Updated: Sri Sankara Jayanthi At Sri Matam

ஸ்ரீ சங்கர ஜெயந்தி

Note: This post is updated with a small video by Sri Ganesa Sarma’s on Sri Sankara Jayanthi

உலகத்திலே எல்லாவிதமான பிராணிகளும் இருக்கின்றன. அவைகளுக்குள்ளே மனிதனாகப் பிறந்தவன் மிக உயர்ந்தவன். அரிதரிது மானிடராய்ப் பிறத்தல் அரிது. ஆகையினாலே அரிதான மானிடப்பிறவி எடுத்த நாம் எல்லோறும் மிகவும் புண்ணியவான்கள். இந்த மனிதப் பிறவியிலே நாம் பெறவேண்டியது முக்கியமாக நான்கு பேர்களுடைய அருளாசி. மாதா, பிதா, குரு, தெய்வம் என்ற நான்கு பேர்கள். நம்முடைய தாய் தந்தையருடைய ஆசியைப் பரிபூர்ணமாக பெறவேண்டும். குருவினுடைய அருளைப் பெற வேண்டும். தெய்வத்தினுடைய அருளைப் பெற வேண்டும். இந்த நான்கு பேர்களுக்குள்ளே தாய் தந்தையர் நம்மிடையே இருக்கிறார்கள். அவர்தான் நமக்கு அருளாசி வழங்கிக்கொண்டே இருக்கிறார்கள்.

கைலாசத்திலே, தெற்கு நோக்கி ஞான உபதேசம் செய்து கொண்டிருக்கிற மூர்த்தி-தக்ஷிணாமூர்த்தி. அந்த தக்ஷிணாமூர்த்தியுடைய அருள் வடிவமாக-சிவனின் வடிவமாக-அவதாரமாக, காலடி ஷேத்திரத்திலே சுமார் இருபதாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு நம்முடைய பாரத தேசத்திலே, ஆதிசங்கரர் என்ற பெயருடன் அவதாரம் செய்தார் சங்கர பகவான். ஆகையினாலே, மூலகுரு-ஆதிகுரு தக்ஷிணாமூர்த்தி. அதே தக்ஷிணாமூர்த்தி வடிவமாக-சங்கரராக -ஆதிசங்கரர் தோன்றினார். அந்தக் குருபெருமானான ஆதிசங்கரருடைய அவதார உற்சவம் ஒவ்வோர் ஆண்டும் வருகிறது.வைகாச சுத்த பஞ்சமி என்பது வைகாசி மாதத்திலே சுக்ல பஞ்சமி யன்றைக்கு வருகிறது.

இன்று May 11th 2016 , ஸ்ரீ மடத்தில் ஸ்ரீ சங்கர ஜெயந்தி

sankara jayanthi
sankara jayanthi 2016 2 sankara jayanthi 2016 3 sankara jayanthi 2016 1


Vidyarthees from various Patasala all over India

sankara jayanthi 2016 Vidyarthees 1

sankara jayanthi 2016 Vidyarthees 2

sankara jayanthi 2016 Vidyarthees 3

sankara jayanthi 2016 Vidyarthees 4

sankara jayanthi 2016 Vidyarthees 5


ஹர ஹர சங்கர ஜய ஜய சங்கர

{ 9 Comments }

 1. NK says

  அவர் பிறந்தது வைகாசி, அதாவது, இரண்டாவது மாஸம். அது சுக்லபக்ஷம், இரண்டு பக்ஷங்களில் சுக்லபக்ஷம் ஒன்று, க்ருஷ்ணபக்ஷம் இரண்டு. ஆசார்யாள் ஜனனம் ஒன்றாவது பக்ஷம். அன்றைக்கு திதி பஞ்சமி. அதாவது, ஐந்து. ஆகவே, 2-1-5. அதையே தலைகீழாக்கி 5-1-2 என்பவற்றைக் கடபயாதி முறையில் குறிப்பிடும் அக்ஷரங்களைச் சேர்த்து அவருக்குப் பெயராக வைத்துவிட வேண்டும் என்று நினைத்தார்கள். அது ‘சரசர’ என்று (2625-ஐ) சொன்ன மாதிரி தெளிவாக அர்த்தம் தராத எழுத்துத் தொகையாக இருக்கப்படாது; “பல” என்று (32-ஐயும், பலனையும் ஒருங்கே குறிப்பதாகச்) சொன்னது போல் அர்த்தமுள்ள வார்த்தையாகவும், அதாவது வாஸ்தவத்திலேயே மநுஷர்களுக்கு வைக்கும் தெய்வப் பெயராகவும் இருக்கவேண்டும் என்றும் நினைத்தார்கள்.

  அப்படி ஸெலக்ட் பண்ணியதுதான் “சங்கர” என்பது.

