Daily Nectar : நாமாக்கும் பண்ணிவிட்டோம் என்ற “ஈகோ”தான்!

த்ருப்தி என்றால் என்ன?
‘நாமாக்கும் பண்ணிவிட்டோம்’ என்ற ‘ஈகோ’தான்!
(தெய்வத்தின் குரல் – பாகம் 5)

மகா பெரியவா சொன்ன சொந்த சம்பவம் :

355

ஒரு ஊரில் (ஸ்ரீமடத்தின் ஆதரவில்) அன்னதானம் செய்தது. ரொம்பப் பேர், ஏழைகள், வயிறாரச் சாப்பிட்டு விட்டு, மனஸ் குளிர்ந்து வாழ்த்திக்கொண்டு போனார்கள். (சமையல் வகைகள்) எல்லாம் நிறையப் பண்ணியிருந்தும், மூட்டை அரிசி வடித்திருந்தும், கொஞ்சங்கூட பாக்கியில்லாமல் எல்லாம் ஜனங்கள் வயிற்றுக்குப் போச்சே என்று ரொம்ப த்ருப்தியாக இருந்தது. த்ருப்தி என்றால் என்ன? ‘நாமாக்கும் பண்ணிவிட்டோம்’ என்ற ‘ஈகோ’தான்!

பாத்ரம், பண்டம் எல்லாம் தேய்த்து, அடுத்த ஊருக்குக் கிளம்பத் தயாராக இருந்த ஸமயம். அப்போது ஒரு பத்துப் பதினைந்து ஏழை ஜனங்கள் — ஸ்தீரிகள், குழந்தைகள் உள்பட — லொங்கு லொங்கு என்று ஓடிவந்து, “சோறு, சோறு” என்று கேட்க ஆரம்பித்ததுகள். எட்டு, பத்து மைல் தாண்டி எங்கேயோ இருக்கிறவர்கள். அன்னதான ஸமாசாரம் அவர்கள் காதுக்கு லேட்டாகத்தான் போயிருக்கிறது. உடனே, பாவம், வெய்யிலில் அத்தனாம் தூரம் ஓடி வந்திருக்கிறதுகள்! இங்கேயானால் பருக்கை சாதம் இல்லை! அண்டா, குண்டான் எல்லாம் வண்டியிலே ஏற்றிக் கொண்டிருக்கிறது! அப்போது அவர்களுக்கு உண்டான ஏமாற்றத்தைச் சொல்லிமுடியாது.

ஆயிரம் பேருக்குப் போட்டு ஏதோ நாம் ப்ரமாத உபகாரம் பண்ணிவிட்டோமாக்கும் என்று த்ருப்திப்பட்டது அத்தனையும் இந்தப் பத்துப் பதினைந்து பேருக்குப் பண்ணிய அபகாரத்தில் ஓடியே போய்விட்டாற்போலிருந்தது!

ஏதோ பழம், கிழம் கொடுத்து, சில்லறை கொடுத்து, அவர்களை ஸமாதானம் பண்ணி அனுப்பிவைத்தது. அவர்கள் ஸமாதானமானார்களோ இல்லையோ, இங்கே (தம்மையே குறிப்பிட்டு) ஸமாதானமாகவில்லை!’ பாவம்! வயிறார நல்ல சாப்பாடு கிடைக்குமென்று இந்தப் படைபதைக்கிற வெய்யிலில் இத்தனாம் தூரம் ஓடிவந்து குஞ்சும் குழந்தையும் பெண்களுமாக ஏமாந்து போச்சுகளே!’ என்று தானிருந்தது!’ ஆயிரம் பேர் சாப்பிட்டுவிட்டும் போனார்களே என்றால், நேற்றுவரைக்கும் அவர்களுக்கு நாமா போட்டோம்? நாளைக்கு நாமா போடப்போகிறோம்? அதே மாதிரி இன்றைக்கும் அவர்கள் எப்படியோ வயிற்றைக் கழுவிக் கொண்டிருப்பார்கள். ஆனால், ‘போடுகிறோம்’ என்று நாம் அக்ஷதை போட்டுக்கொண்டு கிளம்பினதால் தானே இந்தப் பத்துப் பதினைந்து பேர் வழக்கமாகத் தாங்கள் இருக்கிற இடத்தில் காய்ச்சிக் குடிப்பதை, அல்லது பிச்சை எடுத்துத் தின்னுவதை விட்டுவிட்டுப் பசியும் பட்டினியுமாய் வெய்யிலில் இத்தனாம் தூரம் ஓடிவந்து ஏமாந்து போகும்படி நேர்ந்திருப்பது? ஆக, கூட்டல், கழித்தல் பார்த்தால், உபகாரம் பெரிசா, அபகாரம் பெரிசா? ‘என்று தோன்றிற்று.

Article Courtesy:
http://www.kamakoti.org
https://dheivathinkural.wordpress.com


Today’s Nectar :

ego

‘நாம் தான் கார்யம் பண்ணி ஸாதிக்கிறோம்; அதனால் லோகத்தையே புரட்டி நல்லதாக்கி விடலாம்’ என்ற எண்ணம் கார்ய லோகத்தில் ஏற்படத்தானே செய்கிறது? அது ஒரு ‘ஈகோ’ (அஹங்கார எண்ணம்) தானே? அது முற்றிவிடாமல் ஒரு போடு போடவேண்டுமென்பதற்குத் தான் இந்த லோகத்தையெல்லாம் பண்ணியிருக்கும் பராசக்தி, எந்த நல்லதானாலும் அதிலேயும் கெடுதலாக ஏதாவது அம்சம் வந்து சேரும்படியாக வைத்திருக்கிறது போலிருக்கிறது. இப்படி இல்லாவிட்டால் “நாம் எவ்வளவெல்லாம் நல்லதாக சாதித்துவிட்டோம்!” என்ற ‘ஈகோ’ கர்த்தா என்கிறவனுக்கு ஏற்படத்தான் செய்யும் — மகாபெரியவா


Periyava… Parashakthi…

We have a never ending wish-list of what we “want” that we pester You with…
But, there is neither a wish nor a list of what we do not “need” that we seek from You…
Hence, here we are, overloading our hearts with so much ego, pride, jealously and greed without realizing the fact that we have virtually left no place for “You” to reside in us!

Periyava, bless us offloading what we do not “need” …
Periyava, bless us overloading Your “Smaranai” as that’s what we really “need”…


{ 4 Comments }

  1. haranaiya says

    What humility from the great one who lived the Advaitic experience every second of the day. That the Matam could not satisfy the hunger of the dozen or so who had arrived late, was used by Mahaperiyava to impart a penetrating lesson, “we can satisfy their momentary hunger…. not for ever “, is a teaching to all that it is divine grace and not man’s intellect or ego.
    Jaya Jaya Sankara Hara Hara Sankara .

  2. kalasam says

    only eswara or the Divine mother can fell so much compassion for all his created beings, or the reverse, one who feels like this cannot br anything but eswara himself.

Leave a Comment