அதுதாண்டா பெரியவா! அவர்தாண்டா பெரியவா!

355

அதுதாண்டா பெரியவா! அவர்தாண்டா பெரியவா!
அதுதாண்டா பெரியவா! அதனால்தான் பெரியவா!

சொல்லிலும் அவர் பெரியவா! செயலிலும் அவர் பெரியவா!
அடைந்திட்ட ஆனந்த நிலையிலும் அவர் பெரியவா!
(அதுதாண்டா பெரியவா!)

பிஞ்சுபாலன் ஆகிடினும் பெருங்கிழவன் ஆகிடுனும்
கொஞ்சும் மொழி பேசிடுவார்! நெஞ்சமெல்லாம் நிறைத்திடுவார்!
(அதுதாண்டா பெரியவா!)

போட்டிபோட வந்திடும் போக்கத்த மனிதரையும்
வேட்டையாடி ஜெயிக்காமல், கொண்டாட வைத்திடுவார்
(அதுதாண்டா பெரியவா!)

பார்வேந்தர் வந்தாலும் பாலாக ஓடினாலு மொரு
பஞ்சாதி சொல்லிவிடும் வேதியரின் இடம் செல்வார்!
(அதுதாண்டா பெரியவா!)

சாத்திரத்தை எரித்திட்ட சாயம்போன மனிதரையும்
சத்தியத்தின் ஜோதியாக ஜெயித்திட்டப் பேரன்பர்!
(அதுதாண்டா பெரியவா!)

அனுட்டானம் செய்திடவே அனைத்துவழி சொல்லிடுவார்-ஒரு
துணுக்கானும் செய்திடுவோம், தும்பைப்பூப் போல் நாமே!
(அதுதாண்டா பெரியவா!)

ஏடுகளை கரைத்திட்ட வீறுகொண்ட வித்வானும்
ஏறிட்டு அளக்காத கடல் ஞானம் பெரியவா!
(அதுதாண்டா பெரியவா!)

கூடவே போனாலும் குறையே நாம் சொன்னாலும்
கூசாமல் நமக்கருளும் காமாக்ஷிப் பெரியவா!
(அதுதாண்டா பெரியவா!)

வீணே நாம் கிடந்தாலும் வீணாகிப் போனாலும் வீட்டில் அங்கே சேர்த்துவிடும் குருவாவார் பெரியவா!
(அதுதாண்டா பெரியவா!)

ஆங்காரம் வந்திடினும் ஆணவமாய் பேசிடினும் அன்புவைப்பார் பெரியவா! ஆனுக்ரஹிப்பார் பெரியவா!
(அதுதாண்டா பெரியவா!)

உபன்யாசம் செய்திடினும் ஊர்க்கதையே பேசிடினும்
உளமார கேட்டிடுவார் உண்மைப்பொருள் உணர்த்திடுவார்!
(அதுதாண்டா பெரியவா!)

குறைப்பட்டுக் கொண்டாலும் கூனிக்குறுகி நின்றாலும்
குறையற்ற மாந்தராக்கி கோபுரத்தில் ஏற்றிடுவார்!
(அதுதாண்டா பெரியவா!)

வாழைக்காய் பறித்தாலும் சிந்திடுமே சொட்டுப்பால்!
பெற்றவளே பிரிந்தாலும் சிதறாதே வைராக்கியம்!
(அதுதாண்டா பெரியவா!)

மனமில்லா மனிதரையும் மார்கத்தில் கொண்டுவரும்
குணமானப் பெரியவா! குருவானப் பெரியவா!
(அதுதாண்டா பெரியவா!)

சினங்கொண்ட சிறுமனதும் சீண்டிப்பார்க்கும் சிறுவரையும்
சீர்தூக்கி சீராக்கி சிஷ்யனாக்கும் பெரியவா!
(அதுதாண்டா பெரியவா!)

உன்னூர் போகா தடுத்திடுவார்! உத்தரவு தரமாட்டார்!
பின்னுயிர் போகா காத்து நின்ற அற்புதத்தை நினைந்தழுவோம்!
(அதுதாண்டா பெரியவா!)

தாய்மைக்கு தாயான பெரியவாளின் துணைக்கொண்டால்,
தருமங்கள் தேர்ந்திடுவோம்! சிரமங்கள் வென்றிடுவோம்!
(அதுதாண்டா பெரியவா!)

வேதத்தில் மயங்கிடும் வேதப்பொருள் அவர்தானே
வேண்டும் வரம் தந்திடவே வேண்டிவந்த அவதாரம்!
(அதுதாண்டா பெரியவா!)