  2-ம் மாஸம், 1-ம் பக்ஷம், 5-ம் திதி என்பதைத் திருப்பி 5-1-2 என்பதற்கான எழுத்துக்களைக் கொண்டுதானே இந்தப் பெயரை வைத்ததாகச் சொன்னேன்? அதெப்படி என்று பார்க்கலாம். ‘சங்கர’ என்பதில் மெய்யெழுத்தான ‘ங்’கை நீக்கிவிடவேண்டும். இந்த ஸங்க்யையில் எப்போதும் மெய்யெழுத்துக்கு வால்யூ கிடையாது. அதைத் தள்ளிவிட வேண்டும். அப்படிச் செய்தால் ச-க-ர என்று மூன்று எழுத்துக்கள் நிற்கின்றன. ‘ச’ என்பது ‘யாத்யஷ்ட’ பிரகாரம் ய-ர-ல-வ-ச என்று 5-ஐக் குறிப்பிடுகிறது. அதுவே பஞ்சமித் திதி. ‘க’ என்பது ‘காதிநவ’ வில் முதலாவது எழுத்து. அதனால் அது 1-ஒன்றாவது பக்ஷமான சுக்லபக்ஷத்தைக் காட்டுவது. ‘ர’ என்பது ‘யாத்யஷ்ட’ ப்ரகாரம் ய – ர என்பதாக 2. அதுதான் இரண்டாவது மாஸமான வைகாசி.

  பரமேச்வரன் இப்படியொரு ஸமயத்தில் போய்ப் பிறந்தாலே, தான் லோக சங்கரனாக விளங்கப் போவதற்குப் பொருத்தமாகப் பேர் வைப்பார்கள் என்று திட்டம் போட்டே அவதார தினத்தை அமைத்துக் கொண்டிருக்கிறான்!

  சங்கர ஜயந்தி எல்லா ஜயந்திகளிலும் விசேஷம்தான் என்று ‘ப்ரூவ்’ பண்ணுவதுபோல, ஜயந்தியே “சங்கர” என்று அமைந்திருக்கிறது!

  சங்கர ஜயந்தி; ஜயந்தியே ‘சங்கர’!

  • navEdaham says

   ஆஹா!

   ‘சங்கர’மே ஜெயந்தி! ஜெயந்தியே ‘சங்கர’!

   ஞான விளக்கிற்கு ஓர் அழ-
   கான விளக்கம்.

   ராம்! ராம்!

   ஜெய் குருதேவ்!

  • navEdaham says

   ஆஹா!

   காண கண்கோடி வேண்டும் – இங்கே
   ஞான காமகோடி ஆச்சார்யாளைக் காண…

   முதல் காமகோடி ஆச்சார்யாளாய் அமர்ந்தவர்
   அந்த ஆதிசங்கர ஆச்சார்யாள் அல்லவா!

   ராம்! ராம்!

   ஜெய் குருதேவ்!

 2. navEdaham says

  Why AdiSankara Jayanthi is superior to anything else? Explanation by Sri MahaPeriyava….

  ஸ்ரீ சங்கர ஜயந்திப் புண்ய காலத்துக்கு ஸமமாக எதுவுமில்லை.  இப்படி நான் சொன்னால், “ப்ரக்ருத விஷயம் (தற்போது எடுத்துக்கொண்டுள்ள விஷயம்) ஆசார்ய சரித்ரமானதால் அதை விசேஷமாக ஸ்தோத்ரிக்கத்தான் வேண்டும் என்பதற்காக ஒரேயடியாய் உசத்தி வைத்துச் சொல்கிறாரா? இல்லாவிட்டால் நாமெல்லாம் ஆசார்யாளின் ஸம்ப்ரதாயத்தில் தானே வந்தவர்கள் என்பதால் சொல்கிறாரா? அல்லது அவருடைய மடத்தில் அவருடைய பெயரை வைத்துக்கொண்டுதானே இவர் ஸ்வாமிகளாக ஊர் கூட்டிக் கொண்டிருக்கிறார் என்பதனால் சொல்கிறாரா?” என்று தோன்றலாம். அதாவது (ஸ்வய) அபிமானத்தால் தூக்கி வைக்கிறேனோவென்று தோன்றலாம்.

