியில் பேசப் போக…

அங்கே நம் அவ்யாஜ கருணாமூர்த்தி உள்ளே பொத்திப் பொத்தி மறைத்துக் கொண்டு இருந்த அந்த தாய்க் கருணை பீறிட்டுக் கொண்டு வெளிப் படுகிறது. தாங்க முடியவில்லை, அதனால். நீங்களே அந்த உரை முழுவதையும் கேளுங்கள். அதன் சாரம் இது தான்.

‘இப்போதும் சரி, இனி, எப்போதும் சரி, நான் சொன்ன விஷயங்கள் கடைப் பிடிக்கவில்லை என்று நீங்கள் யாரும் மன வருத்தம் அடைய வேண்டாம். அடையவும் கூடாது.

உபதேசம், உபன்யாசம் செய்வதை விட, வாழ்க்கையில் உயர் கொள்கைகளை அனுசரித்து வந்தாலே போதும். அதாவது அறிவுரை சொல்வதை விட, அறவழி செல்வதே சிறந்தது.

நான் தான் உங்கள் அனைவருக்கும் நன்றி பாராட்ட வேண்டும். இத்தனை நாள், உங்கள் அனைவரிடமும் மாலை மற்றும் இரவு வேளைகளில் நல்ல விஷயங்கள், அதில் எனக்கு இருந்த சில சந்தேகங்கள் எல்லாவற்றையும் இப்படி பேசி, பொழுதை நல்ல பொழுதாக ஆக்கிய உங்கள் அனைவருக்கும் தான் நன்றி சொல்ல வேண்டும்.

என்கடமைகளை நான் சரிவர செய்து, என் அனுஷ்டானங்களை நான் விடாமல் சிரத்தையுடன் பின்பற்றினால், அந்த பேரருள் கருணை நிச்சயம் எப்பொழுது, எதை, எங்கே, எவருக்கு அருள வேண்டுமோ, அதனை செய்து விடும். இதற்கென தனியாக அறிவுரை சொல்லிக் கொண்டு இருக்க வேண்டும் என்பதெல்லாம் இல்லை.

நீங்கள் வேறு, நான் வேறா? நாம் எல்லாம் ஒன்றே அல்லவா? நமது கர்மானுஷ்டானத்தால் நம்மில் ஒருவர் உயர்நிலைக்கு சென்றாலும் அந்த உயர்ந்த ஒருவராலேயே நாம் அனைவரும் உய்வோம், உயர்வோமே?’

கண்ணீர் பெருக்கி நிற்கத் தான் முடியும், அந்த தாய் பேசிய பேச்சை கேட்டு, சேய்களான நம்மால்.

அம்மா என்றால் அன்பு…

இல்லை…

ஐயன் என்றால் அம்மா…அம்மா என்றால் அன்பு….

ஆகையால்

ஐயன் என்றால் தான் அன்பு…


HIS  farewell message (Welfare Message per se) can be listened and downloaded from below:

MahaPeriyava Farewell Speech – March 16th 1959 – Sanksrit College , Chennai by Mahaperiyava Puranam on Mixcloud


{ 5 Comments }

 1. Karthi Nagaratnam says

  யானே பொய்என் நெஞ்சும் பொய்என் அன்பும்பொய்
  ஆனால் வினையேன் அழுதால் உன்னைப் பெறலாமே
  தேனே அமுதே கரும்பின் தெளிவே தித்திக்கும்
  மானே அருளாய் அடியேன் உனைவந் துறுமாறே

  வேறு எதுவும் எழுதத் தோன்றவில்லை…இப்படி எழுதினால் கூட அந்த அருட்த் தாய் வருத்தப் படுவாள்…

 2. PALANI.S says

  kanji peryava is doing miracle in every one life and his speeches are very powerful and irrespective of religion/caste mahaperiyava is blessings and one among person myself is being blessed by mahaperiyava on every seconds .
  JAYA JAYA SHAKARA HARAARA SHANKARA
  DEVOTEE
  PALANI.S

 3. says

  Ammayappan, BhagavadpaadhaaL, Maha Periyava and all Mahaans represent the only lasting Principle of Life! Anbu! Let us get drowned in that and get purified and ultimately merge with Brahman! Jaya Jaya Shankara, Hara Hara Shankara!

Trackbacks

Leave a Comment