எல்லாம் அறிந்த அமைதியே போற்றி !

calmlysittingperiyava

(A Rare Photo)

எல்லாம் அறிந்த அமைதியே போற்றி !

முந்தி என்ன, பிந்தி என்ன என்று தெரியாமல் கஷ்டம் வருகிற சமயத்தை மட்டும் பார்க்கிறோம். அம்பாளுக்குக் கருணை இருந்தால் ஏன் கஷ்டம் வருகிறது என்று கேள்வி போடுகிறோம். முந்தி நாம் செய்த கர்மம், பிந்தி நமக்கு இந்த கஷ்டத்தாலேயே வரப்போகிற நன்மை இவை மட்டும் தெரிந்துவிட்டால் நாம் இப்படிச் செய்யமாட்டோம். அது தெரியாதபடி மனிதனை வைத்திருக்கிறாள். அதுவும் அவள் விளையாட்டுத்தான்.

இதெல்லாம் தெரியாதபோதே மநுஷ்யனுக்கு இத்தனை, ஆணவம், அகங்காரம் இருக்கிறதென்றால் திரிகாலமும் தெரிந்தால் இவனுடைய அதிக்ரமத்துக்கு எல்லையே இல்லாமல் போய்விடும். இவன் அடங்கிக் கிடக்கவேண்டும் என்றே இப்படி வைத்திருக்கிறாள். ஆனால் இந்த ஸ்திதியிலும் கூட ‘நமக்கு முந்தியும் தெரியவில்லை. பிந்தியும் தெரியவில்லை’ என்பதையாவது நாமே தெரிந்து கொள்ளலாம். முக்காலமும் தெரிந்த மகான்கள் சொல்வதை நம்பலாம்.

Article Courtesy: Deivathin Kural – Volume 1 : இன்னல் தருவதும் அவள் இன்னருளே !


***For Sri MahaPeriyava 108 Potri, Click Here.

{ 8 Comments }

 1. Meenakshi Ramamoorthi says

  Periyava reveals Himself as Ambal, if you carefully listen from 3.30 minutes to 3.45 minutes.

  Periyava nin paadam charanam.

 2. VP says

  அய்யனே.. இன்று காலை இந்த கேள்வி என்னுள் வந்தது? ஆஹா பதில் இதோ ..

  பாபங்கள் நிறைய செய்துவிட்டேனா எனக்கு ஏன் இந்த நிலை? மனநிம்மதி வேண்டும் அய்யா என்று பிரார்த்தனை…

  மகானின் வார்த்தைகள் இதற்கு பதிலை தந்துவிட்டது ..

  அய்யனே என்னுள் நின்று காப்பாய் .. எனக்கு நீர் தான் உற்றார் உறவினர் பெற்றார் பெம்மானே ..

Leave a Comment