  இப்படிப்பட்ட காரணங்களுக்காக அந்த ஜயந்திக்கு நான் உயர்வு கல்பித்துச் சொல்லவில்லை. கல்பனையே இல்லை! மிகையோ, ஸ்தோத்ரமோ இல்லை! வாஸ்தவத்திலேயே அதற்கென்று இருக்கும் உயர்வினால்தான், ‘எல்லாப் புண்ய காலங்களிலும் நம்முடயை ஆசார்யாளின் ஜயந்திதான் பரம புண்ய காலம்’ என்று சொல்கிறேன். புண்ய காலங்கள் எவ்வளவோ இருக்கின்றன. சிவராத்ரி, கோகுலாஷ்டமி, ஸ்ரீராம நவமி, நரஸிம்ஹ ஜயந்தி, ஸரஸ்வதி பூஜை, விஜய தசமி, விநாயக சதுர்த்தி, ஸ்கந்த ஷஷ்டி, இன்னம் உத்தராயண புண்ய காலம், தக்ஷிணாயன புண்யகாலம் என்றெல்லாம் எத்தனையோ இருக்கின்றன. எல்லாமே உத்க்ருஷ்டமானவை (உயர்வு பொருந்தியவை) தான். என்றாலும் ஸ்ரீசங்கர ஜயந்திதான் ஸர்வோத்க்ருஷ்டமானது(எல்லாவற்றையும்விட உயர்வுபொருந்தியது) என்பது வாஸ்தவம்.எப்படி?

  மற்ற புண்ய காலங்கள் சொன்னேனே, வேதங்களாலேயும் புராணங்களாலேயும் அநேக சாஸ்த்ரங்களாலேயும் ஸித்தமான அந்தப் புண்ய காலங்களெல்லாம் தொன்று தொட்டு யுகங்களாக அநுஷ்டிக்கப்பட்டு வந்திருப்பவை. இந்தப் புண்ய காலம் (ஸ்ரீ சங்கர ஜயந்தி) அவற்றுக்கெல்லாம் ரொம்பவும் பிற்பாடுதான் உண்டானது. ஆனாலும் இதுவேஸர்வோத்க்ருஷ்டமானது என்றால் எப்படி?

  ஸரி, இந்தப் புண்ய காலம் எதற்காக உண்டாயிற்று?

  வேதங்களையும் புராணங்களையும் சாஸ்த்ரங்களையும் புனருத்தாரணம் பண்ணுவதற்காகத்தான்.

  இந்தப் புண்யகாலம் (ஸ்ரீ சங்கராவதாரம்) ஏற்படாமலிருந்திருந்தால் என்ன ஆகியிருக்கும்?

  பௌத்தம் முதலான மதங்களும், ஈச்வர பக்தியைச் சொல்லாத ஸாங்க்யம், மீமாம்ஸை போன்ற மதங்களும் தான் ஒரேயடியாகப் பரவியிருக்கும். அப்படிப் பரவியிருந்தால் அப்புறம் சிவராத்ரியும், ஸ்ரீராம நவமியும், மற்ற புண்ய காலங்களும் யார் கொண்டாடியிருப்பார்கள்? அத்தனை புண்ய காலங்களையும் அவைதிகம் அடித்துக் கொண்டு போயிருக்கும். ஏறக்குறைய அப்படிப்பட்ட கட்டத்தில் மற்ற எல்லாப் புண்ய காலங்களும் தத்தளித்துக் கொண்டிருந்தபோதுதான் இந்த ஒரு புண்ய காலம் ஏற்பட்டது! ஏற்பட்டு வேத வழியை மறுபடி நன்றாக நிலைநாட்டி அந்தப் புண்ய காலங்கள் அத்தனைக்கும் புத்துயிர் கொடுத்து அவற்றை நிலை நிறுத்திற்று! இன்றைக்கும் சிவராத்ரி, ஸ்ரீராம நவமி, கோகுலாஷ்டமி இத்யாதியை நாம் புண்ய காலங்களாகக் கொண்டாடுகிறோமென்றால் அதற்கு ஆசார்ய ஜயந்தி என்ற புண்ய காலம் ஏற்பட்டதுதான் காரணம். இந்த ஒரு ஜயந்தி இல்லையென்றால் எந்த ஜயந்தியுமே இல்லாமல் போயிருந்திருக்கும்! ஜயந்திகளையெல்லாம் ரக்ஷித்துக் கொடுத்த ஜயந்தியாக இருப்பது ஸ்ரீ சங்கர ஜயந்தியே என்பதால்தான் அதைப் புண்ய காலங்கள் அத்தனையிலும் விசேஷமானது என்றது!

  ஜய சப்தம் ஆசார்யாளோடு விசேஷமாகச் சேர்ந்து “ஜய ஜய சங்கர” என்று உலகமெல்லாம் முழங்குகிறதென்று சொன்னேன். அதில் இந்த ஜயந்தி விசேஷத்தையும் சேர்த்துக்கொள்ள வேண்டும்.

  Courtesy: kamakoti.org

 3. M.Narayanan says

  Very useful and informative video on Sankara Jayanthi by Sri Ganesa Sarma Maama! in the Tamil writeup, it is mentioned that Adi AcharyaL was born about twenty thousand years ago. As per Kanchi Kamakoti Peetham Sampradaayam, Adi Sankara was born about two thousand years ago. The correction may be suitably done. Hara Hara Shankara, Jaya Jaya Shankara!

Leave a Comment