குரல் தொகுத்தவரின் குரல் – Part 3 (Final)

Let us listen to the “voice” of a great man who penned “Voice of God” (தெய்வத்தின் குரல் தொகுத்தவரின் குரல்).

We pay our homage to Sri Ra Ganapathi ( fondly known as “Anna” ) who attained siddhi on a Holy Sivarathri Day in 2012 . Among spiritual treatises bringing the words of a great Master to the world, “Deivathin Kural” has its own unique greatness and has no parallel!

Below is the final set of audio clippings with a poetic prologue and tamizh transcription by Sri Karthi.

PeriyavaAndSriRaGa

ஸ்ரீ ரா. கணபதி – அண்ணா

ஸ்ரத்தாஞ்சலி சிவனுக்கா? சிவசுதனுக்கா?
இருவருக்குமே…

எப்படி?

வெல்லப் பிள்ளையாரைக் கிள்ளி, அவருக்கே நெய்வேத்தியம்…
அவர் எழுத்து கொண்டு அவருக்கே செய்யும் பூசை…

மையெழுத்தா அவை? இல்லை…

உயிர் கரைத்து, மெய் கரைத்து, உயிர் மெய் கரைத்து எழுதிய எழுத்துக்கள்…

அவ்வை இன்று என்ன பாடுவாள்?

கோடாயுதத்தால் கொடுவினை களைந்தே – என்றா? அல்ல…
பேனாயுதத்தால் கொடுவிடினை களைந்தே…

குருவடிவாகி குவலயம் தன்னில் திருவடி வைத்து திறம் இது பொருள் என…

எத்தனையோ குருவரர்கள்…

அவர்களுக்கு அண்ணா செய்த பூசை…
இன்றோ சிவராத்திரி…சிவபூசை…
அவர் எழுத்துக்கள் மந்திராக்ஷரங்கள்…

திரும்ப திரும்ப…’வா சிவா சிவா சிவா சி’ என்று வாசிப்போம்…

அண்ணாவை அண்ணாந்து பார்த்து வணங்குவோம்…

தெய்வத்தின் குரல் பெரியவா

ஜி: ‘தெய்வத்தின்  குரல்’ – தொகுக்கணும்  ன்னு எப்படி ஐடியா  வந்தது?

ஸ்ரீ ராக: வானதி செட்டியார்  தான் சொன்னார். கல்கில  வாரா வாரம் ஒரொரு
அருள்வாக்கு போட்டது.  அதை புஸ்தகமா போடலாம்  ன்னு பெரியவா கிட்டேயே   போய் கேட்டோம்.  போய் பண்ணு ன்னா.

ஜி: ஆனா, அப்போ வந்து,  இது மாதிரி, ஏழு  வால்யூம் வரும்  அப்டிங்கற கற்பனை கூட  இல்லே?

ஸ்ரீ ராக: ஒரு ஐடியாவும்  இல்லே…என்னமோ  சரி…எழுதிண்டே  போனோம்.
ஒரு வால்யூம் வந்தது.  இன்னொன்னு  வந்தது…இன்னொன்னு  வந்தது.

ஜி:  பெரியவா  முதல் வால்யூமை  முழுசா  படிச்சளா? பார்த்தாளா?

ஸ்ரீ ராக: மௌனம்

ஜி: தெய்வத்தின்  குரல்  ன்னு பேர்  வெச்சதுக்கு  ஏதாவது சொன்னாளா? COMMENT  அடிச்சாளா?

ஸ்ரீ ராக: ஒண்ணும் சொல்லலை.

ஸ்ரீ முகம் பெரியவா

ஜி: பெரியவா 70’s ல ஒரே ஒரு ஸ்ரீமுகம் கொடுத்து இருக்கா. 68-69 க்க அப்புறம் ஸ்ரீ முகம் கொடுக்கறதையே நிறுத்திட்டா…

ஸ்ரீ ராக: கொடுக்கறது  இல்லே…

ஜி: ஒரே ஒரு ஸ்ரீமுகம் 75 லையே என்னமோ கொடுத்து  இருக்கா…

ஸ்ரீ ராக:  அப்படியா? யாருக்கு கொடுத்தா?

ஜி: உங்களுக்குத்  தான்…மீரா புஸ்தகத்துக்கு கொடுத்தா…

ஸ்ரீ ராக:  ஆமாமாமா…(சிரிக்கிறார்)…வாஸ்தவம்…

ஜி: நான் இப்போ  எல்லா ஸ்ரீமுகத்தையும் கலெக்ட் பண்ணிண்டு இருக்கேன். அதுல பார்த்தா ஆச்சிரியமா இருந்தது.

ஜி: சமஸ்கிருதத்திலே ஒரு ஸ்லோகமா கொடுத்து இருக்கா…

ஸ்ரீ ராக: தன்னைவிட அவ ஆயிரம் பங்கு…பெரியவா சரித்ரம் போடறதுக்கு பதிலா மீரா போட்டோம். அதனால, சன்யாசிய எல்லாம் விட, ஆயிரம்
மடங்கு பெரிய ச்ருங்காரி…கண்ணனோட சிருங்காரம் பண்ணின மீரா ன்னு
சொல்லி இருப்பா…

அதுல ஒரு விஷயம் எனக்கு தோணும். மீரா பிருந்தாவனம் போறா. அங்கே ரூப கோஸ்வாமி இருக்கார். அவர் பொண்களை பார்க்கறது இல்லே ன்னா? அப்போ அவர் வந்து பிருந்தாவனத்திலே அவர் சொன்னார், பிருந்தாவனத்திலே, நாயகன்…இவரும் பெண்ணாத்தானே ஆகணும், பெரியவா சொல்றா அதுக்கு…

