சாச்சு

சாச்சு – என்ன இது?

பிரம்ம ஸ்ரீ சதாசிவ சாஸ்திரிகளின் செல்லப் பெயர்தான் இது!

ஊர் உலகிற்கெல்லாம் ‘சார்’ ஆனவர் அன்புத் தாய்க்கும் தந்தைக்கும், உறவினர்களுக்கும் ‘சாச்சு’தான். பந்த பாசங்களை அறவே துறந்த பரமஞானியான மகா பெரியவா கூட தன் பூர்வாசிரமத் தம்பியின் செல்லப் பெயரை மறக்கவே இல்லை. எப்பொழுது தம்பியைக் குறிப்பிட்டாலும் ‘சாச்சு’ என்றுதான் வரும்.

A Rare Photo of Sri Sivan Sar…20131108_164451~2‘என் தம்பி சாச்சு பிறவிலேயே மகான்’ – பெரியவா

சார் மிக அருமையான புகைப்படக் கலைஞர் மற்றும் கைதேர்ந்த ஓவியருமாவர் . கேன்வாஸ் போர்ட்ரைட் எழுதுவதில் வல்லுனர் சிவன் சார். அவர் வரைந்த மஹா பெரியவா படம் முடிகொண்டானில் ஒரு பக்தர் இல்லதிலிருந்து இதோ:

Sar Drawingசிவன் சார் வரைந்த மஹா பெரியவா படம்


ஸதாசிவப்ரம்மேப்யோ நம:

{ 2 Comments }

Leave a Comment