எட்டிப் பார்க்க வேணும், பெரியவா!

Periyava-PurnaKumbmam

எட்டிப் பார்க்க வேணும், பெரியவா – எம்மைக்
கிட்டே அழைக்க வேணும், பெரியவா!

தட்டுத் தடுமாறியே, பெரியவா – நானும்
முட்டி அழுகிறேனே, பெரியவா!

பட்டுப் படாமலே, பெரியவா – எனக்கு
எட்டி இருப்பதேனோ, பெரியவா?

கட்டுக் கடங்காமல், பெரியவா – என்பாவம்
கொட்டிக் கிடக்குதோ, பெரியவா!

கட்டி இழுக்குதே, பெரியவா – புலனைந்தும்
சட்டம் போல் நெரிக்குதே, பெரியவா!

ஒட்டி உறவாடும், பெரியவா – என்வினையின்
கட்டு அவிழ்க்க வேணும், பெரியவா!

பெட்டி, குட்டி உலகம், பெரியவா – அங்கென்னை
விட்டு விடாது காப்பீர், பெரியவா!

தொட்டுப் பார்க்க வேணும், பெரியவா – என்னுள்ளம்
முட்டும் மாசு நீங்க, பெரியவா!

இரட்டையில்லா  ஒன்றே, பெரியவா – எந்தன்
சட்டைக்குள் இருப்பதாரோ, பெரியவா?

சுட்டிப் போகும் வினையே, பெரியவா – உந்தன்
மட்டு மீறும் கருணையால், பெரியவா!

கொட்டிலில் அடைந்தாலும் பெரியவா – தாய்ப்பசு
குட்டி மறக்கலாமோ, பெரியவா?

எட்டுக் கோடி ஜன்மம், பெரியவா – உம்பக்தியால்
கட்டி போடும் எம்மை, பெரியவா!

விட்டு விடாமல் நீரும், பெரியவா – என்நெஞ்சில்
கிட்டி இருக்க வேணும் பெரியவா – என்றென்றும்
கிட்டி இருக்க வேணும் பெரியவா!


Thanks to navEdaham – Ardent Devotee of Periyava and Sri Sivan SAR And a disciple of Triplicane Periyava for these beautiful verses on HIM.

Periyava Poem


{ 10 Comments }

 1. Dr Ravi Ramamurthi says

  Touching! From the very depth of my soul and it is also what I want to say you have put it emphatically to Him

 2. Meenakshi Vanchinathan says

  Nethu thaan nenuchunden that i’m helpless Periyava epidiyavathu neenga thaan anugraham pannanumu.. Inniku intha song padikiren.. Periyava saranam.

 3. navEdaham says

  Seems, Periyava need not see us. Periyava’s upanyasam on the occasion of KumbabishEkam of Madurai Sri Meenakshi Temple, have quoted ‘MeenalochanA’, a ‘nama’ from Sri Lalitha SahasrAnAmam, indicating Sri Meenakshi. Periyava said, “…why should we expect Meenakshi to see us with her eyes? If we see her with our eyes is more than enough. Because it is She who resides within us & that’s the reason we see…”

  Seems why should we expect Periyava to see us? Or call us?
  If we see Periyava,
  say about Periyava,
  sing about Periyava,
  call Periyava,
  think about Periyava &
  even read like these about Periyava….
  Is it not enough?

  Is it not Periyava, You’re within us to see, speak, think…?

  Still our minds long to have Your darshan…
  Read about You leela…
  Don’t know, why?

  Only You, Periyava, have to bless us with some understanding…

  Ram. Ram.
  Jai GuruDev!

 4. M.NARAYANAN says

  இதைவிட எளிமையான பிராத்தனை வேறென்ன வேண்டும்!

Trackbacks

Leave a Comment