பெரியவாவின் பேர்சொல்லி பெருமூச்சு விட்டாலும்,
பேர்சொல்லிக் கூப்பிட்டு பெருவரம் அவர் தந்திடுவார்!
(அதுதாண்டா பெரியவா!)

சந்திர சேகர சரஸ்வதி எனும்போதில்
சம்சார சாகரம் கடந்திடுமே அவர்தயவில்
(அதுதாண்டா பெரியவா!)

சொல்லிச்சொல்லிப் பார்த்தாலும் முடிந்திடுமோ அவர் பெருமை!
அள்ளியள்ளி குடித்தாலும் தீர்ந்திடுமோ கடல் நீரும்!
(அதுதாண்டா பெரியவா!)

பெரியவா என்றிடுவோம்! பெருவோடம் ஏறிடுவோம்!
பிறவிக்கடல் கடத்தியே நம் பெம்மானும் சேர்த்திடுவார்!
(அதுதாண்டா பெரியவா!)

தேயிந்திட்ட பிறையையும் சேர்த்திட்ட செம்மலவர்
தேராத என்னுயிரை சேர்த்திடட்டும் சேவடியில்!
(அதுதாண்டா பெரியவா!)


Thanks to navEdaham – Ardent Devotee of Periyava and Sri Sivan SAR And a disciple of Triplicane Periyava for these beautiful verses on HIM.


{ 15 Comments }

 1. Natarajan Viswanathan says

  May some one put a tune for this song and get it sung by a melodious voice and let this song be listened at every HOME and everywhere.
  Jaya jaya snkara.JAYA JAYA MAHA PERAVA.

 2. ஈச நேசன் மகஸ்ரீ says

  புவி கண்ட தெய்வம்
  போற்றுதல் இன்பம்
  செவியிசை கேட்கின்
  சேருமே இன்பம்

  மகஸ்ரீ.

 3. K. Srinivasan says

  Very delightful, happy, true, meaningful & uplifting Tamil poem ; Don’t know the name of this awesome
  poet ; nor a photograph of this beautiful person ; but obviously, is a great composition appealing to
  everyone. Well done !
  K. Srinivasan, Toronto.

 4. Sentha Ramaswamy says

  What a beautiful verses…came from a heart and touched many hearts….Hara Hara shankara…Jaya jaya shankara….

 5. haranaiya says

  A simple but powerful poem, in easy to understand Tamil. Maha Periyava has touched so many in different ways by his simple, exemplary life ,of control and adherence to the scriptures. Years from now scholars and commoners alike will be puzzled that such a perfect one walked the earth, breathing the same air as you and I. He only shed his mortal coil but lives on at his Brindhavanam pulsating and vibrating with the overpowering love he had for all of life.
  Jaya Jaya Sankara Hara Hara Sankara.

 6. M.Narayanan says

  Devotion oozes in every stanza. Thanks for sharing. Maha Periyava ThiruvadigaLe CharaNam! Hara Hara Shankara, Jaya Jaya Shankara!

 7. Kesavan says

  It is nice, but small suggestion

  How it will be, replacing sea water ( We can’t but sea would not dry ) with River Water ( We can drink ) .

 8. navEdaham says

  Aha! So many seems to be so much longing for Periyava… that’s why even these not-so-well written lines looks like a great work. It only reflects all your devotion for Periyava or Periyava’s karunyam or both.

  Humble Namaskaram to all of you….

  Namaskaram & Prayers to Periyava to be worthy…
  தேயிந்திட்ட பிறையையும் சேர்த்திட்ட செம்மலவர்
  தேராத என்னுயிரை சேர்த்திடட்டும் சேவடியில்!

  Ram. Ram.
  Jai GuruDev!

 9. Anantha narayanan Sundarrajan. says

  A very good song by a true devotee. To be recitated by every devotee of MAHA PERIAVA daily in all sandhi’s.JAYA JAYA SANKARA HARA HARA SANKARA.

 10. SRINIVASANKRISHNAVENI {SKV} says

  100% CORRECT HE IS ALWAYS IN OUR MIND , HE LIVED A SIMPLE LIFE TILL THE END. HIS EXPECTATIONS IS NOTHING ,HE NEVER USED ANY LUXURY ITEMS , HE DID NO MIRACLE ,HE DIDN’T DECEIVE HIS BAKTHAAS.
  JAYA JAYA SHANKARA
  HARA HARA SHANKARA

Leave a Comment