அப்படியே பெரியவா சொன்னதை நான் போட்டு இருப்பேன்…கோபிகா ஸ்திரீகளோட ஜனனாத்ரீ…ஜனன இது. இங்கே எவ்ளோ புருஷா இருக்கா, எல்லாருக்கும் கல்தா கொடுத்து அனுப்புன்னாளாம். கிருஷ்ணரைத் தவிர வேற யாரும் எங்க அந்தப்புரத்திலே வந்திருக்கா. அவாளை கல்தா கொடுத்து அனுப்பு…(சிரிக்கிறார்)…அப்படி சொன்னா மீரா ன்னு…

பிடிச்ச பெரியவா

ஜி: பெரியவாளை ஒங்க குருவா பாத்தேளா? எப்படி பாத்தேள்? பெரியவாளை என்ன CONCEPT ல நீங்க பாத்தேள்? அவர் ஒரு பெரிய சங்கராச்சாரியார்ன்னு பாத்தேளா? இல்லேன்னா, ஒங்களோட குரு ன்னு பார்த்தேளா?

ஸ்ரீ ராக: பிடிக்காம போனேன். அப்புறம் பிடிச்சது தான்..அவ்ளோதான்…

ஜி: நீங்க உடம்புக்காக பிரார்த்தனை பண்ணினதே கிடையாது? பெரியவாளும்
ஒண்ணும் சொன்னது இல்லே? உங்க மனசிலேயும் ஒண்ணும் தோணினது
கிடையாது…

நீண்ட மௌனம்…

ஸ்ரீ ராக:  மனசிலே நினைச்சுப்பேன்…ஒடம்பு சரியா போணும். பெரியவா
அனுக்ரஹம் வேணும். வாய் விட்டு கேட்டது இல்லே…

ஜி: இல்லே, ஒடம்பு இப்படி கஷ்டப்படறோமே, பெரியவா என்னடா நம்பளை
கவனிக்க மாட்டேன்ங்கறாளே…அப்டின்னு வருத்தம் எல்லாம் வந்தது இல்லியா?

ஸ்ரீ ராக: அந்த லவலேசம் கூட கிடையாது…

ஸ்வப்ன பெரியவா

ஜி: உங்களுக்கு  சொப்பனத்திலே  வந்திருக்களா, பெரியவா?

ஸ்ரீ ராக: வரவே இல்லை.  ஒரே ஒரு தரம் வந்தார். மந்திரம் சொன்னார். அது
மட்டும் எல்லாருக்கும் ஒரு மந்திரம். பிள்ளையாரையும்  சுப்பிரமணியரையும்.  எதிர்பார்க்கவே  இல்லை. திடீர் ன்னு சொன்னா.

கோவம் பெரியவா

ஜி: பெரியவா உங்களை  கோவிச்சிண்டு  இருக்காளா?

ஸ்ரீ ராக:  ஐயோ, ரொம்ப   திட்டு  திட்டு ன்னு திட்டி  இருக்கா…நடமாடும் தெய்வம் ன்னு  எல்லாம் ஏன் எழுதறே? நான்  தடமாடும் மனுஷன்  ம்பா…சிரிப்பு…

சாச்சு பெரியவா

ஜி: நீங்க சிவன் சார் ஐ தர்சனம் பண்ணி இருக்கேளா? சிவன் சார் ஐ தர்சனம் பண்ணி இருக்கேளா?

ஸ்ரீ ராக: ஆத்மா வோட ஒரு தரம் வந்து இருக்கார்.

ஜி: ஓ…

ஸ்ரீ ராக: கும்பகோணத்துல எங்கேயோ பாத்து இருக்கோம் அவர…

ஜி: ஓஹோ…

ஸ்ரீ ராக: பெரியவா ஒரு தரம்  சொன்னா…  “நான் வேஷம்…என் தம்பி தான் நிஜமான யோகி. அவரைப் போயி பாரு’ ன்னார்…

நானும் வேஷம் தான். எனக்கு நீங்களே போறும்…ன்னுட்டேன்…

சிரிப்பு….

ஜி:ஆத்மா மாமாவை பத்தி, சார் க்கு ரொம்ப நல்ல OPINION இருந்தது…
சொல்லி இருக்காராம்… ‘ஆத்மா…ரொம்ப உசத்தி ஆனவன்’… ‘உசத்தி ஆனவன் ன்னோ’, ‘உசத்தி ஆனவர் ன்னோ’… சொல்லி இருக்கா… நீ விஸ்வாஸமா இரு…அப்டின்னு…சார் னோடைய அனுமார் மாதிரி இருந்தவர்…சுப்புணி ன்னு…அவர் கிட்டே சொல்லி இருக்காராம்…  ஆத்மா ரொம்ப ஒசத்தி…நீ ரொம்ப விஸ்வாசமா இரு… ன்னு சொன்னாராம்.

அவர்  ஆத்மா மாமாவை பாத்தார்ன்னா, டப் ன்னு ஒரு நமஸ்காரத்தை
பண்ணிட்டு போயிடுவார்… சார் சொல்லி இருக்கார் ன்னு…  அதே மாதிரி, நீங்க,எனக்கு வேஷமே போறும்…எனக்கு வேற ஒண்ணும் வேண்டாம் ன்னு
சொல்லிட்டேளா, பெரியவா கிட்டே…

முற்றும்

{ 1 Comment }

Leave a Comment