எனக்கு எல்லாம் தெரியும்!

எனக்கு எல்லாம் தெரியும்!

டாக்டர் கல்யாணராமன் புகழ் பெற்ற் நரம்பியல் நிபுணர் என்பது உலகறிந்த விஷயம். அவர் பெரியவாளிடத்தே வைத்திருந்த அளவு கடந்த பக்தி பற்றியும் அனைவரும் அறிவார்கள். ப்ரதோஷமாமா பக்தி ஊட்டி வளர்ந்தவர் அவர். தான் மேல் படிப்புப் படிக்க லண்டன் சென்றபோது கூட பெரியவா உத்தரைக் கேட்டுத்தான் சென்றார்.

ஒருமுறை இவரிடம் சிகிச்சை பெறும் நோயாளியின் தாயார்,தான் பெரியவாளிடம் போய் அறுவை சிகிச்சைக்காக வேண்டிக்கொண்டு வந்த விவரத்தை டாக்டரிடம் சொன்னாள்.

”என் பொண்ணுக்கு இரண்டு நாளில் அறுவை சிகிச்சை பெரியவாதான் நல்லபடியா நடக்க அனுக்ரஹிக்கணும்.”

”அவளுக்கு சரியாகிவிடும் கவலைப்படாதே”

”அவளுக்கு மூளை சம்பந்தமான கோளாறு..மூளை என்கிறதால் கவலையாய் இருக்கு”

”நீ ஏன் கவலைப்படறே..எல்லாம் நல்லபடியா நடக்கும்”

டாக்டர் கல்யாணராமந்தான் செய்யப் போறார்”

கவலைப் படாதே”

”டாக்டர் பெரியவா பக்தர்..பெரியவா டாக்டர்கிட்டே ஒரு வார்த்தை சொன்னாத் தேவலை. டாக்டர் பெரியவா தரிசனத்துக்கு அடிக்கடி வருவார்ன்னு கேள்விப்பட்டிருக்கேன்”

”நீ சொல்லவே வேண்டாம் டாக்டர் எந்த ஆபரேஷன் செய்தாலும், என்னை ப்ரார்த்தனை செய்யாமல் ஆரம்பிக்க மாட்டார்”

இப்படி பெரியவா சொன்னதைக் கேட்ட அந்த அம்மாள் வீட்டிற்குக் கூடப் போகாமல் நேரே டாக்டரிடம் போய் பெரியவா சொன்ன விஷயத்தைச் சொன்னாள்.

டாக்டருக்கோ இன்பம் மேலிட்டால் கண்களில் ஆனந்தக் கண்ணீர்!

Dr Kalyanaraman emotionally narrates this incident:

”அப்படியா சொன்னார்?”

ஆமாம் நான் எந்த ஆபரேஷன் செய்தாலும் கை அலம்பும் சாக்கில் காலில் உள்ள செருப்பைக் கழற்றிவிட்டு பெரியவாளை அந்த நேரம் ப்ரார்த்தனை செய்வது வழக்கம். இதுவரை யாருக்கும் தெரியாது என் பழக்கம் பற்றி. என் பெற்றோர்,மனைவி யாரிடமும் சொன்னதில்லை. என் பணியாளர்கள் கூட செருப்பு மேல் தண்ணீர படாமல் இருக்கவே நான் செருப்பைக் கழற்றுவதாக
நினைத்திருக்கிறார்கள்…..ஆனால் தனக்குத் தெரியும் என்று பெரியவா எனக்கு உணர்த்தி விட்டார்!”

இப்படி உருகிச் சொன்ன டாக்டர் இதுவரை நடந்த அத்தனை ஆபரேஷனுக்கும் பெரியவா துணை தனக்கு இருந்தது அறிந்து மெய் சிலிர்த்தார்!

டாக்டர்தம் தகப்பனாருக்கு ஹார்ட் கோளாறு வந்தபோது, டாக்டர் ஸ்ரீமடத்திற்குச் சொல்லி பெரியவா பாதுகைகளை
அளிக்குமாறு வேண்டினார். பெரியவாளும் மனமிரங்கி தன் பாதுகைகளை அவருக்கு அனுப்பி வைத்தார். அந்த கண்டத்திலிருந்து அவர் தகப்பனார் மீண்டார்.அன்றிலிருந்து அவர் கடைசி காலம் வரை பாதுகைகளைத் தன் தலை மாட்டில் வைத்துக் கொண்டு உறங்குவதை
பாக்யமாகக் கொண்டிருந்தார்.

A full video interview of Dr Kalyanaraman can be viewed here:


{ 5 Comments }

  1. haranaiya says

    Blessed indeed was the doctor who had the blessings and protection of the “walking Kamakshi” in the guise of the Sage of Kanchipuram . I’m sure there are thousands of such inspirational stories of the devotees.
    Again I implore the ones responsible for bringing these out, to consider making them into DVDs.

Leave a Comment